Published:Updated:

பிலவ வருடம் புத்தாண்டு ராசிபலன்கள் - கடகம்

கடகம்
பிரீமியம் ஸ்டோரி
கடகம்

துல்லிய பலன்கள் - எளிய பரிகாரங்களுடன்...

பிலவ வருடம் புத்தாண்டு ராசிபலன்கள் - கடகம்

துல்லிய பலன்கள் - எளிய பரிகாரங்களுடன்...

Published:Updated:
கடகம்
பிரீமியம் ஸ்டோரி
கடகம்

புனர்பூசம் 4-ம் பாதம், பூசம், ஆயில்யம்

எதையும் முதல் முயற்சியிலேயே முடிக்கும் ஆற்றல் கொண்டவர் நீங்கள். எப்போதுமே புரட்சிகரமான முடிவுகளை எடுப்பீர்கள். மூடிமறைத்துப் பேசுவது உங்களுக்குப் பிடிக்காது, நண்பர்களை அதிகம் நம்புவீர்கள். உங்களுக்கு இந்தத் தமிழ்ப் புத்தாண்டு எப்படிப்பட்ட பலன்களைத் தரப்போகிறது என்பதைப் பார்ப்போம்.

இந்தத் தமிழ்ப் புத்தாண்டு உங்களுக்கு 10-வது ராசியில் பிறப்ப தால் சவாலான காரியங்களைச் சாதாரணமாகச் செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் எப்போதும் ஏதேனும் ஒரு சிக்கல் எழும்பியதே, அந்த நிலை மாறும். கணவன் - மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். பண வரவு திருப்தி தரும். பிள்ளைகளின் நடவடிக்கைகளில் நல்ல மாற்றம் ஏற்படும். அவர்களின் ஆசைகளைப் பூர்த்தி செய்வீர்கள். முன்கோபம், வீண் டென்ஷன் விலகும். மகளுக்குச் சித்திரை, வைகாசி மாதங்களில் கல்யாணத்தைச் சிறப்பாக நடத்துவீர்கள். வாழ்க்கைத் துணையின் உறவுகளால் ஏற்பட்ட கலகம், செலவுகள் விலகும். வெளியூர்ப் பயணங்கள் திருப்தி தரும்.

வெளிவட்டாரத் தொடர்பு அதிகரிக்கும். தாயுடன் மனக் கசப்புகள் விலகும். அவரின் உடல்நிலை சீராகும். உடன்பிறந்தவர்களின் ஆதரவு கிட்டும். சொத்துப் பிரச்னைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பீர்கள். பழைய வீட்டுக்குப் பதிலாக புதிய வீடு வாங்குவீர்கள்.

நண்பர்கள், உறவினர்களின் அன்புத் தொல்லைகள் விலகும். ஆன்மிக ஈடுபாடு அதிகரிக்கும். தள்ளிப்போன குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள்.வெளிநாட்டுப் பயணம் தேடி வரும். சர்க்கரை நோய், மூட்டு வலி, நெஞ்சு வலி ஆகியவை விலகும். வாகன வசதி பெருகும்.

சிலரது தவறான ஆலோசனைகளால் பிரச்னைகளில் சிக்கினீர்களே! இனி சிந்தித்துச் செயல்படு வீர்கள். கனவுத் தொல்லை, தூக்கம் இன்மை விலகும். அரசுல் காரியங்களில் அனுகூலம் காணப்படும்.

எதிர்காலத்தை மனத்தில் கொண்டு சில காரியங்களை முடிப்பீர்கள். அரைகுறையாக நின்ற கட்டட வேலைகள் புரட்டாசி, ஐப்பசி மாதங்களில் முழுமையடையும். சொந்த ஊரில் மதிப்பு மரியாதை கூடும். அக்கம்பக்கத்தாருடனான மனக்கசப்பு நீங்கும். எதிர்த்தவர்கள் அடங்குவர். வசதி வாய்ப்புகள் பெருகும்.

குருபகவான் தரும் பலன்கள்

இந்த புத்தாண்டு தொடக்கம் முதல் 13.9.21 வரை மற்றும் 13.11.21 முதல் வருடம் முடியும் வரையிலும் குரு 8-ல் அமர்வதால் அரசு விவகாரங்கள், வழக்குகளில் அலட்சியப் போக்கு கூடாது. வி.ஐ.பிகளை பகைக்க வேண்டாம். சிலரின் சதியால் சொத்தை இழக்க நேரிடும். உணர்ச்சிவசப்பட்டு தவறான முடிவுகளை எடுக்க வேண்டாம்.

14.9.21 முதல் 12.11.21 வரை குரு 7-ல் நிற்பதால் குடும்பத்தில் நல்லது நடக்கும். கணவன் மனைவிக்கு இடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். எதிர்பார்த்த வகைகளில் பணம் வரும். பழைய கடனைக் கொஞ்சம் கொஞ்சமாக பைசல் செய்வீர்கள். வெளியூர்ப் பயணங்கள் திருப்திகரமாக அமையும்.

ராகு - கேது தரும் பலன்கள்

20.3.22 வரை லாப வீட்டில் ராகு நிற்பதால் எதிலும் மகிழ்ச்சி பொங்கும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். வெளிவட்டாரத்தில் புகழ், கௌரவம் கூடும். பொது நிகழ்ச்சிகள், கல்யாண, கிரகப் பிரவேச வைபவங்களை முன்னின்று நடத்துவீர்கள். கேது 5-ல் நிற்பதால் பிள்ளைகளுடன் மனவருத்தங்கள் வந்து நீங்கும். டென்ஷன், கனவுத்தொல்லை வரக்கூடும்.

21.3.22 முதல் 10-ல் ராகு நுழைவதால் அடுத்தடுத்து வேலைச்சுமை இருக்கும். உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டு. கேது 4-ல் நுழைவதால் புது முயற்சிகள் தடைப்பட்டு வெற்றியடையும். தாயாருக்கு மருத்துவச் செலவு வந்துபோகும். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவு அதிகரிக்கும்.

சனி பகவான் தரும் பலன்கள்

இந்த ஆண்டு முழுக்க சனிபகவான் கண்டகச் சனியாக அமர்வதால் பயணத்தின்போது கவனம் தேவை; சிறு சிறு விபத்துகள் நிகழ வாய்ப்பு உண்டு. அதேபோல் எடுத்துக்கொண்ட காரியங்களில் ஏமாற்றங்கள், பணயிழப்புகள் வந்து போகும். எதன்பொருட்டும் எவருக்காகவும் ஜாமீன் கையெழுத்திட வேண்டாம். கர்ப்பிணிப் பெண்கள் கவனமாக இருக்க வேண்டும்; மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் மருந்துகளை எடுத்துக்கொள்ளக் கூடாது. பிள்ளைகளால் கொஞ்சம் அலைச்சலும், செலவுகளும் இருக்கும்.

வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் உண்டு

வியாபாரத்தில் தேக்க நிலை விலகும். போட்டியாளர்கள் பின்வாங்குவர். உங்களின் தொழில் ரகசியங்களை வெளியிட்ட வேலையாட்களைக் கண்டறிந்து விலக்குவீர்கள். அனுபவம் மிகுந்தவர்களைப் பணியில் நியமிப்பீர்கள். மார்கழி, தை, பங்குனி மாதங்களில் இரட்டிப்பு லாபம் பெறுவீர்கள். பங்குதாரர்களின் ஒத்துழைப்பு உண்டு. வரி பாக்கிகளை முறையாகச் செலுத்துங்கள்.

உத்தியோகத்தில் உயர்வு உண்டு

உத்தியோகத்தில் உங்களது திறமை வெளிப்படும். மேலதிகாரியின் கவனம் உங்கள் மீது விழும். வருடத்தின் மத்தியப் பகுதியில் சம்பள உயர்வு, பதவி உயர்வு ஆகியன உண்டு. சக ஊழியர்கள் இனி உங்களை மதிப்பார்கள். அயல்நாட்டுத் தொடர்புடைய நிறுவனங்களிலிருந்து புதிய வாய்ப்புகள் தேடி வரும். கலைத்துறையினருக்குப் புதிய வாய்ப்புகள் தேடி வரும்.

மொத்தத்தில் இந்தப் புத்தாண்டு உங்களுக்கு எதிர்பாராத திடீர் திருப்பங்களையும் அதிரடி முன்னேற்றங்களையும் பெற்றுத் தந்து உங்களை மகிழ்ச்சிப் படுத்துவதாக அமையும்.

அனுமனை வழிபட்டால் அல்லல்கள் நீங்கும்!

கடக ராசி அன்பர்கள் இந்தப் புத்தாண்டில் அனுமனைச் சிக்கெனப் பிடித்துக் கொள்ளுங்கள். ஞானம், பலம், வீரம், பக்தி, சேவை, விநயம், பிரம்மசர்யம், சாதனை, யோகம் இவற்றில் உச்சத்தில் இருக்கும் அனுமனைத் தோத்திரம் செய்தால் நமக்கு எல்லாவற்றிலும் வெற்றி நிச்சயம்!

செங்கல்பட்டு மாவட்டம், திருமலைவையாவூர் எனும் ஊரில் வீற்றிருக்கும் ஶ்ரீஆஞ்சநேயரை ஞாயிற்றுக் கிழமைகளில் சென்று வணங்குங்கள். வாழ்வில் முன்னேற வழி பிறக்கும். வீட்டில், சனிக்கிழமைகளில் ஶ்ரீராமநாமம் கூறி வடைமாலை சமர்ப்பித்து, அனுமனை வழிபடலாம். சுந்தரகாண்ட பாராயணம் காரிய வெற்றியைத் தரும்
.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism