திருத்தலங்கள்
திருக்கதைகள்
ஜோதிடம்
Published:Updated:

கும்பம் - பிலவ வருடம் புத்தாண்டு ராசிபலன்கள்

கும்பம்
பிரீமியம் ஸ்டோரி
News
கும்பம்

துல்லிய பலன்கள் - எளிய பரிகாரங்களுடன்...

கொடுத்துச் சிவந்த கைகளை உடைய நீங்கள், எவரிடமும் உதவி கேட்டு கைநீட்ட மாட்டீர்கள். பேதம் பார்க்காமல் எல்லோரிடமும் சமமாகப் பழகுவீர்கள். உங்களுக்கு இந்தப் புத்தாண்டு என்ன பலன்களைத் தரப்போகிறது என்பதைப் பார்போம்.

கும்பம் - பிலவ வருடம் புத்தாண்டு ராசிபலன்கள்

இந்தத் தமிழ் புத்தாண்டு உங்கள் ராசிக்கு தைரிய ஸ்தானமான 3-வது ராசியில் பிறப்பதால், இழுபறியான வேலைகள் முழுமையடையும். உங்கள் வாழ்க்கை பிரகாசம் அடையும். கணவன் மனைவிக்குள் அன்பு செலுத்துவீர்கள். பிரச்னை ஏற்படுத்திய உறவினர்களை ஒதுக்குவீர்கள். சிலருக்குக் குழந்தைப் பாக்கியம் உண்டாகும். செலவுகளைச் சமாளிப்பீர்கள். பணப்பை நிரம்பும்.

பிள்ளைகளின் மனத்தை அறிந்து செயல்படுவீர்கள். புதிய ஆடை அணிகலன்கள் சேரும். வைகாசி, ஆனி மாதங்களில் வீட்டில் சந்தோஷம் நிலைக்கும். எதிர்காலம் குறித்து முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன் பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். கோபம் குறையும். பூர்வீகச் சொத்தில் மாற்றம் செய்வீர்கள். பொருளாதாரம் உயரும். அரசு விஷயங்களில் எச்சரிக்கை தேவை.வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும்.

ஆவணி மாதம் வீட்டில் சுப காரியம் நடக்கும். பெண்ணுக்கு நல்ல இடத்தில் வரன் அமையும். பிரபலங்களின் விசேஷங்களில் கலந்து கொள்வீர்கள். புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவதால், மன நிறைவு கிட்டும். நல்ல வேலை இல்லையே என்று வருந்திய அன்பர்களுக்குப் புரட்டாசி மாதம் புது வேலை தேடி வரும். நண்பர்களின் ஒத்துழைப்பு உண்டு. வழக்குகளில் வெற்றி பெறுவீர்கள். அரசியலில் ஈடுபாடு அதிகரிக் கும். அரைகுறையான கட்டட வேலைகள் முழுமையடையும்.

ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் புதிய வீடு-மனை வாங்குவீர்கள். காற்றோட்டம் நிறைந்த வீட்டுக்குக் குடிபுகுவீர்கள். வெளிநாடு செல்லும் முயற்சியில் வெற்றி கிட்டும். பொது நிகழ்ச்சிகளில் ஆர்வம் காட்டுவீர்கள். உங்களின் பேச்சைக் கேட்டு அனைவரும் வியப்பர். எதிர் வீட்டுக்காரர்களுடன் இருந்த சண்டை - சச்சரவு விலகும். வெளியூர்ப் பயணம் ஆதாயம் தரும்.

குரு பகவான் தரும் பலன்கள்

ஆண்டு முழுக்க குருபகவான் சாதகமாக இல்லாததால் முன்கோபம் அதிகரிக்கும். உணர்ச்சிவசப்பட்டு வார்த்தைகளை விட வேண்டாம். ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்தப்பாருங்கள். உடல் அசதி, சோர்வு, எதிலும் ஒருவித சலிப்பு, சிறுநீரகத் தொற்று, காய்ச்சல் வந்து செல்லும். நேரம் கடந்து சாப்பிடுவதைத் தவிர்க்கப்பாருங்கள். வெளி உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. சிக்கனம் தேவை. நீண்ட காலமாகச் செல்ல வேண்டுமென நினைத்திருந்த கோயில்களுக்குக் குடும்பத்தாருடன் சென்று வருவீர்கள்.

ராகு-கேது தரும் பலன்கள்

20.3.2022 வரை ராசிக்கு 4-ல் ராகு நிற்பதால் தாயாருக்கு மருத்துவச் செலவு, தாய்வழி உறவினர்களிடையே பகைமை வரக்கூடும். அசைவ, கார உணவுகளை தவிர்ப்பது நல்லது. கேது 10-ல் நிற்பதால் உத்தியோகத்தில் டென்ஷன், காரியத்தடைகள் வரும். செலவுகளைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறுவீர்கள்.

21.3.2022 முதல் ராகு 3-ல் நுழைவதால் எதிலும் வெற்றி உண்டாகும். புதிய முயற்சிகள் பலிதமாகும். வங்கிக் கடன் பெற்று வீட்டைக் கட்டி முடிப்பீர்கள். கேது 9-ம் வீட்டிற்குள் நுழைவதால், உத்தியோகத்தில் இருந்த பிரச்னைகள் குறையும். ஆனால் தந்தையா ரின் உடல்நிலை பாதிக்கும். உங்களின் பிடிவாதக் குணத்தை மற்றவர் களுக்காக மாற்றிக்கொள்வது நல்லது.

சனி பகவான் தரும் பலன்கள்

இந்தாண்டு முழுக்க சனி 12-ல் மறைந்து விரயச் சனியாகத் தொடர்வதால் வீண் பழி, பண இழப்பு, ஏமாற்றங்கள் வந்து போகும். தூக்கம் குறையும். தன்னம்பிக்கை குறையும். தாயாரின் உடல் நலம் பாதிக்கும். அவருக்கு முதுகுத்தண்டில் வலி, பல், முழங்கால், மூட்டு வலி வந்து செல்லும். தாய்வழி உறவினர்களுடன் பனிப்போர் வெடிக்கும். இளைய சகோதரர்கள் தவறாகப் புரிந்துகொள்வார்கள். சந்தேகப் புத்தியால் நல்லவர்களை இழக்க வேண்டி வரும். யாரை நம்புவது என்கிற மனக்குழப்பத்திற்கு ஆளாவீர்கள்.

வியாபாரத்தில் அயல்நாட்டுப் பொருள்களால் ஆதாயம் உண்டு

வியாபாரத்தில் புதிய யுக்திகளைக் கையாளுவீர்கள். கொடுக்கல் - வாங்கலில் சுமூகமான நிலை காணப்படும். வேலையாட்கள் கடமை உணர்வுடன் செயல்படுவர். அவர்களது தேவையறிந்து உதவுவீர்கள். பங்குதாரர்களிடம் இருந்து வந்த கூச்சல் - குழப்பம் விலகும். கடையை விரிவுப்படுத்துவீர்கள். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். பெட்ரோல், கெமிக்கல், மூலிகைகள் லாபம் தரும். அயல்நாட்டுப் பொருட்களால் ஆதாயம் உண்டு.

உத்தியோகத்தில் நிர்வாகத் திறமை கூடும்

உத்தியோகத்தில் வேலைப்பளு குறையும். உங்களது கடின உழைப்புக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும். சிலருக்கு அதிக சலுகை, சம்பளத்துடன் புது வேலை கிடைக்கும். வேற்று நாட்டுத் தொடர்புள்ள நிறுவனங்களிலிருந்து வாய்ப்புகள் தேடி வரும். நிர்வாகத் திறமை கூடும். மேல் அதிகாரியால் பாராட்டப் பெறுவீர்கள். கணினித் துறையினருக்கு கண் எரிச்சல், தூக்கமின்மை விலகும். கலைஞர்களுக்குப் பரிசு, பாராட்டு, பணமுடிப்பு கிடைக்கும். திறமையை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் தேடி வரும்.

மொத்தத்தில் இந்தப் பிலவ வருடம், உங்களின் தாழ்வு மனப் பான்மை மற்றும் தடைகளை நீக்கி, தன்னம்பிக்கையையும் வசதி வாய்ப்புகளையும் பெற்றுத் தருவதாக அமையும்.

கும்பம் - பிலவ வருடம் புத்தாண்டு ராசிபலன்கள்

நல்லன அருள்வாள் அங்காள பரமேஸ்வரி!

கும்ப ராசி அன்பர்களுக்குச் சனி பகவான் விரயச் சனியாக பலன் தரவுள்ளார். அதேபோல் 20.3.22 வரையிலும் ராகு-கேது சஞ்சாரமும் சில சஞ்சலங்களை ஏற்படுத்த வாய்ப்பு உண்டு.

இதுபோன்ற குறைகளும் பாதிப்புகளும் நீங்க கும்ப ராசிக்காரர்கள் அம்மனைச் சரண் அடைய வேண்டும். வெள்ளிக் கிழமை தோறும் அருகிலுள்ள அம்மன் ஆலயங் களுக்குச் சென்று தீபமிட்டு வழிபடுங்கள். பெளர்ணமி தினங்களில் வீட்டில் சித்ரான்னங்கள் படைத்து வழிபடுங்கள்.

இயன்றால், வெள்ளிக் கிழமைகளில், திருவள்ளூர் மாவட்டம் - புட்லூர் எனும் தலத்தில் அருளும் அங்காளபரமேஸ்வரி அம்மனை வழிபட்டு வாருங்கள்; வினைகள் யாவும் நீங்கும்.