Published:Updated:

வாழ்வைத் தீர்மானிக்கும் 3 கர்மாக்கள்... விடுபட ஆன்மிகம் காட்டும் வழிகள்!

கர்மாவை நீக்கும்  சிவ நாமம்
கர்மாவை நீக்கும் சிவ நாமம்

வாழ்வைத் தீர்மானிக்கும் 3 கர்மாக்கள்... விடுபட ஆன்மிகம் காட்டும் வழிகள்!

இன்றைய பஞ்சாங்கம்

23. 6. 21 ஆனி 9 புதன்கிழமை

திதி: சதுர்த்தசி

நட்சத்திரம்: அனுஷம் காலை 10.54 வரை பிறகு கேட்டை

யோகம்: சித்தயோகம்

ராகுகாலம்: பகல் 12 முதல் 1.30 வரை

எமகண்டம்: காலை 7.30 முதல் 9 வரை

நல்லநேரம்: காலை 9.30 முதல் 10.30 வரை / மாலை 3 முதல் 4 வரை

சரஸ்வதி தேவி
சரஸ்வதி தேவி

சந்திராஷ்டமம்: அசுவினி காலை 10.54 வரை பிறகு பரணி

சூலம்: வடக்கு

பரிகாரம்: பால்

வழிபடவேண்டிய தெய்வம்: சரஸ்வதி தேவி

வாழ்வைத் தீர்மானிக்கும் 3 கர்மாக்கள்... விடுபட ஆன்மிகம் காட்டும் வழிகள்!

இந்த உலகில் நாம் அனுபவிக்கும் இன்பங்கள் மற்றும் துன்பங்கள் ஏன் ஏற்படுகின்றன என்ற கேள்வியை முன்வைத்தால் அதற்கு நம் ஆன்மிகம் சொல்லும் பதில் ‘கர்மா.’ அதாவது முன்வினை. பிறப்பெடுக்கும்போதே நாம் கர்மாக்களுடனேயே பிறக்கிறோம். அந்தக் கர்மாக்களே நம் வாழ்வின் நல்வினை தீவினைகளுக்குக் காரணமாகின்றன. கர்மா நம் முன் ஜன்மத்தின் செயல்களால் உருவானது மட்டுமல்ல... அது ஏழேழ் ஜன்மங்களின் தொடர்ச்சி என்கின்றன ஞான நூல்கள். அப்படிப்பட்ட கர்மாக்களைப் புரிந்துகொள்வதற்காக மூன்றுவிதமாக அவற்றைப் பகுத்துக் கூறுகின்றன. மூன்றுவிதமான கர்மாக்கள் எவை? இந்த ஜன்மத்தில் எதைச் செய்வதன் மூலம் இந்த கர்மாக்களிலிருந்து விடுதலை அடையமுடியும் என்பதற்கான ஆன்மிகத்தின் பதிலை அறிந்துகொள்ள கீழே உள்ள வீடியோவைப் பாருங்கள்.

இன்றைய ராசிபலன்

விரிவான இன்றைய பலன்களை அறிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.

மேஷம்:

பொறுமை : சொல்லிலும் செயலிலும் பொறுமை காக்கவேண்டிய நாள். யாரோடும் விவாதம் வேண்டாம். இறைவழிபாட்டில் கவனம் செலுத்துங்கள். - எல்லாம் அவன் செயல்!

ரிஷபம்:

சாதகம் : முக்கிய முடிவுகள் எடுக்க உகந்த நாள். முயற்சிகளில் வெற்றியும் வழக்குகளில் சாதகமும் உண்டாகும். மகிழ்ச்சியான நாள். - சாதகமான ஜாதகம் இன்று!

மிதுனம்

உற்சாகம் : மனதில் உற்சாகமும் உடலில் சுறுசுறுப்பும் நிறைந்திருக்கும் நாள். சகோதர உறவுகளால் சிறு பிரச்னைகள் ஏற்பட்டாலும் எளிதாக சமாளிப்பீர்கள். - ரிலாக்ஸ் ப்ளீஸ்!

கடகம்

ஆரோக்கியம் : ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்த வேண்டிய நாள். சின்னச் சின்னக் குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். பணிச்சுமையால் உடல் சோர்வும் அசதியும் உண்டாகும் - ஹெல்த் இஸ் வெல்த்!

சிம்மம்:

நன்மை : எதிர்பார்த்த பணவரவு இருப்பதால் மகிழ்ச்சியும் நிம்மதியும் பிறக்கும். உறவினர்கள் உதவுவார்கள். வாகனத்தில் செல்லும்போது மட்டும் கவனம் தேவை. - நாள் நல்ல நாள்!

கன்னி:

செலவு : செலவுகள் அதிகரிப்பது குறித்த கவலை ஏற்படும். முடிந்தவரை சிக்கனமாக இருங்கள். குடும்பத்திலிருந்த கசப்புகள் நீங்கி மகிழ்ச்சி உண்டாகும். - செலவே சமாளி!

துலாம்:

அனுகூலம் : எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாகும். பணஉதவிகள் தேடிவரும். முடிந்தவரை சிக்கன நடவடிக்கையில் இறங்குங்கள். - என்ஜாய் தி டே!

விருச்சிகம்:

துணிவு : மனதில் தெம்பும் நம்பிக்கையும் பிறக்கும். முக்கிய முடிவுகளைத் துணிந்து எடுப்பீர்கள். அதனால் நன்மையே உண்டாகும். பணவரவு பிற்பகலுக்கு மேல் கிடைக்கும். - துணிவே துணை!

தனுசு:

பிரச்னை :

குழப்பங்கள் நிறைந்த நாள். சின்னச் சின்னப் பிரச்னைகள் வந்துபோகும். நம்பிக்கையோடு செயல்படுங்கள். வெற்றி உண்டாகும். - டேக் கேர் ப்ளீஸ்!

மகரம்:

மகிழ்ச்சி : பணிச்சுமை அதிகரித்தாலும் மனதில் மகிழ்ச்சியும் உற்சாகமும் நிறைந்திருக்கும். பணவரவுக்கு வாய்ப்புண்டு. குடும்பத்தினர் உங்கள் முயற்சிகளுக்கு உதவுவார்கள். - ஜாலி டே!

கும்பம்:

நிதானம் : சாதகமான நாள். ஆனாலும் முயற்சிகளில் கூடுதல் கவனம் தேவை. பெரியவர்களின் ஆலோசனை கேட்டுச் செயல்படுவதன் மூலம் வெற்றிகிடைக்கும். - ஆல் தி பெஸ்ட்!

மீனம்:

தெளிவு : நேற்றுவரையிருந்த குழப்பங்கள் தீரும். முடிந்தவரை யாரோடும் விவாதத்தில் ஈடுபட வேண்டாம். குடும்பத்தில் மகிழ்ச்சியும் அன்பும் நிறைந்திருக்கும். - ஆல் இஸ் வெல்!

அடுத்த கட்டுரைக்கு