Published:Updated:

கடன்கள் விரைவில் அடைபடும்!

கடன் பிரச்னை தீரும்
பிரீமியம் ஸ்டோரி
கடன் பிரச்னை தீரும்

`விஞ்ஞான ஜோதிடர்' ஆம்பூர் வேல்முருகன்

கடன்கள் விரைவில் அடைபடும்!

`விஞ்ஞான ஜோதிடர்' ஆம்பூர் வேல்முருகன்

Published:Updated:
கடன் பிரச்னை தீரும்
பிரீமியம் ஸ்டோரி
கடன் பிரச்னை தீரும்

கடன் என்பது மனித வாழ்க்கையில் தவிர்க்க முடியாத ஒன்றாக இக்காலத்தில் மாறிவிட்டது. கல்விக்கடன், தொழில் கடன், வீட்டுக் கடன், வாகனக் கடன் என்று பல்வேறு விதமாக இக்காலத்தில் கடன் வாங்கும் சூழல் அதிகரித்துவிட்டது. இந்த நிலையில், கடன் பிரச்னையால் வாழ்வே சுமையாகும் நிலைக்கு நாம் ஆளாகி விடக்கூடாது அல்லவா? அதற்கு ஜோதிடம் வழிகாட்டுகிறது.

கடன்கள் விரைவில் அடைபடும்!

கடன் வாங்கும் சூழல், எப்போது கடன் வாங்கலாம், எப்போது கடனை அடைக்கலாம் இதுபோன்ற விஷயங்களை, ஜோதிடரீதியாக ஜாதக அமைப்பினை ஆய்ந்தறிந்து, அதற்கேற்ப செயல்படுத்தும்போது கடன் என்பது பெரும் பிரச்னையாக மாறாமல் தற்காத்துக்கொள்ளலாம்.

ஜோதிட ரீதியாக ஒருவருக்கு ஆறாம் பாவம் வேலை செய்யும்போது கடன் பிரச்னைகள் அதிகமாகும். ஆறாம் பாவமும் எட்டாம் பாவமும் இணைந்து வேலை செய்யும்போது, நீண்ட கால கடன் வந்து சேரும். அதேபோல் லக்னம், ஐந்தாம் பாவம், பதினோராம் பாவம் வேலை செய்யும்போது, கடன் பிரச்னையிலிருந்து விடுதலை கிடைக்கும். இனி ஜோதிட ரீதியான சில எளிய வழி முறைகளைக் காண்போம்.

கடனை அடைப்பதற்கு உகந்த நாள்கள்:

நாம் வாங்கிய கடனில் சிறு பகுதியை செவ்வாய்க் கிழமையில் செவ்வாய் ஓரையில் திருப்பிக் கொடுத்தால், முழுக்கடனும் விரைவில் அடைபடும்.

ஜோதிடத்தில் கால புருஷ தத்துவ ரீதியாக, சூரியன் ஐந்தாம் இடத்துக்குச் சம்பந்தம் பெறுவதால், ஞாயிற்றுக்கிழமைகளில் வாங்கிய கடனில் ஒரு பகுதியைக் கொடுத்தால், முழுக் கடனும் விரைவில் அடையும்.

செவ்வாய் பகவான் லக்ன சம்பந்தம் பெறுவ தால், செவ்வாய்க்கிழமையிலும் கடனை அடைக்கலாம்.

சனி பகவான் 11-ஆம் இடத்திற்கு தொடர்பு கொள்வதால் சனிக்கிழமையில் கடன் அடைப் பது சிறப்பு.

அதேபோல் சூரியன் மற்றும் சந்திர கிரகணத் தின்போது, கிரகணம் விடும் நேரத்தில் கடனை திருப்பிக் கொடுப்பது விசேஷம். இதனால் மற்ற கடன்களும் விரைவில் அடைபடும்.

அதேபோல், திதிகளில் பிரதமை, பஞ்சமி, அஷ்டமி, ஏகாதசி ஆகியவை கடன் அடைக்க உகந்தவை.

செவ்வாய்க்கிழமைகளில் இணைந்து வரும் பிரதோஷக் காலத்தில் கடன் தொகையைத் திருப்பிக் கொடுக்கலாம்.

நவமி திதியுடன் கூடிய செவ்வாய்க்கிழமை, சதுர்த்தி திதியுடன் கூடிய சனி மற்றும் ஞாயிற் றுக் கிழமைகள் கடனை அடைக்க உகந்த நாள்களாகும்.

மேஷ லக்னத்தில் வரும் அசுவினி நட்சத்திர காலத்திலும், விருச்சிக லக்னத்தில் வரும் அனுஷ நட்சத்திர காலத்திலும் கடனில் ஒரு பகுதியைத் திரும்பக் கொடுப்பதால், விரைவில் கடன் தீரும்.

ரோகிணி, கேட்டை, பூராடம், திருவோணம் ஆகிய நட்சத்திர நாள்களில் கடனில் சிறிதளவு அடைக்க, விரைவில் முழு கடன் தீரும். அதேபோல் செவ், சனி, சூரிய ஓரைகள் கடனை அடைப்பதற்குச் சிறந்தவை!

ரோகினி, அனுஷம் நட்சத்திரத்தில் கடன் வாங்கினால் அந்தக் கடனை எளிதில் திரும்ப அடைக்கலாம்.

புதன்கிழமைகளில் கடன் வாங்குவதைத் தவிர்க்க வேண்டும். புதன் கிழமையில் வாங்கும் கடன் மேலும் மேலும் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் மிக மிக அதிகம்.

கிருத்திகை நட்சத்திரம் கடன் கொடுக்க உகந்த தினம். கிருத்திகை நட்சத்திர நாளில் கடன் கொடுக்கும்போது, அந்தக் கடன் எளிதில் திரும்ப கிடைக்கும்.

தீராத கடன்கள் விரைவில் அடைபட, செவ்வாய், சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் நரசிம்மர் ஆலயங்களில் நெய் தீபம் இட்டு வழிபட வேண்டும். அதேபோல், ஒருமுறையேனும் திருச்சேறை சாரபரமேஸ்வரர் ஆலயம் சென்று, அங்கு அருளும் ருண விமோசன லிங்கேஸ்வரரை தரிசித்து வழிபட்டு வாருங்கள்; கடன் பிரச்னைகள் அனைத்தும் விரைவில் நீங்கும்.செல்வகடாட்சம் நிறைந்திருக்க...

செல்வகடாட்சம் நிறைந்திருக்க

வாஸ்துபடி பணம் எப்போதும் ஒருவரின் கையில் தவழ்ந்து கொண்டிருக்க வேண்டுமென்றால் வீட்டின் வடக்குச்சுவர் ஜன்னலுடன் அமைந்திருக்க வேண்டும். காற்றோட்டமும் சூரிய வெளிச்சமும் நிறைந்த வீடுகளில் லட்சுமி வாசம் நிலைத்திருக்கும்.

தென்மேற்கு திசையில் பணப்பெட்டி, பீரோ ஆகியவற்றை வைக்கலாம். வடமேற்கு மூலை யில் பணத்தை வைக்கக் கூடாது. வடமேற்கில் பீரோ, பணப்பெட்டி முதலியவை இருந்தால், பணம் வருவதும், போவதுமாக இருப்பதுடன், சேமிக்க முடியாததுடன் கடன் காரனாகவும் மாற்றி துன்பப்பட வைக்கும்.

உங்களுக்கு வருகிற பணத்தை சிவப்பு நிறத் துணியில் சுற்றி மரப்பெட்டியில் வைக்கும்போது, அந்தப் பணம் பல மடங்காகப் பெருகும் என்பது நம்பிக்கை.

பணத்தை ஒருவரிடம் கொடுக்கும்போது பணத்தை மடித்துக் கொடுக்க வேண்டும். மடிப்பு அவர்களின் பக்கமும் திறப்பு நம்முடைய பக்கமும் இருக்கும்படி கொடுங்கள். பணப்பெட்டியில் எப்போதும் ஒரு நறுமணம் இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism