தொடர்கள்
திருத்தலங்கள்
திருக்கதைகள்
Published:Updated:

செய்யக்கூடாத விஷயங்கள்!

விளக்கு
பிரீமியம் ஸ்டோரி
News
விளக்கு

சூரியனை உதிக்கும் வேளையிலும், உச்சியில் இருக்கும்போதும், அஸ்தமிக்கும் போதும், கிரகண காலத்திலும் பார்க்கக் கூடாது.

இல்லறத்தில் ஈடுபடுவோருக்கான அறங்களை சாஸ்திர நூல்கள் விரிவாக விளக்கியுள்ளன. தனக்குக் கிடைத்த பொருளைக்கொண்டு திருப்தி அடைய வேண்டும்.

தினமும் விளக்கேற்றி வழிபடுவது முதலான தெய்வக்கடனையும், உரிய காலங்களில் - நாள்களில் பித்ருக் கடன்களையும் முறைப்படி நிறைவேற்ற வேண்டும். அதிதி உபசாரம் அதாவது வீட்டுக்கு வரும் விருந்தினரை உபசரிப்பதும் தன்னை அண்டியிருக்கும் உறவுகளை யும் உயிர்களையும் பராமரிப்பதும் இல்லறத் தானின் முக்கியக் கடமை.

மல நிவர்த்தி, பல் துலக்குதல், நீராடுதல், எண்ணெய் இடுதல், தெய்வ வழிபாடுகள் முதலானவற்றை பகல் 15 நாழிகைக்குள் செய்ய வேண்டும்.

மாதா, பிதா, குரு, பெரியோர் வீட்டுக்கு வந்தால் அவர்களை எதிர்கொண்டு அழைத்து ஆசனத்தில் இருத்தி, கூப்பிய கரத்துடன் அவர்களுக்கு உபசாரங்கள் செய்து, அவர்கள் விடைபெறும்போது, குறிப்பிட்ட தூரம் பின்சென்று வழியனுப்ப வேண்டும்.

இப்படி அவசியம் கடைப்பிடித்தொழுக வேண்டிய அறங்களைக் குறிப்பிடும் சாஸ்திர நூல்கள், தவிர்க்கவேண்டிய விஷயங்களையும் கூறுகிறது.

விளக்கு
விளக்கு

சூரியனை உதிக்கும் வேளையிலும், உச்சியில் இருக்கும்போதும், அஸ்தமிக்கும் போதும், கிரகண காலத்திலும் பார்க்கக் கூடாது. மழை பெய்யும் காலத்தில் ஓடக் கூடாது. கன்று கட்டிய கயிற்றைத் தாண்டக் கூடாது. ஒரு வஸ்திரத்துடன் மட்டும் அமர்ந்து உண்ணக் கூடாது. அதேபோல் வஸ்திரம் அணியாமல் நீராடக் கூடாது.

நெருப்பை வாயால் ஊதி அணைக்கக் கூடாது. அசுத்த வஸ்துகளை நெருப்பில் போடக் கூடாது. நெருப்பைத் தாண்டுதலும் கூடாது.

சந்தியா காலங்களில் சாப்பிடவும், வழி நடக்கவும், தூங்கவும் கூடாது. ஆற்று நீரில் எச்சில்பட்ட வஸ்து, விஷ வஸ்துகள் ஆகியவற்றைப் போடக் கூடாது.

பசு நீரருந்தும்போதும் கன்றுக்குப் பால் கொடுக்கும்போதும் தடுக்கக் கூடாது. தருமம் அறிந்தோர் இல்லாத கிராமம், கோயில் இல்லாத ஊர்களில் வசிக்கக் கூடாது.

பின்னமான மண் பாத்திரத்திலும் மனத்துக்கு ஒப்புதல் இல்லாத பாத்திரத்திலும் அன்னம் வைத்து உண்ணக் கூடாது.

- நமசிவாயம், சென்னை-44