
இந்த ஆண்டு தொடக்கம் முதல் 25.8.23 வரை மற்றும் 20.12.23 முதல் வருடம் முடியும் வரை சனி 6-ம் வீட்டிலேயே தொடர்வதால் பெரிய மனிதர்கள், கல்வியாளர்களின் நட்பு கிடைக்கும்.
சொந்த உழைப்பால் முன்னேறும் திறமை சாலி நீங்கள். உங்கள் ராசிக்கு 5-வது ராசியில் புத்தாண்டு பிறக்கிறது. பழைய பிரச்னைகள், வழக்குகள், கடன் தொல்லைகளில் இருந்து விடுபடுவீர்கள். பிள்ளை வரத்துக்காகக் காத்திருந்த அன்பர்களுக்குக் குழந்தைப் பாக்கியம் கிடைக்கும்.

தம்பதிக்கு இடையே அந்நியோன்யம் கூடும். மகனுக்கு நல்ல இடத்தில் பெண் அமையும். குழப்பங்கள், வீண் டென்ஷன் விலகும். வீட்டில் சித்திரை, வைகாசி, ஆனி மாதங்களில் சுப காரியங்கள் கூடிவரும்.
21.4.23 வரை குரு பகவான் 7-ல் தொடர்வதால் பிள்ளைகளால் பெருமை அதிகரிக்கும். மகனுக்கு நல்ல வேலை கிடைக்கும். குலதெய்வப் பிரார்த் தனையை நிறைவேற்றுவீர்கள். பூர்வீகச் சொத்தை உங்கள் ரசனைக்கேற்ப புதுப்பிப்பீர்கள். விலை உயர்ந்த ஆபரணங்கள் வாங்குவீர்கள். 22.4.23 முதல் வருடம் முடியும் வரை ராசிக்கு 8-ல் சென்று குரு மறைவதால் வீண் அலைச்சல், இனம் புரியாத கவலை, ஒருவித பய உணர்வுகள் வந்து செல்லும். கர்ப்பிணிப் பெண்கள் நீண்ட தூரப் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. பூர்வீகச் சொத்தைச் சரியாகப் பராமரிக்க முடியவில்லையே என வருத்தப்படுவீர்கள்.
இந்த ஆண்டு தொடக்கம் முதல் 25.8.23 வரை மற்றும் 20.12.23 முதல் வருடம் முடியும் வரை சனி 6-ம் வீட்டிலேயே தொடர்வதால் பெரிய மனிதர்கள், கல்வியாளர்களின் நட்பு கிடைக்கும். எதிர்பாராத வகையில் பணவரவு உண்டு. தாழ்வு மனப்பான்மை நீங்கும். உள்ளத்தில் மலர்ச்சி கூடும். பழைய கடனைப் பைசல் செய்ய வங்கிக் கடன் உதவி கிடைக்கும். வழக்கில் நல்ல தீர்ப்பு கிடைக்கும்.
26.8.23 முதல் 19.12.23 வரை உங்கள் ராசிக்கு சனி 5-ல் நிற்பதால் பிள்ளைகளால் வீண் அலைச்சல், டென்ஷன் அதிகரிக்கும். கர்ப்பிணிகள் மருத்துவரின் ஆலோசனையின்றி எந்த மருந்தையும் உட்கொள்ள வேண்டாம்.
வருடம் பிறக்கும்போது 2-ல் கேதுவும், 8-ல் ராகுவும் அமர்ந்திருப்பதால் கணவன் மனைவிக்குள் சின்ன சின்ன மனஸ்தாபங்கள் வந்து போகும். 8.10.23 முதல் வருடம் முடியும் வரை உங்கள் ராசிக்குள் கேதுவும், 7-ல் ராகுவும் நுழைவதால், துரித உணவு வகைகள், உப்பு, காரம் ஆகியவற்றைத் தவிர்க்கவும்.
8.3.24 முதல் 1.4.24 வரை சுக்ரன் 6-ல் அமர்வதால் செலவுகள் அதிகரிக்கும். வாகனத்தை அதிவேகமாக இயக்க வேண்டாம். டிரைவிங் லைசன்ஸ், வண்டி இன்சூரன்ஸ் ஆகியவற்றைப் புதிப்பிக்க மறவாதீர்கள்.
வியாபாரிகளே! இதுவரையிலும் போட்டியாளர் களுக்கு ஈடு கொடுக்க முடியாமல் திணறினீர்கள். சிலரின் தவறான ஆலோசனையால் பல இழப்புகளைச் சந்தித்தீர்கள். இனி அந்த நிலை மாறும். உங்களின் திறமையால் லாபம் ஈட்டுவீர்கள்.
திறமைசாலிகளை வேலைக்குச் சேர்ப்பீர்கள். ஏற்ற இறக்கம் இருந்தாலும் இலக்கை எட்டிப் பிடிப்பீர்கள். பழைய சரக்குகளை சாமர்த்தியமாக விற்றுத் தீர்ப்பீர்கள். புதிய கொள்முதல் செய்வீர்கள். பாக்கிகள் வசூலாகும். நண்பர்கள், உறவினர்கள் வகையில் உதவி கிடைக்கும்; வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள்.
வைகாசி, தை மாதங்களில் திடீர் லாபம் உண்டா கும். தள்ளிப்போன ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். கம்ப்யூட்டர், ரியல் எஸ்டேட், ஏற்றுமதி-இறக்குமதி வகைகளால் நல்ல லாபம் அடைவீர்கள்.
உத்தியோகஸ்தர்களே! 22.4.23 முதல் குரு பகவான் 8-ல் அமர்வதால் சிறு சிறு அவமானங்களும், வேலைச்சுமையும் அதிகரிக்கும். சில தருணங்களில் வேலையை விட்டுவிடலாமா என்றுகூட ஆதங்கம் வந்து போகும். அடிக்கடி விடுப்பு எடுக்க வேண்டாம். சிலருக்கு விருப்பம் இல்லாத இடமாற்றம் ஏற்படலாம். அலுவலக ரகசியங்களையோ, மேலதிகாரி குறித்த விமர்சனங்களையோ வெளியே பகிர வேண்டாம்.
கணினித் துறையினரே! புதிய வேலைக்கு முயற்சி செய்ய வேண்டாம். இருக்கும் இடத்திலேயே நல்ல வாய்ப்புகள் உண்டாகும்.
மொத்தத்தில் இந்தப் புத்தாண்டு திடீர் வளர்ச்சி யையும் பிள்ளைகள் மூலம் நிம்மதியையும் தருவதாக அமையும்.
பரிகாரம்: புதுக்கோட்டையிலிருந்து சுமார் 40கி.மீ. தொலைவில், பொன்னமராவதிக்குச் செல்லும் வழியில் உள்ளது கொன்னையூர். இங்கு அருளும் மாரியம்மனை வெள்ளிக்கிழமைகளில் சென்று வணங்கி வாருங்கள். தடைகள் நீங்கும்; முன்னேற்றம் உண்டாகும்.