ஜோதிடம்
திருக்கதைகள்
Published:Updated:

கடகம் - சோபகிருது தமிழ்ப் புத்தாண்டு ராசி பலன்கள்

தமிழ்ப் புத்தாண்டு கடக ராசிபலன்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
தமிழ்ப் புத்தாண்டு கடக ராசிபலன்கள்

வருடம் பிறக்கும்போது 4-ம் வீட்டில் கேது நிற்பதால் முக்கிய ஆவணங்களில் கையெழுத்திடும் போது அதீத கவனம் தேவை.

சுற்றம் நட்புக்காக உழைப்பவர் நீங்கள்; பொது நலம் பேணுபவர். உங்கள் ராசிக்கு 7-வது ராசியில் இந்த தமிழ்ப் புத்தாண்டு பிறப்பதால், பாதியிலேயே நின்ற பல வேலைகள் இனி பூர்த்தியாகும். திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்புகள் கிட்டும். வி.ஐ.பிகள் அறிமுகமாவார்கள்.

கடகம் - சோபகிருது தமிழ்ப் புத்தாண்டு ராசி பலன்கள்

உங்கள் ராசியை சந்திரன் பார்த்துக் கொண்டிருக் கும்போது புத்தாண்டு பிறக்கிறது. ஆகவே மன இறுக்கம் குறையும். எதிலும் திட்டமிட்டு செயல் படுவீர்கள். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். பழைய சிக்கல்களுக்குத் தீர்வு கிடைக்கும். செலவுகள் குறையும். தம்பதிக்கு இடையே நெறுக்கம் அதிகரிக்கும். சுப நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்துவீர்கள்.

வைகாசி, ஆவணி, புரட்டாசி மாதங்களில் வெளி நாட்டில் உள்ள நண்பர்கள் உறவுகளால் திடீர் திருப்பம் உண்டாகும். அரசுக் காரியங்கள் வெற்றி அடையும். பிள்ளைகளால் மதிப்பு கூடும். சொந்த வீடு வாங்கும் முயற்சி வெற்றி பெறும். குடியிருக்கும் வீட்டை விரிவுபடுத்துவீர்கள்.

புத்தாண்டின் தொடக்கத்தில் குரு 9-ல் நிற்கிறார். ஏப்ரல் 21 வரையிலும் தேவைகள் பூர்த்தியாகும். சுப நிகழ்வுகளால் வீடு களைகட்டும். குலதெய்வப் பிரார்த்தனைகள் நிறைவேறும். 22.4.23 முதல் வருடம் முடியும் வரை குரு 10-ல் நிற்கிறார். வீண் பழி, விமர்சனங்கள் ஏற்படலாம். எவருக்காகவும் சாட்சிக் கையெழுத்து இடவேண்டாம். காசோலை தருமுன் பணம் கையிருப்பைக் கவனிப்பது நல்லது. தாயாருக்குச் சிறிய அளவில் சிகிச்சைகள் தேவைப் படும். தாய்வழி சொத்துப் பிரச்னை தலைதூக்கும்.

14.04.23 முதல் 25.8.23 வரை மற்றும் 20.12.23 முதல் வருடம் முடியும் வரை சனிபகவான் அஷ்டமத் துச் சனியாக வருவதால் எதிலும் பயம், போராட்டம் வந்து போகும். பணப்பற்றாக்குறை ஏற்படும். கணவன் - மனைவிக்குள் சிறு பிரிவு வந்து நீங்கும். வாகனத்தை இயக்கும்போது கவனம் தேவை. சிலர் உங்களைத் தவறாக வழிநடத்தலாம்; கவனம் தேவை. வழக்குகளில் அலட்சியம் வேண்டாம்.

26.8.23 முதல் 19.12.23 வரை 7-ல் சனி தொடர்வ தால் முன்கோபம், டென்ஷன், வந்து போகும். வாழ்க்கைத் துணையின் உடல் நலனில் கவனம் தேவை. பூர்வீகச் சொத்துப் பிரச்னைகள் எழும்.

வருடம் பிறக்கும்போது 4-ம் வீட்டில் கேது நிற்பதால் முக்கிய ஆவணங்களில் கையெழுத்திடும் போது அதீத கவனம் தேவை. தாயாருக்கு மருத்துவச் செலவுகள், வீண் வாக்குவாதங்கள் வந்துபோகும். வீடு கட்ட திட்டமிட்டால், போதுமான பணத்தை வைத்துக்கொண்டு செயலில் இறங்குங்கள். 10-ல் ராகு இருப்பதால் வெளிவட்டாரத்தில் மதிக்கப் படுவீர்கள். வி.ஐ.பிகளின் உதவி உண்டு. 8.10.23 முதல் வருடம் முடியும் வரை உங்கள் ராசிக்கு 3-ல் கேதுவும், 9-ல் ராகுவும் நுழைவதால், தெளிவான முடிவுகள் எடுப்பீர்கள். தந்தைக்கு உடல்நலக் குறைபாடு, அவருடன் வாக்குவாதம் வந்து செல்லும்.

19.1.24 முதல் 13.2.24 வரை சுக்ரன் 6-ல் மறைவதால் வேலைச்சுமை அதிகரிக்கும். கால் வலி, கழுத்து வலி, இறுமல் வந்துபோகும். கணவன்-மனைவிக்குள் கருத்து மோதல்கள் வந்து நீங்கும். சொந்த வாகனத்தில் அதிகாலைப் பயணங்களை தவிர்ப்பது நல்லது. 14.3.24 முதல் 13.4.24 வரை ராசிக்கு 8-ல் செவ்வாய் நிற்பதால் அடிக்கடி கோபப்படுவீர்கள். உடன்பிறந்தவர்களால் அலைச் சல், செலவுகள் இருக்கும்.

வியாபாரத்தில் சில புதிய அனுபவங்கள் கிடைக்கும். சித்திரை, வைகாசி மாதங்களில் கடையை வேறு இடத்திற்கு மாற்றுவீர்கள். தேங்கிக் கிடந்த சரக்குகளைத் தள்ளுபடி விலைக்கு விற்று முடிப்பீர்கள். பங்குதாரர்கள் வளைந்துகொடுத்து போவார்கள். ஆவணியில் புது ஒப்பந்தம் தேடி வரும். கார்த்தகை, பங்குனி மாதங்களில் பழைய பாக்கிகள் வசூலாகும். இரும்பு, உணவு, ரியல்எஸ்டேட், பதிப்பகம், சிமெண்ட் வகைகளால் லாபம் உண்டு.

உத்தியோகஸ்தர்களே! ஆவணி, கார்த்திகை மாதங்களில் புது வாய்ப்புகள், பொறுப்புகள் தேடி வரும். வேற்றுநாட்டு நிறுவனங்கள் மூலம் ஆதாயம் அடைவீர்கள். அரசுப் பணியாளர்கள் அலுவலக ரகசியங்களை வெளியிடாமல் இருப்பது நல்லது. பங்குனி மாதத்தில் பதவி உயர்வு உண்டு.

மொத்தத்தில் இந்தப் புத்தாண்டு தன்னம்பிக்கை யால் உங்களைச் சாதிக்கவைப்பதாக அமையும்.

பரிகாரம்: மதுரை அருகே சிம்மக்கல் எனும் ஊரில் உள்ள ஆதிசொக்கநாதர் கோயிலில் அருளும் பைரவரை, அஷ்டமி தினங்களில் தரிசித்து தீபமேற்றி வழிபட்டு வாருங்கள்; சங்கடங்கள் நீங்கி வாழ்க்கை செழிக்கும்; புதிய பாதை புலப்படும்.