Published:Updated:

உத்தரகோசமங்கை மரகத நடராஜருக்கு சந்தனக்காப்பு களையப்பட்டது... பக்தர்கள் சிலிர்ப்போடு தரிசனம்!

உத்தரகோசமங்கை
News
உத்தரகோசமங்கை

இன்று பகல் 12 மணி முதல் இரவு வரை மட்டுமே சந்தனம் இல்லாமல் பச்சை மரகத நடராஜரைத் தரிசிக்க முடியும். இது ஒரு அபூர்வ தரிசனம் ஆகும் . நாளை 20-ந்தேதி அதிகாலை ஆருத்ரா மகா அபிஷேகத்திற்கு பின், மீண்டும் சந்தனக்காப்பு சாத்தப்படும்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள புண்ணியத்தலங்களில் ஒன்றாக விளங்கும் உத்தரகோசமங்கை மங்களநாதசுவாமி கோயிலில் இன்று (டிச.19ம் தேதி) ஆருத்ரா தரிசன நிகழ்ச்சி தொடங்கியது. காலை 10.30 மணிக்கு மரகத நடராஜருக்கு சந்தனக்காப்பு களைதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து மரகத நடராஜருக்கு சந்தனாதி தைலம், கஸ்தூரி தைலம் உள்ளிட்ட 32 வகையான வாசனை திரவியங்கள் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது,

உத்தரகோசமங்கை
உத்தரகோசமங்கை

இன்று பகல் 12 மணி முதல் இரவு வரை மட்டுமே சந்தனம் இல்லாமல் பச்சை மரகத நடராஜரைத் தரிசிக்க முடியும். இது ஒரு அபூர்வ தரிசனம் ஆகும் . நாளை 20-ந்தேதி அதிகாலை ஆருத்ரா மகா அபிஷேகத்திற்கு பின், மீண்டும் சந்தனக்காப்பு சாத்தப்படும்.

மூர்த்தி, தீர்த்தம், ஸ்தலம் என்ற சிறப்புகளை கொண்டுள்ள இத்திருக்கோயிலில். இலந்தை மரத்தின் அடியில் சுயம்புவாய் தோன்றியவர் மங்களநாதர். இங்குள்ள மங்களநாயகி அம்மன் பெண்களுக்கு மாங்கல்ய பாக்கியம் தருபவளாக அருள்கிறாள்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

நடராஜப் பெருமாள் சிதம்பரத்தில் அம்பலத்தில் ஆடியதாகவும் மதுரையில் கால் மாறி ஆடியதாகவும், உத்தரகோசமங்கையில் அறையில் ஆடியதாகவும் வரலாறு. மற்ற கோயில்களில் நடராஜரின் கல்விக்கிரகங்கள் பஞ்சலோக விக்கிரகங்களையே காண முடியும். ஆனால் இங்கோ பச்சை மரகதக் கல்லால் உருவாக்கப்பட்ட நடராஜர் விக்கிரகம் இருக்கிறது. மாணிக்கவாசகரால் பாடல் பெற்றது இத்தலம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த மரகத நடராஜர் விக்கிரகம் ஆறு அடி உயரம் உடையது. இந்த விக்கிரகத்தின் வீரியத்தை பக்தர்கள் தாங்க முடியாது என்பதால் ஆண்டு முழுவதும் சந்தனம் பூசப்பட்டிருக்கும். மார்கழி ஆருத்ரா தரிசனத்தன்று மட்டும் திருமேனி மீது சாத்தப்பட்ட சந்தனக்காப்பு களையப்படும்.

உத்தரகோசமங்கை
உத்தரகோசமங்கை

நடராஜரிடம் இருந்து களைந்த சந்தனத்தை நீரில் கரைத்து உட்கொண்டால் நோய் நீங்கும். புத்திரபாக்கியம் உண்டாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. ஆகவே இந்த சந்தனத்தை பெற்று தரிசனம் செய்ய, இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வருவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.