Published:Updated:

எடுத்த காரியத்தில் வெற்றிபெறப்போகும் மேஷ ராசி அன்பர்களே... 2020 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்! #Video

மேஷ ராசிக்காரர்களுக்கு, 2020 ஆங்கிலப் புத்தாண்டு மிகச்சிறப்பான ஒரு ஆண்டாக அமைய இருக்கிறது. இந்த ஆண்டில், இவர்கள் தொட்டதெல்லாம் துலங்கக்கூடிய பாக்கியம் கிடைக்கும்.

2020 புத்தாண்டு
2020 புத்தாண்டு

மேஷ ராசிக்காரர்களுக்குரிய 2020-ம் ஆண்டுப் பலன்கள்!

2020 - ஆங்கிலப் புத்தாண்டு ஜனவரி 1-ம் தேதி புதன்கிழமை பிறக்கிறது. பிறக்கும் புத்தாண்டில் மேஷ ராசிக்குரிய பலன்கள் பற்றி ஜோதிடக் கலை அரசு ஆதித்யகுருஜியிடம் கேட்டோம்.

``2020-ம் ஆண்டு, கும்ப ராசியில் பிறக்கிறது. இது, மிகவும் சிறப்பான ஓர் அம்சம். கும்ப ராசிநாதனான சனி பகவான் இந்த ஆண்டு பிறக்கும்போது குருவுடன் சேர்ந்து தனுசு ராசியில் இருக்கிறார். குரு சுபத்துவமான கிரகமென்பதால், சுபத்துவ பலன்களே மிகுதியாக இருக்கும்.

Aries
Aries

மேஷ ராசிக்காரர்களுக்கு, 2020 ஆங்கிலப் புத்தாண்டு மிகச் சிறப்பான ஓர் ஆண்டாக அமைய இருக்கிறது. இந்த ஆண்டில், இவர்கள் தொட்டதெல்லாம் துலங்கக்கூடிய பாக்கியம் கிடைக்கும்.

ஜோதிட சாஸ்திரப்படி, குரு வருடத்துக்கொருமுறையும் ராகு, கேது ஆகிய நிழல்கிரகங்கள் ஒன்றரை ஆண்டுகளுக்கொருமுறையும், சனி கிரகம் இரண்டரை ஆண்டுகளுக்கொருமுறையும் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு பயணிக்கக்கூடியவர்கள். இதனால், இவற்றை `வருட கிரகங்கள்' என்று அழைப்பார்கள்.

குரு, சனி, கேது ஆகிய மூன்று கிரகங்களும் மேஷ ராசிக்கு 9 -ம் இடமான தனுசு ராசியில் இருந்துவருகின்றன. இதில், குரு பகவான் ஒன்பதாம் இடத்தில் 1, 3, 5 (மேஷம், மிதுனம், சிம்மம்) ஆகிய இடங்களைப் பார்வை செய்கிறார். `குரு பார்க்க கோடி நன்மை' என்று சொல்லுவார்கள். ஆகவே, குரு பகவான் உங்களின் ராசியை ஐந்தாம் பார்வையாகப் பார்க்கிறார். ராசிக்கு மூன்றாமிடமான மிதுனத்தை ஏழாம் பார்வையாகப் பார்க்கிறார்.

Planets
Planets

மூன்றாமிடம் வெற்றிக்குரிய இடம், பகையை வெல்லக்கூடிய இடம் என்பதால், இந்த ஆண்டு இவர்களுக்கு எடுத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும். குரு பகவான் ஒன்பதாம் பார்வையாகப் பார்க்கும் 5 - ம் இடம் பூர்வபுண்ணியஸ்தானம் என்பதால், இவர்களுக்கு அதிர்ஷ்டம் ஏதோ ஒரு ரூபத்தில் தொடர்ந்து கிடைத்துக்கொண்டே இருக்கும் என்பதுதான் 2020-ம் ஆண்டின் பலனாகும்.

சமூகத்தில் அந்தஸ்து, மரியாதை, கௌரவம் இவை யாவும் உயரக்கூடிய சூழல் உருவாகும். உங்களின் எண்ணங்களில் புத்துணர்ச்சியும் மனத்தில் உற்சாகமும் எப்போதும் நிறைந்திருக்கும். இதனால், உங்களின் உழைப்புக்கேற்ற பலனை அதிர்ஷ்ட தேவதை தானாகவே முன்வந்து உங்களுக்கு வழங்குவார்.

Marriage
Marriage

ஒருவர், தான் ஈடுபட்ட காரியத்தில் வெற்றிபெற வேண்டுமென்றால், அவர் முயற்சியையும் கடின உழைப்பையும் மேற்கொள்ள வேண்டும். ஆனால், அப்படி முயற்சியையும் கடின உழைப்பையும் மேற்கொள்கிற எல்லோருக்குமே வெற்றி கிடைத்துவிடுகிறதா என்றால் நிச்சயமாக இல்லை. ஆனால், இந்த முறை மேஷ ராசிக்காரர்கள் எடுக்கக்கூடிய முயற்சிகளில் வெற்றியைப் பெறுவார்கள்.

வருகிற ஜனவரி 24-ம் தேதி, தனுசிலிருந்து சனி பகவான் உங்களின் ராசிக்கு 10-ம் இடமான மகர ராசிக்குப் பெயர்ந்து செல்கிறார். இதனால், தொழில் ஸ்தானமான கேந்திர ஸ்தானம் என்று சொல்லக்கூடிய பத்தாமிடத்துக்கு சனி பகவான் வருகிறார்.

இயற்கையிலேயே, பாவியான சனி, தொழில் ஸ்தானத்திலிருக்கும்போது உங்களின் தொழிலில் மேன்மையும் வெற்றியும் கிடைக்கும். இதுநாள் வரை தொழில், வேலைவாய்ப்பு, ஜீவனஸ்தானம் ஆகியவற்றில் வெற்றிகிடைக்காமல் இருந்தவர்களுக்கு, நல்ல நேரம் வந்துவிட்டது.

Sani Bhagavan
Sani Bhagavan

கருத்து வேற்றுமையால் பிரிந்திருந்த கணவன், மனைவி ஒன்று சேர்வார்கள். திருமணத்தடையில் சிக்கித் தவிப்பவர்களுக்குத் திருமணம் நல்லவிதமாக நடைபெறும். குழந்தைபாக்கியம் இல்லாமல் இருந்தவர்களுக்கு புத்திர பாக்கியம் கிடைக்கும்.

மேஷ ராசியின் அதிபதியான செவ்வாயின் காரகத்துவம் பெற்ற மருத்துவம், விளையாட்டு, ரியல் எஸ்டேட் துறைகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான நிலை ஏற்படும். மனத்தில் ஒரு தெளிவும் உடலில் ஒரு உற்சாகமும் எதையும் செய்து முடிக்கும் ஒரு தீவிரத் தன்மையும் உங்களிடம் பிறக்கும். எடுத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும்.

இல்லத்தரசிகளுக்குப் புத்துணர்ச்சி தரக்கூடிய ஆண்டாக இந்த ஆண்டு அமையும். ஆடை ஆபரணங்கள் வாங்கக்கூடிய வாய்ப்புகள் கிடைக்கும். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைப்பதோடு, புதிய கிளைகளைத் தொடங்கக்கூடிய வாய்ப்பும் அவர்களுக்குக் கிடைக்கும். உத்தியோகத்திலிருப்பவர்களுக்குப் பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் மிகவும் அதிகம்.

வருட கிரகங்களான குரு ராசிக்கு ஒன்பதாம் இடத்தில் இருப்பதும் சனி பகவான் பத்தாம் இடத்தில் இருப்பதும், ராகு மூன்றாம் இடத்தில் இருப்பதும் இவர்களுக்கு இந்த ஆண்டு முழுவதும் நல்ல பலன்களையே அளிக்கும் அவரவர் வயது மற்றும் தகுதிக்கேற்ப பலன்களை அடைவார்கள் என்பது நிச்சயம்.