ஜோதிடம்
திருக்கதைகள்
Published:Updated:

சிம்மம் - சோபகிருது தமிழ்ப் புத்தாண்டு ராசி பலன்கள்

தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்

வருடப் பிறப்பு முதல் 7.10.23 வரை 3-ம் வீட்டில் கேது நிற்பதால் திடீர் பணவரவு உண்டு. அண்ணன் பக்கபலமாக இருப்பார். பூர்வீகச் சொத்தைச் சீரமைப்பீர்கள்.

கடினமான காரியங்களையும் எளிதில் செய்து முடித்துவிடும் வல்லவர் நீங்கள். உங்கள் ராசிக்கு 6-ல் சோபகிருது ஆண்டு பிறப்பதால், எதையும் சாதிக்கும் வல்லமை பிறக்கும். குடும்பத்தாரின் உணர்வுக்கு மதிப்பளிப்பீர்கள். பழைய கடனை பைசல் செய்வீர்கள். தன்னம்பிக்கை பிறக்கும்.

சிம்மம் - சோபகிருது தமிழ்ப் புத்தாண்டு ராசி பலன்கள்

ஐப்பசி, கார்த்திகை, தை மாதங்களில் பணப் புழக்கம் அதிகரிக்கும். நவீனரக எலெக்ட்ரானிக்ஸ், சமையலறை சாதனங்கள் வாங்குவீர்கள். சொந்த வீடு கனவு நனவாகும். சிலருக்குத் தாய்மாமன், அத்தை வழியில் சங்கடங்கள் வரும். மார்கழி மாதத்தில் அரசு விவகாரங்களில் இழுபறி நிலை ஏற்படும். தை, மாசி மாதங்களில் திடீர் பணவரவு, புது வாகனம் வாங்கும் யோகம் மற்றும் திருமணம் கூடி வரும்.

21.4.23 வரை 8-ம் வீட்டில் குரு இருப்பதால் இனம் புரியாத கவலை, நம்பிக்கையின்மை, வீண் அலைச்சல், வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். 22.4.23 முதல் வருடம் முடியும் வரை 9-ம் வீட்டில் குரு அமர்வதால், இடையூறுகளைக் கடந்து வெற்றி பெறுவீர்கள். அமைதியாக இருந்து காரியம் சாதிப்பீர்கள். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். அரசால் அனுகூலம் உண்டு. குடும்பத்தில் தள்ளிப் போன சுப நிகழ்ச்சிகளெல்லாம் ஏற்பாடாகும். மறைமுக எதிர்ப்புகள் அடங்கும். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். சொத்து வாங்கும் யோகம் உண்டாகும்.

14.4.23 முதல் 25.8.23 வரை மற்றும் 20.12.23 முதல் வருடம் முடியும் வரை சனிபகவான் உங்கள் ராசிக்கு 7-ல் கண்டகச் சனியாக அமர்வதால் சிறு சிறு விபத்துகள், ஏமாற்றங்கள், பண இழப்புகள் வந்து போகும். யாருக்கும் ஜாமீன் கையெழுத்திட வேண்டாம். 26.8.23 முதல் 19.12.23 வரை உங்கள் ராசிக்கு சனி 6-ல் நிற்பதால் புகழ், கௌரவம் உயரும். உங்கள் உதவியால் வளர்ச்சி அடைந்தவர்கள் இப்போது உங்களுக்கு உதவுவார்கள். பழைய கடனில் ஒரு பகுதி தீரும். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களால் ஆதாயம் உண்டு.

வருடப் பிறப்பு முதல் 7.10.23 வரை 3-ம் வீட்டில் கேது நிற்பதால் திடீர் பணவரவு உண்டு. அண்ணன் பக்கபலமாக இருப்பார். பூர்வீகச் சொத்தைச் சீரமைப்பீர்கள். பிதுர் வழிச் சொத்தை அடைவதில் இருந்த தடைகள் விலகும். ஷேர் மூலம் பணம் வரும். 9-ல் ராகு இருப்பதால் தந்தைக்கு மருத்துவச் செலவுகள் அதிகரிக்கும். சித்தர்கள், ஆன்மிகவாதிகளின் ஆசி கிட்டும். 8.10.23 முதல் வருடம் முடியும் வரை உங்கள் ராசி 2-ல் கேதுவும், 8-ல் ராகுவும் நுழைவதால் பேச்சில் கடுமை காட்டாதீர்கள். வேலைச்சுமை அதிகரிக்கும். நண்பர்களால் மன உளைச்சல் வரக்கூடும். திடீர்ப் பயணங்கள் அதிகரிக்கும்.

13.2.24 முதல் 8.3.24 வரை சுக்ரன் 6-ல் மறைவதால் கணவன்-மனைவிக்குள் கருத்து மோதல்கள் வரும். பரஸ்பரம் விட்டுக்கொடுத்துப் போவது நல்லது. குடும்ப விஷயங்களை வெளியே பகிரவேண்டாம்.

வியாபாரிகளே! தொழிலில் இதுவரை இருந்த அவல நிலை மாறும். போட்டியாளர்களுக்குப் பதில் கொடுக்கும் அளவுக்கு உங்களின் அணுகுமுறை மாறும். புரட்டாசி மார்கழி, பங்குனி மாதங்களில் கூடுதல் லாபம் கிடைக்கும். புது ஏஜென்சி எடுப்பீர்கள். கணினி உதிரி பாகங்கள், ரியல் எஸ்டேட், ஏற்றுமதி-இறக்குமதி வகைகளால் லாபம் உண்டு. அரசாங்க வகையில் தொந்தரவுகள் நீங்கும். பங்குதாரர்களின் கோரிக்கைகளை ஏற்பீர்கள்.

உத்தியோகஸ்தர்களே! மேலதிகாரி உங்களைப் புரிந்துகொள்வார். புதிய பொறுப்புகள் வந்து சேரும். 22.4.23 முதல் 8-ம் வீட்டை விட்டு குரு விலகுவதால், நீங்கள் கேட்ட இடத்திற்கே மாற்றம் கிடைக்கும். வேலைச்சுமை அதிகரித்தாலும் விரைந்து முடிப்பீர்கள். மறைமுக எதிர்ப்புகள் இருந்தாலும் அவற்றைத் தகர்த்தெறிவீர்கள். எதிர்பார்த்த சலுகைகள் தாமதமானாலும் உறுதியாக கிடைக்கும். பதவி உயர்வு, சம்பள உயர்வுக்காக உங்களுடைய பெயர் பரிசீலிக்கப்படும். கணினித் துறையினர், சம்பளம் சலுகைகள் அதிகம் உள்ள வேலைக்கு மாறுவீர்கள்.

மொத்தத்தில் இந்தச் சோபகிருது வருடம், உங்களின் பண பலத்தை உயர்த்துவதாகவும் பழைய பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பதாகவும் அமையும்.

பரிகாரம்: மதுரை மாவட்டம், திருமோகூர் தலத்தில் கோயில் கொண்டிருக்கும் காளமேகப் பெருமாளையும் சக்கரத்தாழ்வாரையும் சனிக் கிழமைகளில் சென்று வணங்கி வாருங்கள்; சந்தோஷம் நிலைக்கும்.