Published:Updated:

பூஜை அறை எப்படி இருக்க வேண்டும்? - வாஸ்து முதல் வழிபாடுவரை அறிந்துகொள்ள 8 குறிப்புகள்!

வாஸ்து
வாஸ்து

பூஜை அறை எப்படி இருக்க வேண்டும்? - வாஸ்து முதல் வழிபாடுவரை அறிந்துகொள்ள 8 குறிப்புகள்!

இன்றைய பஞ்சாங்கம்

9. 5. 21 சித்திரை 26 ஞாயிற்றுக்கிழமை

திதி: திரயோதசி இரவு 9.20 வரை பிறகு சதுர்த்தசி

நட்சத்திரம்: ரேவதி இரவு 7.13 வரை பிறகு அசுவினி

யோகம்: அமிர்தயோகம் இரவு 7.13 வரை பிறகு சித்தயோகம்

ராகுகாலம்: மாலை 4.30 முதல் 6 வரை

எமகண்டம்: பகல் 12.00 முதல் 1.30 வரை

நல்லநேரம்: காலை 6 முதல் 7 வரை/ பகல் 3.30 முதல் 4.30 வரை

சிவபெருமான்
சிவபெருமான்

சந்திராஷ்டமம்: பூரம் இரவு 7.13 வரை பிறகு உத்திரம்

சூலம்: மேற்கு

பரிகாரம்: வெல்லம்

வழிபடவேண்டிய தெய்வம்: சிவபெருமான்

இன்று: பிரதோஷ விரதம். சிவ வழிபாடு நலம் தரும்.

பூஜை அறை எப்படி இருக்க வேண்டும்?

ஒரு வீட்டில் பூஜை அறை எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து வாஸ்து சாஸ்திரம் நிறைய சொல்கிறது. பூஜையறையைப் பராமரிப்பதும் முறையாக வழிபடுவதும் மிகவும் அவசியம். யார் வீட்டில் பூஜை அறை தூய்மையாகவும் முறையாகவும் பராமரிக்கப்படுகிறதோ அந்த வீட்டில் நேர்மறையான அதிர்வுகள் நிறைந்திருக்கும் என்பது அனுபவம் சொல்லும் பாடம். ஒரு வீட்டில் பூஜை அறை எங்கு அமைய வேண்டும்? எப்படி அமையவேண்டும் என்னும் கேள்விக்கு வீட்டின் ஈசானிய பகுதியில் பூஜை அறை இருக்க வேண்டும் என்கிறது வாஸ்து. பூமியின் மொத்த சாய்மானமும் வடகிழக்காக உள்ளது. அதனால், அண்டவெளியிலிருந்து வரும் சக்தி அலைகள் சாய்மானமாக உள்ள ஈசானியம் என்ற வடகிழக்கு வழியாக நுழைகின்றன.

சக்திகளின் தொடக்க முனையாக உள்ள ஈசானியத்தை இறைவனின் இடமாக வாஸ்து குறிப்பிட்டுள்ளது. அதனால் பூஜை அறையானது சதுர வடிவத்தில் ஒழுங்கான அமைப்பில் இருக்க வேண்டும் என்கிறது வாஸ்து சாஸ்திரம். சதுரமான அமைப்பில் நான்கு திக்குகளும் சம அளவு கொண்டதாக இருந்தால் மிகவும் சிறப்பு என்றும் அங்கு உண்டாகும் நேர்மறை அதிர்வுகள், சூழல் போன்றவை மனம் ஒன்றவும் ஆன்மிக வழிபாடுகள் சிறக்கவும் உதவும் என்கிறது சாஸ்திரம்.. இதுபோன்று பல குறிப்புகளை அறிந்துகொள்ள கீழே உள்ள வீடியோவைப் பாருங்கள்.

இன்றைய சுருக்கமான ராசிபலன்

விரிவான இன்றைய ராசிபலன்களை அறிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.

மேஷம்

செலவு : மகிழ்ச்சியான நாள். எதிர்பார்த்த பணம் கிடைக்கும் என்றாலும் செலவுகள் மிகவும் அதிகரிக்கும். சிலர் நண்பர்களிடம் கடன் வாங்கவும் நேரலாம். - சிக்கனம் தேவை இக்கணம்!

ரிஷபம்

அனுகூலம் : செயல்கள் அனுகூலமாகும். குடும்பத்தினர் முயற்சிகளுக்கு ஆதரவாக இருப்பார்கள். மாலை வேளையில் நண்பர்கள் மூலம் பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. - என்ஜாய் தி டே!

மிதுனம்

வெற்றி : மனதில் பக்தி நிறைந்திருக்கும். வேலைகளை விரைந்து முடிப்பீர்கள். எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும். பணிச்சுமை குறைந்து உற்சாகமாவீர்கள். - வெற்றி நிச்சயம்!

கடகம்

விவாதம் : எதிர்பார்த்த உதவிகளும் தகவல்களும் பிற்பகலுக்கு மேல் கிடைக்கலாம். சிலருக்கு உடல் உபாதைகள் ஏற்படலாம். விவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. - நோ ஆர்கியுமென்ட்ஸ்!

சிம்மம்

பிரச்னை : தேவையற்ற பிரச்னைகளில் தலையிட வேண்டாம். கண்டும் காணாமல் விடுங்கள். சமூக ஊடகங்களில் கருத்திடுவதைத் தவிருங்கள். இறைவழிபாடு அவசியம் - கேர் ஃபுல் ப்ளீஸ்!

கன்னி

நன்மை : நன்மைகள் அதிகரிக்கும். எதிர்பார்த்த சுபச்செய்தி வந்து சேரும். குடும்பத்தினர் உங்கள் மனம் மகிழும்படி நடந்துகொள்வார்கள். பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும். - நாள் நல்ல நாள்

துலாம்:

துணிச்சல் : மனதில் துணிச்சல் அதிகரிக்கும். காரியங்கள் அனுகூலமாகும். செயல்கள் வெற்றியாகும். குடும்பத்தினரின் தேவைகளை விரைந்து நிறைவேற்றுவீர்கள். - துணிவே துணை!

விருச்சிகம்

கவனம் : வழக்கமான பணிகளையும் கவனத்தோடு செய்துவாருங்கள். குடும்பத்தினரிடம் கோபம் காட்ட வேண்டாம். உறவினர்கள் நண்பர்களிடம் ஆதாயம் ஏற்படும். - டேக் கேர் ப்ளீஸ்!

தனுசு:

குழப்பம் : மனதில் சின்னச் சின்னக் குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். குடும்பத்தில் தேவையில்லாமல் பேச வேண்டாம். பொறுமையும் நிதானமும் தேவைப்படும் நாள். - ரிலாக்ஸ் ப்ளீஸ்!

மகரம்

சாதகம் : புதிய முயற்சிகளைத் திட்டமிடலாம். அவை எதிர்காலத்தில் சாதகமாகும். உறவினர்களால் அனுகூலம் உண்டாகும்.பணவரவுக்கும் வாய்ப்புண்டு. - சாதகமான ஜாதகம் இன்று!

கும்பம்

இழுபறி : செயல்களில் சிறிது இழுபறி காணப்படும். சின்னச் சின்னப் பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும். வராது என்று நினைத்த கடன் திரும்பக் கிடைப்பதும் ஆறுதலாக இருக்கும். - சவாலே சமாளி!

மீனம்

பொறுமை : அதிக அளவில் பொறுமை தேவைப்படும் நாள். உறவுகளிடையே வார்த்தைகளால் வம்பு வரும். குடும்பத்தினரின் ஆதரவு ஆறுதல் தரும். - லெஸ் டென்ஷன் மோர் வொர்க்!

அடுத்த கட்டுரைக்கு