Published:Updated:

பிலவ வருடம் புத்தாண்டு ராசிபலன்கள் - மேஷம்

மேஷம்
பிரீமியம் ஸ்டோரி
மேஷம்

துல்லிய பலன்கள் - எளிய பரிகாரங்களுடன்...

பிலவ வருடம் புத்தாண்டு ராசிபலன்கள் - மேஷம்

துல்லிய பலன்கள் - எளிய பரிகாரங்களுடன்...

Published:Updated:
மேஷம்
பிரீமியம் ஸ்டோரி
மேஷம்

அசுவினி, பரணி கிருத்திகை 1-ம் பாதம்

மலர்ந்த முகத்துடன் வந்தாரை உபசரித்து உதவும் குணமும், ராஜ தந்திரமும் உடையவர்கள் நீங்கள். உங்களுக்கு இந்தப் பிலவ வருடம் எப்படியான பலன்களைத் தரவுள்ளது எனப் பார்ப்போம்.

உங்கள் ராசியிலேயே சந்திரன் நிற்கும்போது இந்தப் புத்தாண்டு பிறப்பதால், தைரியமான முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். கணவன் - மனைவிக்குள் அந்நியோன்யம் பிறக்கும். குடும்ப வருமானத்தை உயர்த்த முற்படு வீர்கள். குழப்பங்களிலிருந்து விடுபடுவீர்கள். உடல் நலத்தில் சற்றுக் கவனம் தேவை.

உறவினர் மற்றும் நண்பர்களின் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். கடன் தீர்ந்து, சொத்துகள் வாங்க புதுக் கடன் வாங்குவீர்கள். வெளியூர்ப் பயணங்கள் மனநிறைவு தரும். முன்கோபத்தைத் தவிருங்கள். சிலருக்குக் குழந்தை பாக்கியம் உண்டாகும்.

மகனுக்கு நல்ல மணப்பெண் அமைவார். வேலை வாய்ப்புகள் தேடி வரும். சித்திரை, ஆடி மாதங்களில் வீட்டில் மகிழ்ச்சி தங்கும். பிரச்னைகளுக்குத் தீர்வு காண முற்படுவீர்கள். அம்மாவுடன் கருத்து மோதல்கள் வந்தாலும், நெருக்கடி நேரத்தில் ஒருவருக்கொருவர் உதவி செய்வீர்கள். கார்த்திகை மாதம் முதல் எதிலும் வெற்றி பெறுவீர்கள். பணவரவு சரளமாக இருக்கும். செலவுகளைச் சமாளிப் பீர்கள். சொந்த பந்தங்கள் வியக்கும்படி முன்னேற எண்ணுவீர்கள். ஆடை, ஆபரணம் சேரும். மன உளைச்சல் அகலும். தன்னம்பிக்கை துளிர்விடும்.

மார்கழி, பங்குனி மாதங்களில் வீடு, மனை வாங்குவீர்கள். சிலர் வீட்டை விரிவுபடுத்துவார்கள். சகோதர - சகோதரிகளின் ஆதரவு பெருகும். நவீனரக மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள். புது நண்பர்கள் அறிமுகமாவார்கள். வெளிநாட்டுக்குச் செல்லும் முயற்சி சாதகமாகும். வி.ஐ.பிகளின் நட்பு கிடைக்கும். நீண்ட நாள்களாக நினைத்திருந்த புண்ணிய தலங்களுக்குச் சென்று வருவீர்கள். வழக்குகளில் சாதகமான நிலை ஏற்படும்.

குரு பகவான் தரும் பலன்கள்

இந்தப் புத்தாண்டு தொடக்கம் முதல் 13.9.21 வரை மற்றும் 13.11.21 முதல் வருடம் முடியும் வரை குரு உங்கள் ராசிக்கு 11-ல் தொடர்கிறார்.இந்தக் காலகட்டத்தில் குடும்பத்தில் சந்தோஷம் கரைபுரளும். பழைய தவறெல்லாம் தொடராதபடி கவனமாக இருப்பீர்கள். தைரியமாக முடிவெடுப்பீர்கள். வாடகை வீட்டில் இருப்பவர்கள் சொந்த வீட்டுக்குக் குடிபுகுவீர்கள்.

வருமானம் நாலா பக்கத்திலிருந்தும் வந்து குவியும். அடகிலிருந்த நகைகளை மீட்கும் அளவிற்கு வருமானம் உயரும். புது ரக ஆடை, ஆபரணங்கள் புதிதாக வாங்குவீர்கள். அரசாங்க நெருக்கடிகள், காவல்துறையின் கண்காணிப்புகள், நீதிமன்ற சம்மன்கள் ஆகியவற்றிலிருந்து விடுபடுவீர்கள்.

14.9.21 முதல் 12.11.21 வரையிலும் குரு 10-ல் தொடர்வதால், மற்றவர்களின் விவகாரத்தில் தலையிட்டு, வீணாக சிக்கிக் கொள்ளாதீர்கள். வேலைச்சுமை கூடும்.

ராகு - கேது தரும் பலன்கள்

இப்போது ராகு - கேது இருக்கும் இடமும், அடுத்து பெயர்ச்சியாகும் இடமும் சரியில்லாததால் வருமானம் அதிகரித்தாலும் அதற்குத் தகுந்த செலவுகளும் இருக்கும். திடீர்ப் பயணங்கள் அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் நிதானத்தையும், பொறுமையையும் கடைப்பிடிக்க வேண்டும். எதிலும் முன்னெச்சரிக்கை தேவை.

சனி பகவான் தரும் பலன்கள்

இந்த வருடம் முழுக்க சனி பகவான் 10-ல் தொடர்வதால் குடும்பத்தாருடன் மனம்விட்டுப் பேசி, குறைநிறைகளை அலசி ஆராய்வீர்கள். சுற்றத்தினர் மத்தியில் செல்வாக்கு பெருகும். ஒரு சொத்தை விற்றுவிட்டு, மற்றொரு சொத்தை வாங்குவீர்கள். எதிர்மறை எண்ணங்கள் விலகும்; சாதிக்கும் ஆற்றல் பிறக்கும்.

வியாபாரத்தில் புதிய முதலீடுகள் உண்டு

வியாபாரத்தில் போட்டிகள் குறையும். வேலையாட்கள் கடமை உணர்வுடன் செயல்படுவர். புதிய வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். பழைய பாக்கிகள் வசூலாகும். புது முதலீடுகள் மற்றும் ஒப்பந்தங்கள் செய்வீர்கள். வாடிக்கையாளர்கள் அதிகரிப்பர். வரிகளை முறையாகச் செலுத்துவீர்கள். பங்குதாரர்களின் தொந்தர வுகள் விலகும். கடையை விரிவான இடத்துக்கு மாற்றுவீர்கள். பழைய சரக்குகள் விற்றுத் தீரும். ஷேர், ஸ்பெகுலேஷன் கமிஷன் வகைகளால் ஆதாயம் உண்டு.

உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டு

உத்தியோகத்தில் மூத்த அதிகாரிகள் உங்கள் ஆலோசனைகளை ஏற்பர். கேட்ட இடத்துக்கு இடமாற்றம் உண்டு. சக ஊழியர்களுக்கு மத்தியில் மதிப்பு - மரியாதை உயரும். சம்பளப் பிரச்னை தீரும். அயல் நாட்டுத் தொடர்புள்ள நிறுவனங்களில் புதிய வாய்ப்புகள் தேடி வரும். அரசுப் பணியாளர்கள் பொறுப்புடன் நடந்துகொள்வர்.

கலைத்துறையினரின் கற்பனைத் திறனுக்கு வெற்றி வாய்ப்பு கிடைக்கும். புது வாய்ப்புகளும் கதவைத் தட்டும். உங்களின் புதுமையான அணுகு முறைக்கு மக்கள் மத்தியில் பாராட்டு கிடைக்கும். கிடைக்கும் வாய்ப்பு களைச் சரியானபடி பயன்படுத்தி முன்னேறுவீர்கள்.

மொத்தத்தில் இந்தப் பிலவ புத்தாண்டு உங்களுக்கு, முற்பகுதியில் புது அனுபவங் களையும், பிற்பகுதியில் எதிர் பாராத திடீர் வளர்ச்சியையும் பெற்றுத் தருவதாக அமையும்.

ஶ்ரீநரசிம்மர் அருளால் நன்மைகள் கிடைக்கும்!

மேஷ ராசி அன்பர்கள், சென்னை, நங்கநல்லூரில் அருளும் ஶ்ரீலட்சுமி நரசிம்மரை வணங்கி வாருங்கள்.

இயலாதவர்கள் சுவாதி தினத்தன்றும் சனிக்கிழமைகளிலும் வீட்டுக்கு அருகிலுள்ள பெருமாள் ஆலயங்களுக்குச் சென்று பானகம் சமர்ப்பித்து ஶ்ரீலட்சுமிநரசிம்மரை வழிபட்டு வரலாம்.

`மிக்கானை மறையாய் விரிந்த விளக்கை என்னுள்
புக்காளைப் புகழ்சேர் பொலிகின்ற பொன்மலையைத்
தக்கானைக் கடிகைத் தடங்குன்றின் மிசையிருந்த
அக்காரக் கனியை அடைந்துய்ந்து போனேனே.'


எனும் பாசுரம் படித்து தினமும் வழிபட, தடைகள் நீங்கும்; முன்னேற்றம் உண்டாகும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism