Published:Updated:

துலாம் ராசி அன்பர்களே!

ஶ்ரீசனி பகவான்
பிரீமியம் ஸ்டோரி
ஶ்ரீசனி பகவான்

தர்ம சிரேஷ்டர் சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

துலாம் ராசி அன்பர்களே!

தர்ம சிரேஷ்டர் சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

Published:Updated:
ஶ்ரீசனி பகவான்
பிரீமியம் ஸ்டோரி
ஶ்ரீசனி பகவான்

ராசிச் சக்கரத்தின் 180 முதல் 210 வரையிலான ஆரங்களை உள்ளடக் கியது துலாம். அதிபதி சுக்கிரன். சூரியன் இந்த ராசியில் நுழையும் வேளை யில், இரவு - பகல் ஒரே அளவில் தென்படும். அதன்பிறகு பகல் நேரம் குறைந்து, இரவின் அளவு அதிகரிக்கும். இந்த ராசியின் அடையாளம் தராசு. சனியும் புதனும் வலுவாக இருந்தால், நீதியில் நிலைத்திருக்கும் இயல்பு இந்த ராசிக்காரர்களிடம் இருக்கும்.

துலாம் ராசி அன்பர்களே!

இந்த ராசியில் சனி உச்சனாக இருப்பார். சூரியன் நீசம் பெறுவார். சந்திரன், செவ்வாய், குரு மூவருக்கும் இது சத்ரு க்ஷேத்திரம். சனி உழைப்பின் சின்னம். ஆகவே, இந்த ராசியினர் உழைப்பின் பெருமையை உள்ளதை உள்ளபடி உணர்வர்.

புதன் விவேகத்தை அளிப்பவர். ஆகவே, இவர்களிடம் நல்லது- கெட்டதை வரையறுக்கும் மதிநுட்பம் இருக்கும். இந்த லக்னத்தில் புதனின் தரம் உயர்ந்து இருந்தால், நாகரிகமான பண்பு தென்படும். வாழ்க்கை முறை, சிந்தனை வளம் சிறப்புற்று இருக்கும்.

லக்னத்துக்கு அதிபதி சுக்கிரன். ரிஷப ராசிக்கும் அவரே அதிபதி. ஆனாலும் இங்கு சுக்கிரன் முற்றிலும் மாறுபட்டவர். இங்கு (துலாம்) சர ராசி, ஓஜோ ராசி; ரிஷபத்தில் ஸ்திர ராசி, யுக்ம ராசி என்ற மாறுபாடு, துலா ராசிக்கு உகந்ததாக அமைந்துள்ளது.

ரிஷபத்தில் சந்திரன் உச்சன்; இங்கு சனி உச்சன். பணம் ஓரிடத்தில் முடங்காமல், இடம் மாறி மாறி புழங்கும். இதுவே, உழைப்பின் தரத்தை வளர்க்க ஊக்குவிப்பதாக அமையும்.

இயற்கையாகவே சுக்ரனும் சனியும் இந்த ராசிக்காரர்களின் ஆயுளைப் பாதுகாக்கும் பொறுப்பில் இறங்கிவிடுவர். மாரக கிரகமான செவ்வாயின் தரம் வலுவிழந்தால், இந்த இருவரது (சுக்கிரன், சனி) ஒத்துழைப்பில் நீண்ட ஆயுள் கிடைத்துவிடும் என்ற பெருமை இந்த ராசிக்கு உண்டு.

சந்திரன், செவ்வாய், குரு ஆகியோர் வலுவிழந்தால், இவர்களின் வாழ்க்கை சீரும் சிறப்புமாக விளங்கும். விபரீதமானால் உழைப்பிலும் பொருளாதாரத்திலும் சரிவைச் சந்திக்க வாய்ப்பு உண்டு.

ராசிநாதன் மீனத்தில் உச்சம் பெற்று விளங்குவதால், குரு நடுநிலை வகிப்பார். சூரியன் நீசம் பெற்று இருப்பதால் ஆன்ம பலம் குன்றியிருக்கும்.

லாபத்துக்கு உடைய, அதாவது 11-க்கு அதிபதியான சூரியனின் நீசம், வியாபாரத்தில் மேடு-பள்ளங்களைச் சந்திக்க வைக்கும். வேலைகளில் தடைகளை ஏற்படுத்தி நிம்மதியை இழக்க வைக்கலாம். ஆனால் 11-ல் வீற்றிருக்கும் கிரகம் இழப்பைச் சந்தித்த பிறகு, துளிர்க்கவைத்து பழைய நிலையை எட்ட வைக்கவும் செய்யும்.

துலாம் ராசி அன்பர்களே!

யோக காரகனான சனி மேஷத்தில் நீசம் பெற்றாலும் நல்லதையே அளிப்பார். துலாத்தில் சூரியன் நீசன். மேஷத்தில் சனி நீசன். இருவரும் தத்தமது உச்சத்தைப் பார்ப்பதால், பார்க்கும் இடத்தைச் செழிப்புறச் செய்வர். அதேநேரம் அவர்கள் இருக்கும் இடமும் தானாகவே செழிப்புறும். ஒருவருக்கொருவர் இருக்கும் இடத்தைப் பார்ப்பதால், அந்த நிகழ்வு ஒத்துழைக்கிறது. விபரீதமாக இருவரும் உச்சனாக அமர்ந்தால்... தனது நீச வீட்டைப் பார்ப்பதால், இருவரது ஒத்துழைப்பும் வீணாகும் அமைப்பு இந்த லக்னத்துக்கு உண்டு.

சுக்கிரனுக்கு இருக்கும் தகுதிகள் அதில் பிறந்தவரில் பிரதிபலிக்கும். மென்மையான அணுகு முறை, சுயமரியாதை, செல்வாக்கைக் காப்பதில் தனிக் கவனம், பிறப்புரிமையை வலியுறுத்தல், நல்ல மனம், ஈவு - இரக்கம், பரோபகாரம், செல்வச் சீமானாகத் திகழ பலவழிகளில் முனைதல், ஏழைகளுக்கு அளவுக்கேற்ற வகையில் பகிர்ந்தளித்தல், சுயநலம் கெடாத வகையில் பொதுநலத்தில் ஈடுபாடு, எதையும் அளந்து பார்த்து அளித்தல், நட்பைப் பேணிக் காத்தல் போன்றவை இந்த ராசியில் பிறந்தவரிடம் தென்படலாம் என்று ஜோதிடம் வரையறுக்கும்.

ஆடம்பரத்திலும் வெளிவேஷத்திலும் அளவு கடந்த ஈடுபாடு, ஆள் பாதி ஆடைபாதி என்பதில் நிறைவு, எதிலும் தன்னை உயர்ந்தவராகக் காட்டிக்கொள்வதில் பிடிப்பு ஆகிய குணங்களையும் இவர்களிடம் காணலாம்.

சனியும் புதனும் வலுவிழந்து, செவ்வாயும் குருவும் தகாத இடத்தில் இருந்து வலுப்பெற்றால், பெருமையின் உச்சக்கட்டத்தை எட்டிய தருணத்தில், விலாசம் தெரியாத அளவுக்கு சமுதாயத்திலிருந்து மறைந்து வாழும் நிலை உண்டாகலாம். பொதுசேவை, கலைகளில் ஆர்வம், அரசியல், புது படைப்புகளில் நாட்டம், நுகர்பொருள்களில் விருப்பம் இருக்கும்.

உச்சனாக இருக்கும் சனியின் பார்வை பட்ட இடமெல்லாம் விளங்கும். பொருள்களில், அனுபவத்தில் திருப்தி ஏற்பட்டு, உலகவியலில் பற்றற்று துறவியாக விளங்கவும் வாய்ப்பு உண்டு.

சனியின் செயல்பாடு உழைப்பை உயர்வாக எண்ணவைக்கும். உழைப்பில் கிடைக்கும் செல்வத்தில் உயர்வது பெருமை அளிக்கும். அதிர்ஷ்டம், இனாம், வெகுமதி போன்றவற்றில் நாட்டம் இருக்காது.

எப்படியாவது முன்னேற வேண்டும் என்று இல்லாமல், இப்படித்தான் முன்னேற வேண்டும் என்ற கொள்கைப்பிடிப்பு, செயல்களில் தாமதத்தை உண்டாக்கினாலும், சனிபகவானின் ஒத்துழைப்பால் வெற்றியைத் தொடும் வாய்ப்பு உண்டாகும்.

இவர்களில் பலரும் தன் வாழ்வின் உயர்வைப் பதிய வைத்துவிட்டு மறைவார்கள். அடித்தட்டில் இருக்கும் மக்களைத் தட்டியெழுப்பும் தகுதி இந்த லக்னத்தில் பிறந்தவரிடம் இருக்க இடமுண்டு.

துலாம் ராசி அன்பர்களே!

இந்த லக்னத்தில் முதல் இரண்டு நவாம்சகங்கள் (சித்திரை) செவ்வாயின் தசை இருக்கும். அடுத்த நான்கு நவாம்சகங்கள் (சுவாதி) ராகு தசையைச் சந்திக்கும். கடைசி மூன்று நவாம்சகங்கள் (விசாகம்) குரு தசையில் முடியும்.

பகையான செவ்வாய் பாலாரிஷ்டத்தை அளிப்பார். பால்யத்தில் தோன்றிய ராகு, கல்வியறிவில் ஒத்துழைப்பார். அதன்பிறகு தென்படும் குரு, இளமையில் சங்கடத்தைச் சந்திக்கவைப்பார். அதன் பிறகு தென்படும் சனி தசை, வாழ்க்கையின் தரத்தை உயர்த்திச் சுவைக்கவைக்கும்.

சனியும் புதனும் முன்னேற்றத்துக்கு உதவுவர். இளமையும் முதுமையும் சிறப்பாக அமைய அவர்கள் ஒத்துழைப்பு உதவும். சுவைத்து அனுபவிக்க இளமை வேண்டும். தெளிந்து ஆராய்ந்து உண்மையை எட்ட முதுமை வேண்டும். கல்வியோடு அனுபவமும் சேரும்போது, முதுமையில் சிந்தனை வளம் மேலோங்கியிருக்கும்.

70-க்கு மேல் சந்திக்கும் கேதுவும், லக்னாதிபதியான சுக்கிரனும் பிறப்பின் பலனை எட்டவைக்க உதவுவர். சுக்கிரன் வலுவோடு இருந்தால் ஞானியாக மாற வாய்ப்பு உண்டு; வலுவில்லாமல் இருந்தால், செல்வச் சீமானாக லோகாயத வாழ்வில் முடிவை அடைவார்கள். லக்னாதிபதி தசை அதில் பிறந்தவருக்குத் தீமையை ஒதுக்கி, நன்மையை மட்டும் எட்டச்செய்யும்.

சனியும் புதனும் வழிபட வேண்டி யவர்கள். ‘சம் சனைச்சராய நம: பும் புதாய நம:’ என்று சொல்லி வழிபடலாம். ‘சன்னோ தேவீ:’ என்ற மந்திரத்தை ஓதியும் வழிபடலாம். ‘உத்புத்யஸ்வ’ என்ற மந்திரம், புதனை வழிபட உதவும்.

மந்திரம் தெரியாதவர்கள், ‘சனைச்சராய நம: புதாய நம:’ என்று மனதுக்குள் சொல்லி வணங்கலாம்.

‘க்ரஹம்’ என்ற சொல்லுக்கு, ‘பிறந்தவனின் பூர்வ கர்ம பலனை எடுத்து அளிப்பவர்கள்’ (கிருஹ்ணாதீதிக்ரஹ:) என்று விளக்குகிறது ஜோதிடம். அவர்களை வழிபட்டால், நம்மில் கனிந்து தீமையை விலக்கி, நல்லதை மட்டும் அளித்து அருள்வார்கள்.

அத்தனை கிரகங்களும் இரண்டும் கலந்து அளிப்பவர்கள். பாப கிரகம் நல்லவனாக மாறினால், தான் கையாள வேண்டிய கெடுதலைத் தவிர்த்து நல்லதை அளிப்பார் எனச் சொல்லும் ஜோதிடம். நல்ல கிரகம் பாபியானால் நல்லதைத் தவிர்த்து பாபத்தை அளிப்பார் என்கிறது. பணிவிடைகளால் திருப்திப்படுத்தினால், கருணை உள்ளம் படைத்த கிரக மூர்த்திகள், நமக்கு நன்மையை வாரி வழங்குவார்கள்.

(அடுத்த இதழில் விருச்சிக ராசி குணாதிசயங்கள்...)

வசியப் பொருத்தம்:

திருமணமான ஆணும் பெண்ணும் ஒருவருக்கொருவர் அன்பு வயப்பட்டு வாழ்தல் வசியம் எனப்படும். இது, ஒருவரையருவர் சார்ந்து வாழும் சுகத்தையும், ஒருவரையருவர் பாராட்டி வாழும் இயல்பையும் தரும். வசியப் பொருத்தம் இருந்தால் சிறப்பான குழந்தைகள் பிறக்க வாய்ப்பு உண்டு. இந்த வசியப் பொருத்தமானது ஆண், பெண் ராசிகளை அனுசரித்து கீழ்க்காணும்படி அமையும்.

வசியப்

பொருத்தமுடைய ராசிகள்:

பெண் ராசி - ஆண் ராசி

மேஷம் - சிம்மம், விருச்சிகம்

ரிஷபம் - கடகம், துலாம்

மிதுனம் - கன்னி

கடகம் - விருச்சிகம், தனுசு

சிம்மம் - மகரம்

கன்னி - ரிஷபம், மீனம்

துலாம் - மகரம்

விருச்சிகம் - கடகம், கன்னி

தனுசு - மீனம்

மகரம் - கும்பம்

கும்பம் -மீனம்

மீனம் - மகரம்

மேலே குறிப்பிட்ட அட்டவணைப்படி இல்லாமல் ராசிகள் அமைந்தால், வசியப் பொருத்தம் அமையாது.