Published:Updated:

அன்பே வடிவான தெய்வங்களின் திருக்கரங்களில் ஏன் ஆயுதங்கள்? - அறிந்துகொள்ள வேண்டிய தாத்பர்யங்கள்!

வேல் வழிபாடு
வேல் வழிபாடு

அன்பே வடிவான தெய்வங்களின் திருக்கரங்களில் ஏன் ஆயுதங்கள்? - அறிந்துகொள்ள வேண்டிய தாத்பர்யங்கள்!

இன்றைய பஞ்சாங்கம்

26. 5. 21 வைகாசி 12 புதன்கிழமை

திதி: பௌர்ணமி மாலை 5.30 வரை பிறகு பிரதமை

நட்சத்திரம்: அனுஷம்

யோகம்: சித்தயோகம்

ராகுகாலம்: பகல் 12 முதல் 1.30 வரை

எமகண்டம்: காலை 7.30 முதல் 9 வரை

நல்லநேரம்: காலை 9.30 முதல் 10.30 வரை / மாலை 4.30 முதல் 5.30 வரை

மகாவிஷ்ணு
மகாவிஷ்ணு

சந்திராஷ்டமம்: அசுவினி

சூலம்: வடக்கு

பரிகாரம்: பால்

வழிபடவேண்டிய தெய்வம்: மகாவிஷ்ணு

அன்பே வடிவான தெய்வங்களின் திருக்கரங்களில் ஏன் ஆயுதங்கள்?

கடவுளை அன்பே வடிவானவர் என்று போற்றுகிறார்கள் அடியார்கள். ‘அன்பே சிவம்’ என்பதுதான் ஞானத்தின் உச்சம் என்கின்றன ஞான நூல்கள். ஆனால் தெய்வத்திருவுருக்களில் ஆயுதங்களும் உள்ளன. முருகப்பெருமான் வேலுடனும் அம்பிகை சூலத்துடனும் திருக்காட்சி அருள்வதைக் காண்கிறோம். வேலுக்கு செய்யும் பூஜையை நாம் முருகனுக்கே செய்வதாக பக்தர்கள் கருதுவதும் உண்டு. பக்தர்களுக்குத் துன்பம் ஏற்படும்போது வேலும் சூலமும் சக்கரமும் முந்திவந்து காக்கும் என்பதுதான் ஐதிகம். இப்படி தெய்வங்களின் திருக்கரங்களில் ஆயுதங்கள் ஏந்தியிருப்பதன் தாத்பர்யங்கள் அநேகம். இவை குறித்து அறிந்துகொள்ள கீழே உள்ள வீடியோவைப் பாருங்கள்.

26.5.21

இன்றைய ராசிபலன்

விரிவான இன்றைய ராசிபலன்களை அறிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.

மேஷம்

குழப்பம் : மனதில் தேவையற்ற குழப்பங்கள் அதிகரிக்கும். அதிகரிக்கும் செலவுகள் குறித்த விவாதம் ஏற்படும். இறைவழிபாட்டில் கவனம் செலுத்த வேண்டிய நாள். - டேக் கேர் ப்ளீஸ்!

ரிஷபம்

நிதானம் : பணவரவு காணப்பட்டாலும் செலவுகளும் அதிகரிக்கும். சொல்லிலும் செயலிலும் நிதானம் தேவை. எதிர்பார்த்த உதவிகள் தாமதமாவதால் மனதில் சோர்வு ஏற்படும். - ரிலாக்ஸ் ப்ளீஸ்!

மிதுனம்

உற்சாகம் : தடைகள் விலகும். காரியங்கள் அனுகூலமாக முடியும். மனதில் உற்சாகம் அதிகரிக்கும். எதிரிகளின் சூழ்ச்சிகள் விலகும். - எல்லாம் நன்மைக்கே!

கடகம்

மகிழ்ச்சி : குடும்பத்தில் ஏற்பட்டிருந்த வருத்தங்கள் நீங்கும். மகிழ்ச்சி நிறைந்திருக்கும். நீண்ட நாள் பிரச்னைக்குத் தீர்வு காண்பீர்கள். செலவுகளில் சிக்கனம் தேவை. - ஆல் இஸ் வெல்!

சிம்மம்

சாதகம் : புதிய முயற்சிகளைத் திட்டமிட உகந்த நாள். புதிய முயற்சிகளைக் காலையிலேயே தொடங்கிவிடுவது நல்லது. குடும்பத்தினர் அன்பு மழை பொழிவார்கள். - சாதகமான ஜாதகம் இன்று!

கன்னி

பணவரவு : எதிர்பார்த்த பணவரவு வாய்க்கும். சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்ற முயல்வீர்கள். - என்ஜாய் தி டே!

துலாம்:

பொறுமை : அதிகபட்ச பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டிய நாள். நண்பர்களோடு பேசுவது ஆறுதலாக இருக்கும். குடும்பத்தில் சச்சரவுகள் நீங்கி அமைதி பிறக்கும். - கேர் ஃபுல் ப்ளீஸ்!

விருச்சிகம்

கவனம் : அனைத்தும் அனுகூலமாக இருந்தபோதும் கவனத்துடன் செயல்படுவது நல்லது. புதிய முயற்சிகளில் மிகுந்த எச்சரிக்கை தேவை. எதிர்பார்த்த பண உதவி கிடைப்பதால் மகிழ்வீர்கள்.- நல்லதே நடக்கும்!

தனுசு:

வெற்றி : உற்சாகமான நாள். செலவுகள் அதிகரித்தாலும் அதற்கேற்பப் பணவரவும் இருக்கும். செயல்களில் சின்னச் சின்னத் தடைகள் காணப்பட்டாலும் இறுதியில் சாதகமாகும். - தடை அதை உடை!

மகரம்

அனுகூலம் : அனுகூலமான நாள். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். முயற்சிகளில் வெற்றிகிடைக்கும். உறவினர்களால் சிறு பிரச்னை ஏற்பட்டாலும் பாதிப்பு இருக்காது. - ஆல் தி பெஸ்ட்!

கும்பம்

விவாதம் : அனைத்துவிதத்திலும் சாதகமான நாள் என்றபோதும் அண்டை வீட்டாரோடு வாக்குவாதம் ஏற்ப வாய்ப்பிருக்கும் நாள். முடிந்தவரை விட்டுக்கொடுத்துப் போவது நல்லது. - நோ ஆர்கியுமென்ட்ஸ்!

மீனம்

சிந்தனை : சிந்தித்துச் செயல்படவேண்டிய நாள். புதிய திட்டங்களை வகுப்பீர்கள். கொடுக்கல் வாங்கலில் கூடுதல் கவனம் தேவை. - லெஸ் டென்ஷன் மோர் வொர்க்!

அடுத்த கட்டுரைக்கு