Published:Updated:

மூன்று வகை ஆயுள்ரேகை!

ஆயுள்ரேகை
பிரீமியம் ஸ்டோரி
ஆயுள்ரேகை

சிலரின் உள்ளங்கையில் ஆயுள் ரேகை குரு மேட்டிலிருந்துகூட ஆரம்பமாகலாம்

மூன்று வகை ஆயுள்ரேகை!

சிலரின் உள்ளங்கையில் ஆயுள் ரேகை குரு மேட்டிலிருந்துகூட ஆரம்பமாகலாம்

Published:Updated:
ஆயுள்ரேகை
பிரீமியம் ஸ்டோரி
ஆயுள்ரேகை

ள்ளங்கையிலுள்ள ரேகைகளில் முக்கியத்துவம் வாய்ந்தது ஆயுள் ரேகை. கட்டை விரலுக்கும் ஆள்காட்டி விரலுக்கும் நடுவில் உள்ள பகுதியில் தொடங்கி மணிக்கட்டு ரேகை வரையிலும் செல்வது ஆயுள் ரேகையாகும்.

ஆயுள் ரேகை ஆழமாக, தெளிவாக, துண்டுபடாமல் செவ்வாய் மேடு அல்லது குரு மேடு முதல் மணிக்கட்டு வரை அமைந்திருந்தால், அது மிகச்சிறந்த ஆயுள் ரேகை என்பதைக் குறிக்கும் (படம் 1). இத்தகைய அமைப்புடன் ஆயுள் ரேகை இருந்தால் நீண்ட ஆயுள், திட ஆரோக்கியம், சௌகர்யமான ஜீவனம் அமையும்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஆயுள் ரேகையின் நீளத்தையும் தொடர்ச்சியான அமைப்பையும் வைத்து ஒருவருடைய ஆயுள் காலம் எத்தனை ஆண்டுகள் இருக்கும் என்பதைச் சொல்லலாம். ஆயுள் ரேகை ஆங்காங்கே அறுபட்டு, வெட்டுப்பட்டு அல்லது தொடர்பில்லாமல் இருக்கக்கூடாது. அப்படி இருப்பின் எந்தெந்த இடங்களில் தொடர்பு அறுபட்டு உள்ளதோ, அந்த இடம் குறிக்கும் வயதில் உடல்நலக் குறைவு, ஆயுள்கண்டம் ஏற்பட வாய்ப்பு உண்டு (படம் 2). ஆயுள் ரேகைக்குப் பக்கபலமாக செவ்வாய் ரேகை அல்லது சுக்கிர ரேகை இருந்தால், அது ஆயுள் ரேகையின் பலத்தை அதிகப்படுத்தும்.

ஆயுள்ரேகை
ஆயுள்ரேகை

சிலரின் உள்ளங்கையில் ஆயுள் ரேகை குரு மேட்டிலிருந்துகூட ஆரம்பமாகலாம் (படம் 3). அதனால், ரேகையின் நீளம் அதிகமாக இருக்கும். இதுவும் நீண்ட ஆயுளையும் சிறப்பான வாழ்க்கையையும் குறிக்கும். சிலருக்கு ஆயுள் ரேகையும் புத்தி ரேகையும் ஒன்றாகச் சேர்ந்து அமைந்திருக்கும். அத்தகைய ஆயுள் ரேகை, குரு மேட்டுக்குச் சமீபமாகவோ அல்லது குரு மேட்டிலிருந்தோ ஆரம்ப மானால், அது மிகச் சிறந்த வாழ்க்கை அமைப்பையும், தீர்க்க ஆயுளை யும், ஆரோக்கியமான வாழ்வையும் குறிக்கும்.

- நாராயண ஸ்வாமி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism