ஜோதிடம்
திருக்கதைகள்
Published:Updated:

மேஷம் - சோபகிருது தமிழ்ப் புத்தாண்டு ராசி பலன்கள்

தமிழ்ப் புத்தாண்டு பலனகள்
பிரீமியம் ஸ்டோரி
News
தமிழ்ப் புத்தாண்டு பலனகள்

ஆண்டு தொடக்கம் முதல் 25.8.23 வரை மற்றும் 20.12.23 முதல் வருடம் முடியும் வரை உங்கள் ராசிக்கு 11-ல் சனிபகவான் அமர்கிறார்.

மேஷம் - சோபகிருது தமிழ்ப் புத்தாண்டு ராசி பலன்கள்

ஆர்ப்பாட்டமின்றி சாதிப்பவர் நீங்கள். உங்கள் ராசிக்குப் பத்தாவது ராசியில் சோபகிருது வருடம் தொடங்குகிறது. ஆகவே உங்களின் சாதனைகள் தொடரும். நிர்வாகத்திறன் அதிகரிக்கும்.

வைகாசி, ஆனி மாதங்களில் திடீர் திருப்பங்கள் ஏற்படும். பூர்வீகச் சொத்து கைக்கு வரும். கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். குழந்தைப் பாக்கியம் இல்லாதவர்களுக்கு வாரிசு உருவாகும். ஆடி மாதத்தில் பிள்ளைகளின் உடல் நலனில் அக்கறை தேவை. மகள் திருமணத்துக்காக கடன் வாங்க நேரிடும். ஆனி, ஆவணி மாதங்களில் வீட்டில் சுபநிகழ்ச்சிகள் நடக்கும். மனக்குழப்பங்கள் நீங்கும். வரவேண்டிய பணம் வந்துசேரும். தடைப் பட்டிருந்த மகளின் திருமணம் இப்போது கூடிவரும்.சொத்துப் பிரச்னைகளில் அனுகூலமான நிலை உருவாகும். பழைய சிக்கல்களைப் புதிய கோணத் தில் அணுகி வெற்றி காண்பீர்கள்.

மார்கழி, தை, மாசி மாதங்களில் பணவரவு அதிகரிக்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். புது முடிவுகள் எடுப்பீர்கள். சிலருக்கு நல்ல வேலை கிடைக்கும். வெளிநாட்டிலிருக்கும் உறவினர், நண்பர்களால் திடீர் திருப்பங்கள் ஏற்படும். விலையுயர்ந்த அணிகலன்கள் வாங்குவீர்கள். சிலருக்கு அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும்.

22.4.23 முதல் வருடம் முடியும் வரை ராசியில் அமர்கிறார் குரு. ஆரோக்கியத்திலும் பேச்சிலும் கவனம் தேவை. தம்பதிக்கு இடையே விட்டுக் கொடுத்துச் செல்லவும். சில செலவுகள் இரட்டிப்பாக வாய்ப்பு உண்டு. சிக்கனம் அவசியம். இரவு நேரப் பயணம் செய்ய வேண்டாம்.

ஆண்டு தொடக்கம் முதல் 25.8.23 வரை மற்றும் 20.12.23 முதல் வருடம் முடியும் வரை உங்கள் ராசிக்கு 11-ல் சனிபகவான் அமர்கிறார். உத்தியோகப் பிரச்னைகள் நீங்கும். வேலை சம்பந்தப்பட்ட வழக்கில் வெற்றி கிட்டும். பெற்றோர், உடன்பிறந்தோருடன் இருந்த பிணக்குகள் நீங்கும். 26.8.23 முதல் 19.12.23 வரை சனி 10-ம் வீட்டில் அமர்வதால் கௌரவப் பதவிகள் தேடி வரும். வெளிநாட்டினரால் திடீர் திருப்பங்கள் ஏற்படும். தடைப்பட்ட வேலைகளை முழுமூச்சுடன் முடிப்பீர்கள்.

வருடப் பிறப்பு முதல் 7.10.23 வரை உங்கள் ராசிக்குள் ராகு நிற்பதால் தலைவலி, மயக்கம், குமட்டல், நாக்கில் கசப்பு என வந்து நீங்கும். முன்கோபமும் ஏற்படலாம். யோகா, தியானத்தில் ஈடுபடுவது சிறப்பு. 7-ல் கேது நிற்பதால் கணவன்-மனைவிக்குள் பிரச்னைகள் எழலாம். 8.10.23 முதல் வருடம் முடியும் வரை உங்கள் ராசிக்கு 6-ல் கேதுவும், 12-ல் ராகுவும் நுழைவதால் தைரியம் கூடும். இளைய சகோதர வகையில் பிணக்குகள் நீங்கும். நாடாளுபவர்களின் நட்பு கிடைக்கும். திடீர் பணவரவு உண்டு.

2.11.23 முதல் 30.11.23 வரை சுக்ரன் 6-ல் மறைவதால் கணவன்-மனைவிக்குள் கருத்து மோதல் எழும்; வாகன விபத்து வந்து நீங்கும். தங்க நகைகள் தொலைந்து போகாமல் பார்த்துக் கொள் ளுங்கள். 17.11.23 முதல் 27.12.23 வரை செவ்வாய் 8-ம் வீட்டில் அமர்வதால் உறவினர்களுடன் மோதல், செலவினங்கள், பயணம் உண்டாகும்.

வியாபாரிகளுக்குக் கணிசமான லாபம் உண்டு. கம்யூனிகேஷன், புத்தகம், உணவு போன்ற புதுத் துறைகளில் கால் பதிப்பீர்கள். வைகாசி, ஆவணி மாதங்களில் புது முதலீடுகள் செய்து கடையை விரிவுபடுத்துவீர்கள். வாடிக்கையாளர்கள் அதிகரிப்பார்கள். குருவின் நிலை சரியில்லை ஆதலால், பங்குதாரர்களின் ஒத்துழைப்பு சுமாராக இருக்கும். கொடுக்கல்-வாங்கல் சம்பந்தமாக எதிலும் கையெழுத்திட வேண்டாம். புதிய நபர்களை நம்பி பெரிய முடிவுகள் எடுக்கவேண்டாம்.

உத்தியோகஸ்தர்களுக்கு வைகாசி, ஆனி, ஆவணி மாதங்கள் சாதகமாக இருக்கும்; வேலைச்சுமையும் அதிகரிக்கும். அவ்வப்போது சில ஆதங்கங்களும் உண்டாகும். மார்கழி, தை மாதங்களில் புது வாய்ப்புகள் தேடி வரும். சம்பள பாக்கி கைக்கு வரும். கணினித் துறையினர், கூடுதல் நேரம் வேலை பார்க்க வேண்டியிருக்கும். வீண் பழிகள் ஏற்படும்; எனினும் அதிலிருந்து மீண்டு வருவீர்கள்.

மொத்தத்தில் இந்தப் புத்தாண்டு உங்களை திட்டமிட்டு செயல்படவைக்கும்; சிக்கனத்தின் அவசியத்தை உணர்த்துவதாகவும் அமையும்.

பரிகாரம்: கோவை மாவட்டம், அன்னூர் - தென்னம்பாளையம் சாலையில் சுமார் 2 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது குமாரபாளையம். இங்கு அருளும் வட்டமலை ஆண்டவரை கார்த்திகை நட்சத்திர தினங்களில் தரிசித்து வழிபட்டு வாருங்கள்; செல்வம் பெருகும்.