Published:Updated:

`தொட்டதெல்லாம் துலங்கும்!’ - உத்திரட்டாதி!

உத்திரட்டாதி
பிரீமியம் ஸ்டோரி
உத்திரட்டாதி

நட்சத்திர குணாதிசயங்கள்

`தொட்டதெல்லாம் துலங்கும்!’ - உத்திரட்டாதி!

நட்சத்திர குணாதிசயங்கள்

Published:Updated:
உத்திரட்டாதி
பிரீமியம் ஸ்டோரி
உத்திரட்டாதி

ந்த நட்சத்திரத்தின் அதிபதி சனீஸ்வரர். அவருடைய நேர்மறை சக்தி மட்டுமே இதை ஆட்சி செய்கிறது. நட்சத்திர மாலை, `கனவிலும் பொய்கள் சொல்லான், நாக்கது இரண்டு சொல்லான், நற்பொருளுடையோனாகும்’ என்கிறது. அதாவது, இந்த நட்சத்திரத்தில் பிறந்த நீங்கள், எந்தச் சூழ்நிலை யிலும் உண்மையே பேசுவீர்கள்; சொன்ன சொல்லை நிறைவேற்றுவீர்கள்; தர்ம வழியில் சேர்த்த செல்வம் உடையவர் என்கிறது.

ஜாதக அலங்காரம், `நீங்கள் எப்போதும் தண் ணீரில் விளையாட ஆசைப்படுபவர்; உறவினர், நண்பர்களை உடையவர்; நடுநிலைமை உடையவர்; தனவான்; சாமர்த்தியசாலி பெண்களுக்கு அன்பானவர்; என்கிறது. யவன ஜாதகம், `நீங்கள் குழந்தை பாக்கியம் உள்ளவர்; சத்ருக்களை வெற்றி கொள்பவர்’ என்கிறது. பிருகத் ஜாதகமோ, `நீங்கள் வாதிடும் திறமை உள்ளவர்; சுக வாழ்வு வாழ்வீர்கள்’ என்கிறது.

இந்த நட்சத்திரத்தில் பிறந்த நீங்கள் கற்றறிந்த வர்களுக்கு நண்பர்களாக இருப்பீர்கள். பழமொழி கூறுபவராகவும் தாம்பூலம் தரிப்பவராகவும் இருப்பீர்கள். வெளியூர்களுக்குப் பயணம் செய்ய விரும்புபவராகவும், அகன்ற மார்பு, காதுகளை உடையவராகவும், தான தர்மம் செய்பவராகவும் விளங்குவீர்கள். தொலைநோக்குச் சிந்தனையால் சாதாரண நிலையிலிருந்து உயர்ந்த நிலையை அடைவீர்கள். ஆழமாக யோசிப்பதால் அதிகம் பேசாதவர்கள். நீங்கள் தொட்ட காரியங்கள் யாவும் துலங்கும். சகல கலைகளையும் ஆழமாக அறிந்திருந்தாலும் ஆரவாரம் இல்லாதவர்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

வெளி உலகுக்காகப் போலியாக வாழாத யதார்த்தவாதி. உங்களில் பெரும்பாலானோர் வேத, உபநிடதங்களில் கரை கண்டவர்களாகத் திகழ்வர்.நீதி, நேர்மை, உண்மை ஆகியவற்றை விட்டு விலகாதவர். உங்களுக்குள் எப்போதும் ஒரு தேடல் இருந்துகொண்டே இருக்கும். ஆரம்பத்தில் சனி தசை வருவதால் சிறு வயதில் சளித் தொந்தரவு, வயிற்றுவலி, சின்னஞ்சிறு விபத்தால் கை, கால்களில் காயங்கள் ஆகியவை ஏற்படும்.

`தொட்டதெல்லாம் துலங்கும்!’ - உத்திரட்டாதி!

பன்னிரண்டு வயது வரை பிடிவாதம், எதிர்மறைப் பேச்சு ஆகியவை இருக்கும். ஆரம்பக் கல்வி சுமார்தான். உங்களில் பலர் கூச்ச சுபாவம் உள்ளவர்கள். விளையாட்டில் ஆரம்பத்தில் ஆர்வம் காட்டுவீர்களே தவிர, பின்னர் அதன் பக்கம் போக மாட்டீர்கள். சிலர், பெற்றோரைப் பிரிந்து விடுதியில் தங்கிப் படிக்க நேரும். மேல்நிலைக் கல்வி மற்றும் கல்லூரிப் படிப்பில் சிறந்து விளங்குவீர்கள்.

பொதுவாக சாதுவாக இருக்கும் நீங்கள், கோபம் வந்தால் முரட்டுத்தனமாக நடந்துகொள்வீர்கள். கவிதை, கதை எழுதுவீர்கள். கணித மேதை, சட்ட நிபுணர், நீதிபதி, மனோதத்துவ நிபுணர், பத்திரிகையாளர் ஆகியோராக உங்களில் பலர் இருப்பீர்கள். வானவியல், மருத்துவம், ஜோதிடம், வங்கி ஆகிய துறைகளிலும் சிறந்து விளங்குவீர்கள். உங்களில் சிலர் நிதி நிறுவனம், கட்டுமானத் தொழில், கல்வி நிறுவனங்கள் மற்றும் பதிப்பகம் வைத்து நடத்துவார்கள்.

நட்பு வட்டம் உங்களுக்கு அதிகம். ஆனால் யாரிடமும் உதவி கேட்க மாட்டீர்கள். வாழ்க்கைத் துணைவரிடம் அதிகம் எதிர்பார்ப்பீர்கள். உங்களுக்கு ஆண் வாரிசுகள் அதிகம் இருக்கும். பிள்ளைகளைப் பண்பாடு, கலாசாரம் மாறாமல் வளர்ப்பீர்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சொந்த வாகனங்கள் இருந்தும் சில நேரங்களில் சில இடங்களுக்கு நடந்து செல்வதே பிடிக்கும். அம்மாவின் கைபக்குவத்துக்கு மிகையானது எதுவும் இல்லை எனும் எண்ணம் கொண்டவர் நீங்கள்.

27 வயது முதல் முன்னேறத் தொடங்குவீர்கள். ஆனால் 39 வயதிலிருந்துதான் சகலமும் முழுமையாகக் கிடைக்கும். உங்களில் சிலருக்கு, 51 வயதிலிருந்து நாடாளும் யோகமும் உண்டு. மரம், செடி, கொடி நிறைந்த அமைதியான சூழலில் வீடு அமைந்தால் நல்லது என நினைப்பீர்கள்.

உங்களில் பலரும் மத குருவாகவும், அடிக்கடி அயல்நாடு செல்பவர்களாகவும் இருப்பீர்கள். இரும்பு, சிமென்ட், தங்க நகை, எலெக்ட்ரானிக்ஸ் வகைகளில் பெரும் பணம் சம்பாதிப்பீர்கள். பலர், வயதான காலத்தில் துறவறத்தில் ஈடுபாடு உள்ளவர்களாக இருப்பீர்கள்.

முதல் பாதம்

(சனி + குரு + சூரியன்)

முதல் பாதத்துக்கு நவாம்ச அதிபதி சூரியன். இந்தப் பாதத்தில் பிறந்தவர்கள், எதிலும் உண்மையை விரும்புவார்கள். தவறு செய்பவர்களை வெறுப்பார்கள். ராஜதந்திரிகளான இவர்கள் சூழ்ச்சிகளை வெல்வார்கள். துடிப்புடன் செயல்படுவார்கள்.

ஆடை, ஆபரணங்களை விரும்பி அணிவார்கள். தன்னம்பிக்கை நிறைந்தவர்கள். கொஞ்சம் சிக்கனமாகவே இருப்பார்கள். ஆனால் தான, தர்மம் செய்வதற்குத் தயங்கமாட்டார்கள். எது செய்தாலும் அதில் ஒரு வித்தியாசம் காட்டுவார்கள்.

எவராவது பத்து நாள் பாசமாகப் பேசினால்,

அவர்களுக்கு அடிமையாகிவிடுவார்கள். அவர்களே கட்டளையிட்டுக் கறாராகப் பேசினால் பிடிக்காது. சிலநேரங்களில் இவர்கள் கடுஞ்சொற்களை உபயோகிப் பார்கள். யாரேனும் தன்னைத் தரக்குறைவாகப்

பேசினால், அவர்களை வாழ்நாள் முழுவதும் மறக்க மாட்டார்கள். தங்கள் வார்த்தைக்கு மற்றவர்கள் முக்கியத் துவம் தரவேண்டும் என்று நினைப்பார்கள்.

வாதம் செய்வதில் இவர்கள் திறமைசாலிகள். குற்றம், குறைகள் கூறினாலும் எதற்காகவும் யாருக்காகவும் தங்களை மாற்றிக்கொள்ளமாட்டார்கள். பெரிய பதவி வகிப்பவர்களின் நட்பு இவர்களுக்கு உண்டு.

சிறுவயதில் படிப்பில் கவனம் குறைவாக இருந்தாலும் உயர் கல்வியில் சாதிப்பார்கள். சிலம்பாட்டம், யோகா, குத்துச் சண்டை போன்ற தனிப் பயிற்சிகளில் பதக்கம் பெறுவார்கள்.

மனைவி, பிள்ளைகளிடம் அன்போடு நடந்துகொள்வார்கள். சட்டம், அரசியல், மருத்துவம், பொறியியல், காவல், தீயணைப்பு, ஆன்மிகம் ஆகிய துறைகளில் மிளிர்வார்கள். 39 வயதிலிருந்து சாதிப்பார்கள்.

பரிகாரம்: மயிலாடுதுறையில் அருளும் ஸ்ரீஅபயாம்பிகை உடனுறை ஸ்ரீமயூரநாதரை யும் மேதா தட்சிணாமூர்த்தியையும் வணங்கி வாருங்கள்; வாழ்க்கை வளம் பெறும்.

இரண்டாம் பாதம்

(சனி + குரு + புதன்)

ரண்டாம் பாதத்துக்கு நவாம்ச அதிபதி புதன். இதில் பிறந்தவர்கள், பழைமையையே அதிகம் விரும்புவார்கள். தத்துவம், பழமொழி ஆகியவை உணர்த்தும் உண்மைகளை மற்றவர்களுக்கு உபதேசிப்பதோடு இவர்களும் அதன் வழியில் நடக்க முயற்சி செய்வார்கள். நிறைய திறமைகள் இருந்தாலும் தருணம் வரும்போதுதான் அவற்றை வெளிப்படுத்துவார்கள். தற்பெருமை பேசுவது பிடிக்காது.

சிறுவயதிலிருந்தே கவிதை, கட்டுரை, மாறுவேடம் போன்ற போட்டிகளில் கலந்துகொண்டு பிரகாசிப்பார்கள். இவர்களுக்கு ஞாபக சக்தி அதிகம். பெற்றோருக்கு செல்லப் பிள்ளையாக இருப்பார்கள். தாய்நாட்டின் மீதும் தாய் மொழியின் மீதும் பற்றுள்ளவர்கள். யார் வந்து உதவி கேட்டாலும் அது எவ்வளவு பெரியதாக இருந்தாலும் தயங்காமல் செய்வார்கள்.

நண்பர்கள் கூட்டம் அதிகம் இருக்கும். தாராளச் செலவு செய்வார்கள். எடுத்த வேலையைக் கண்ணும் கருத்துமாகச் செய்வார்கள். உடல் நலத்தில் அக்கறை எடுத்துக்கொள்ள மாட்டார்கள். மனைவியைச் சமையலறையில் முடக்காமல், மேற்கொண்டு படிக்கவைத்து ஒளிரவைப்பார்கள். பிள்ளைகளுக்கு முழு சுதந்திரம் தருவார்கள். 32 வயதிலிருந்து சாதிப்பார்கள்.

பரிகாரம்: காஞ்சிபுரம் ஹாட்சன்பேட்டையில் கோயில் கொண்டிருக்கும் ஸ்ரீஅலர்மேல் மங்கை உடனுறை ஸ்ரீஆதிகேசவப் பெருமாளை வழிபட்டு வாருங்கள்; உங்களின் எதிர்காலம் சிறக்கும்.

மூன்றாம் பாதம்

(சனி + குரு + சுக்கிரன்)

மூன்றாம் பாதத்துக்கு நவாம்ச அதிபதி சுக்கிரன். இதில் பிறந்தவர்கள் கடவுள் பக்தி நிறைந்தவர்கள். எதையும் புதுமையாகச் செய்பவர்கள். நுண்ணறிவும் கற்பனையும் இவர்களுக்கு அதிகம் உண்டு. எந்தச் செயலைச் செய்தாலும் முழு ஈடுபாட்டுடன் செய்வார்கள். மலை, கடல், பசுமை நிறைந்த சோலை ஆகியவற்றை ரசிப்பார்கள். பாடுவதிலும், நடனத்திலும், கவிதை-கட்டுரைகள் எழுதுவதிலும் ஆர்வம் உண்டு. எதையாவது கண்டுபிடிக்கவேண்டும் என்று முயற்சி செய்வார்கள்.

உடன்பிறந்தவர்களுக்கும் உறவினர்களுக்கும் முக்கியத் துவம் தருவார்கள். தங்களுடைய கனிவான பேச்சால் மற்றவர்களை எளிதில் வசப்படுத்துவார்கள். நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்குவதிலும் மொழிபெயர்ப்பதிலும் இவர்களுக்கு ஈடு இணை யாரும் இல்லை.

எப்போதும் தாங்கள் மகிழ்ச்சியாக இருப்ப துடன், மற்றவர்களையும் கலகலப்பாக வைத்துக் கொள்வார்கள். சோம்பல் இல்லாமல் சுறுசுறுப்புடன் காணப்படுவார்கள். மனைவி, பிள்ளைகளுடன் உல்லாசப் பயணங்கள் சென்று வருவது இவர்களுக் குப் பிடிக்கும். குடும்பத்தினருக்காகச் சொத்து சேர்ப்பார்கள். சாப்பாட்டுப் பிரியர்கள். 27 வயதிலிருந்து இவர்களுடைய வாழ்வில் புதிய திருப்பங்கள் உண்டாகும்.

பரிகாரம்: திருச்சேறையில் அருள்பாலிக்கும் ஸ்ரீஸாரநாயகி உடனுறை ஸ்ரீஸாரநாதப் பெருமானை வணங்கி வாருங்கள்; எதிர்பார்த்த வெற்றிகள் கிடைக்கும்.

நான்காம் பாதம்

(சனி + குரு + செவ்வாய்)

நான்காம் பாதத்துக்கு நவாம்ச அதிபதி செவ்வாய். இதில் பிறந்தவர்கள் சிவந்த கண்களை உடையவர்கள். கோபம் இருக்கும் இடத்தில் குணம் இருக்கும் என்பது இவர்களுக்குப் பொருந்தும். பல துறைகளில் பண்டிதர்களாகத் திகழ்பவரையும் தங்கள் வாதத்தால் வீழ்த்திவிடுவார்கள்.

பொதுப் பிரச்னைகளை தள்ளி நின்று வேடிக்கை பார்க்கமாட்டார்கள்; தன்னால் ஆன இயன்ற முயற்சிகளைச் செய்து அந்தப் பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பார்கள். அதேநேரம் சொந்தப் பிரச்னை களை நினைத்து உணர்ச்சிவசப்படுவார்கள். எப்போதும் யோசித்துக்கொண்டே இருப்பார்கள்.

`தொட்டதெல்லாம் துலங்கும்!’ - உத்திரட்டாதி!

இவர்கள் யோகம், தியானம் ஆகியவற்றில் கவனம் செலுத்துவது நல்லது. `உலகம் மிகவும் கெட்டுப் போய்விட்டது; யாரிடமும் உண்மை இல்லை’ என்று அடிக்கடி அலுத்துக்கொள்வார்கள். நாட்டின் பழைமையும் கலாசாரமும் பாதுகாக்கப்பட வேண்டும் என்று நினைப்பார்கள்.

வீர விளையாட்டுகள் மிகவும் பிடிக்கும். ஊர் விழாக்களில் எப்போதும் முன்னிலை வகிப்பார்கள். மனைவி, பிள்ளைகளிடம் கனிவாகவும் நடந்து கொள்வார்கள்; கண்டிக்கவும் செய்வார்கள். 27 வயதிலிருந்து இவர்கள் வாழ்வில் மாற்றம் வரும்; முன்னேற்றம் தொடங்கும்.

பரிகாரம்: ஒருமுறை மருதமலைக்குச் சென்று, அங்கே கோயில்கொண்டிருக்கும் அருள்மிகு முருகப் பெருமானை வணங்கி வழிபட்டு வாருங்கள்; நீங்கள் நினைத்தது நிறைவேறும்.

உத்திரட்டாதி!

நட்சத்திர தேவதை : அஹிர்புத்னியன் - சங்கு, சக்கரங்களைக் கைகளில் ஏந்தியவாறு காட்சியளிப்பவர்.

வடிவம் : சதுர வடிவில் இரண்டு நட்சத்திரங்களைக் கொண்டது.

எழுத்துகள் : து, ஞ, ச, ஸ்ரீ.

ஆளும் உறுப்புகள் : கால்கள்

பார்வை : மேல்நோக்கு

பாகை : 333.20 - 346.40

நிறம் : வெண்மை

இருப்பிடம் : கிராமம்

கணம் : மனுஷ கணம்

குணம் : உறுதி

பறவை : கோட்டான்

மிருகம் : பசு

மரம் : பாலில்லாத வேம்பு மரம்

மலர் : சந்தன புஷ்பம்

நாடி : மத்திம நாடி

ஆகுதி : உளுந்து

பஞ்சபூதம் : ஆகாயம்

நைவேத்யம் : வெல்ல சாதம்

தெய்வம் : ஸ்ரீகாமதேனு

சொல்ல வேண்டிய மந்திரம்

ஓம் காமகாமாய வித்மஹே ஸர்வசித்யை ச தீமஹி

தன்னோ தேனு: ப்ரசோதயாத்

அதிர்ஷ்ட எண்கள் : 5, 6, 8.

அதிர்ஷ்ட நிறங்கள் : நீலம், வெளிர்ப் பச்சை.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்டக் கிழமைகள் : திங்கள், சனி.

அதிர்ஷ்ட ரத்தினம் : ப்ளாக் ஸ்டார்.

அதிர்ஷ்ட உலோகம் : தங்கம்.

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்

காமதேனு, ஜடாயு, ராகவேந்திரர், அருணகிரிநாதர், வேதாத்ரி மகரிஷி.

`உத்திரட்டாதி’திருநாளில்...

திருமணம், தாலிக்குப் பொன் உருக்குதல், பூ முடித்தல், தெய்வப் பிரதிஷ்டை, விதை விதைத்தல், சீமந்தம், புதுமனை புகுதல், தொட்டிலில் குழந்தையை விடுதல், பெயர் சூட்டுதல், சிகை நீக்கிக் காது குத்துதல், முதன்முதலாக அன்னம் ஊட்டுதல், வித்யாரம்பம், வங்கிச் சேமிப்புக் கணக்கு தொடங்குதல், நாட்டிய அரங்கேற்றம், புது வேலைக்கு விண்ணப்பித்தல், புது வேலையில் சேர்தல், வியாபாரம், புதிய ஆடை, அணிகலன் அணிதல், வாகனம் வாங்குதல், மருந்துண்ணுதல், ஆயுதம் பயிற்றுவித்தல், குளம், கிணறு வெட்டுதல், எரு இடுதல், களஞ்சியத்தில் தானியம் சேர்த்தல், கதிரறுத்தல் ஆகிய நிகழ்வுகளை இந்த நட்சத்தி நாளில் தொடங்குவது விசேஷம்.

பரிகார ஹோம மந்திரம்

அஹிர்புத்த்னிய: ப்ரதமா ந ஏதி

ச்ரேஷ்ட்டோ தேவானா-முதமானுஷாணாம்

தம் ப்ராஹ்மணா: ஸோமபா: ஸோம்யாஸ:

ப்ரோஷ்ட்டபதாஸோ அபிரக்ஷந்தி ஸர்வே

சத்வார ஏகமபிகர்ம தேவா:

ப்ரோஷ்ட்டபதாஸ இதி யான் வதந்தி

தே புத்த்னியம் பரிஷத்யஹும் ஸ்துவந்த:

அஹிஹும் ரக்ஷந்தி நமஸோப ஸத்ய

`தொட்டதெல்லாம் துலங்கும்!’ - உத்திரட்டாதி!

கோமாதா வந்தனம்

கோமாதாவாகிய பசுவுக்கு அருகில் சென்று வலம் வந்து வணங்கினால், சர்வ பாவங்களும் விலகும். புராணங்கள் போற்றும் ஏழு தீவுகளை வலம் வந்த புண்ணியம் கிடைக்கும். கீழ்க்காணும் துதியையும் சொல்லி வழிபட்டால், சகல சுபிட்சங்களும் உண்டாகும்.

ஸர்வகாமதுகே தேவி ஸர்வதீர்த்தாபிஷேசினீ

பாவனே ஸுரபிஸ்ரேஷ்ட தேவி துப்யம் நமோஸ்துதே

கருத்து: சகல காமத்தையும் (விருப்பங்களையும்) கறக்கக் கூடியவளும், சர்வ தீர்த்தத்திலும் நீராடிய புண்ணியத்தை அளிப்பவளும், பரிசுத்தம் அருள்பவளும், காமதேனு சிரேஷ்டையுமான தேவியே... உன்னை வணங்குகிறேன்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism