Published:Updated:

சூரியனின் அருள்பெற்ற ஞானி!

ஜோதிடம் அறிவோம்
பிரீமியம் ஸ்டோரி
ஜோதிடம் அறிவோம்

- முருகேசன், திண்டுக்கல் -

சூரியனின் அருள்பெற்ற ஞானி!

- முருகேசன், திண்டுக்கல் -

Published:Updated:
ஜோதிடம் அறிவோம்
பிரீமியம் ஸ்டோரி
ஜோதிடம் அறிவோம்

அடர்ந்த வனத்துக்குள் நுழைந்த அந்தச் சிறுவன் 12 மர விழுதுகளைக் கயிறுகளாக முறுக்கி, ஊஞ்சல் போன்று செய்தான். அதை இரண்டு மரங்களுக்கு இடையே கட்டி, அதன் மீது அமர்ந்து கொண்டான். கீழே குண்டம் அமைத்து, அதில் பெரும் தனலை மூட்டி வைத்திருந்தான்!

சூரியனின் அருள்பெற்ற ஞானி!

``எதையும் மனதில் தக்கவைக்க முடியாத முட்டாளாக இருக்கிறாய். இங்கே இருந்தால் மற்ற மாணவர்களையும் முட்டாளாக்கி விடுவாய். ஆகவே காட்டுக்குள் சென்று காயத்ரீ மந்தரத்தை ஜபித்து வா...’’ என்று அவனுடைய தந்தை கட்டளையிட்டிருந்தார்.

அதன்படியே வனத்துக்குள் வந்தவன் ஊஞ்சள் கட்டி அமர்ந்து விட்டான். ஒரு வருடம் ஆனதும் ஊஞ்சலின் ஒரு கயிறை அறுத்து விடுவான். இப்படியே 11 வருடங்கள் கழிந்ததும் ஒற்றைக் கயிற்றில் அமர்ந்து காயத்ரீ ஜபிப்பது அவன் இலக்கு. அப்போதும் சூரிய தேவன் வராவிட்டால் குண்டத்தில் வீழ்ந்துவிடலாம் என்பது அவன் முடிவு.

11 வருடங்கள் கழிந்தன. 12-வதும் நிறைவடையும் தருணம். ஒருநாள் சாது ஒருவர் வந்தார். அவரைக் கண்டதுமே அவர் யாரென்பது சிறுவனுக்குத் தெரிந்துவிட்டது. ``சூரியதேவரே வணங்குகிறேன். முற்பிறவியில் பராசர முனிவர் நான். வேத வியாசரின் தந்தை. அவனைப் பெற்றெடுக்கும் வரையிலும் தங்களயே மறையச் செய்திருந்தேன். அதன் வினைப்பயன்... இப்பிறவியில் எதையும் மனதில் தேக்கிவைக்கும் திறன்கூட இல்லாமல் பிறந்திருக்கிறேன்.

எனது முன் வினையைக் கரைத்து விமோசனம் தாருங்கள். நான் முக்காலத்தையும் உணர்த்தும் ஜாதகப் பண்டிதனாகத் திகழ அருள்புரியுங்கள்’’ என்று வேண்டினான். சூரியதேவரும் அவனுக்கு அருள்புரிந்து மறைந்தார்.

அவன் அகிலம்போற்றும் ஞானியானார். உஜ்ஜயினி அரசன் விக்கிரமாதித்தனின் சபையில் ஆஸ்தான ஜோதிடராகத் திகழ்ந்து புகழ்பெற்றார். பல ஞானநூல்களை அருளினார். அவர்தான் மிஹ்ராச்சார்யர். ஜோதிட விற்பன்னர்கள் இன்றும் இந்த ஆசார்ய புருஷரை வணங்கித் தொழுவார்கள்!

சூரியனின் அருள்பெற்ற ஞானி!

ராகு தோஷம் என்றால் பயமா?

`ராகுவால் தோஷம்’ என்று பார்த்ததுமே சொல்லிவிட முடியாது. ராகு இருக்கும் வீட், ராகு பார்க்கும் கிரகம், ராகுவுடன் சேர்ந்து இருக்கும் கிரகம், ராகு இருக்கும் ராசிநாதன், ராகுவின் அம்சக நாதன், லக்னாதிபதிக்கும் ராகுவின் ராசிக்கும் உள்ள தொடர்பு, காரகாதிபதியின் சம்பந்தம்... இவற்றையெல்லாம் ஆராய்ச்சி செய்தபிறகுதான் ராகு நல்லது செய்வாரா, கெட்டது செய்வாரா என்ற முடிவுக்கு வர முடியும்.

அப்படி நன்கு ஆராய்ந்து ராகுவால் தோஷம் என்று தெரியவந்தால், உரிய பரிகார வழிபாடுகளைச் செய்யுங்கள். அத்துடன், தனிமையில் அமர்ந்து முழுமனதுடன் இஷ்ட தெய்வத்தை தியானம் செய்து வாருங்கள். பாதிப்புகள் குறையும்!

சூரியனின் அருள்பெற்ற ஞானி!

பிறக்கும் நேரத்தை எப்படிக் கணிப்பார்கள்?

முன்னோர்கள் இதை ஐந்துவிதமாக நிர்ணயித்தார்கள். முதலாவ தாக தம்பதி `சந்திக்கும்’ காலம். இதைத் தெளிவாக வரையறுக்க இயலாது. அடுத்ததாக 5-வது மாதத்தில் கருவுக்கள் சைதன்யம் (உயிர்) நுழையும் நேரம். இதை சைதன்யப் பிரவேசம் என்பார்கள். எனினும், இதையும் எந்த நேரத்தில் நிகழ்ந்தது என்று துல்லியமாகச் சொல்வது சிரமம்.

அடுத்தது... முந்நீர்க் குடம் விழுகிறதே (கர்ப்பப் பையிலிருந்து குழந்தை வெளியேறிவிட்டது என்று பொருள்)... அந்தக் காலத்தைக் கணிப்பது என்று வைத்திருந்தார்கள். எனினும் முந்நீர்க்குடம் விழுந்தும் வெகுநேரம் கழித்தே குழந்தை வெளியே வருகிறது. இதிலும் நேரம் சம்பந்தப்பட்ட சந்தேகம் எழும் வாய்ப்பு உண்டு.

ஆகவே, குழந்தையின் தலை வெளியே தெரியும் நேரத்தை வைத்துக் கணித்தார்கள். இதற்கு சீர்ஷோதயம் என்று பெயர். எனினும் தலை வெளியே வருவதற்கும் குழந்தை முழுவதும் வெளியே வருவதற்கும் இடையில் நேர இடைவெளி இருந்ததால், இதையும் துல்லியமாகக் கருத்தில் கொள்ள இயலவில்லை.

எனவே, குழந்தை தாயைவிட்டு முழுமையாகப் பிரிந்து வெளியெ வருகிற `பூஸ்பரிசம்’ எனும் நேரத்தை வைத்தே ஜனன ஜாதகத்தைக் கணிக்க ஆரம்பித்தார்கள்!