Published:Updated:

கருங்காலி மரத்தில் செய்த பொருள்களைப் பயன்படுத்துவதால் இவ்வளவு பயன்களா?

கருங்காலி மரம்
கருங்காலி மரம்

கருங்காலி மரத்தில் செய்த பொருள்களைப் பயன்படுத்துவதால் இவ்வளவு பயன்களா?

இன்றைய பஞ்சங்கம்

22. 6. 21 ஆனி 8 செவ்வாய்க்கிழமை

திதி: துவாதசி காலை 7.24 வரை பிறகு திரயோதசி

நட்சத்திரம்: விசாகம் பகல் 12.33 வரை பிறகு அனுஷம்

யோகம்: மரணயோகம் பகல் 12.33 வரை பிறகு சித்தயோகம்

ராகுகாலம்: பகல் 3 முதல் 4.30 வரை

எமகண்டம்: காலை 9 முதல் 10.30 வரை

நல்லநேரம்: காலை 7.30 முதல் 8.30 வரை/ பகல் 1.30 முதல் 2.30 வரை

நல்லன அருளும் நந்தி தரிசனம்!
நல்லன அருளும் நந்தி தரிசனம்!

சந்திராஷ்டமம்: ரேவதி பகல் 12.33 வரை பிறகு அசுவினி

சூலம்: வடக்கு

பரிகாரம்: பால்

வழிபடவேண்டிய தெய்வம்: சிவபெருமான்

இன்று: பிரதோஷம்.

கருங்காலி மரத்தில் செய்த பொருள்களைப் பயன்படுத்துவதால் இவ்வளவு பயன்களா?

நம் முன்னோர்கள் பல அரிய மர வகைகளைக் கண்டறிந்து அவற்றின் மருத்துவ பலன்களையும் ஆன்மிகப் பயன்களையும் குறித்துவைத்திருக்கிறார்கள். குறிப்பாக சித்தர்கள், குறிப்பிட்ட சில மரங்களைச் சொல்லி அவை எந்தெந்த தேவதையின் அம்சமாகத் திகழ்கின்றன என்றெல்லாம் குறிப்பிட்டிருக்கிறார்கள். அப்படி அவர்கள் சொல்லியிருக்கும் பொருள்களை நம் வீட்டில் வைத்துக்கொண்டால் நம் வீட்டில் அந்த தேவதையின் அருட்கடாட்சம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. அப்படிப்பட்ட ஒரு மரமாகவே கருங்காலி மரம் பார்க்கப்படுகிறது. கருங்காலி மரத்துக்கு மருத்துவ ரீதியாகவும் முக்கியத்துவம் இருப்பதாகச் சொல்கிறார்கள். அந்த மரத்தின் வேர், பட்டை முதலியன மிகவும் பயனுள்ள மருத்துவப் பொருள்கள். கருங்காலி மரத்தின் பட்டையை அரைத்துக் கொடுத்தால் ரத்த சம்பந்தமான நோய்களிலிருந்து விரைவில் நலம் பெறலாம் என்கின்றன சித்த நூல்கள். மேலும் இந்த மரத்தின் பொருள்களுக்கு ஆன்மிக முக்கியத்துவமும் உண்டு. கருங்காலி மரத்தில் செய்த பல பொருள்களைப் பயன்படுத்துவதன் மூலம் கிடைக்கும் ஆன்மிகப் பயன்கள் குறித்து விரிவாக அறிந்துகொள்ள கீழே உள்ள வீடியோவைப் பாருங்கள்.

இன்றைய ராசிபலன்

விரிவான இன்றைய பலன்களை அறிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.

மேஷம்:

சோர்வு : முற்பகலில் உற்சாகமும் பிற்பகலில் சோர்வும் ஏற்படும். சிலருக்குப் பணிச்சுமை காரணமாக உடல் அசதி ஏற்படும். இறைவழிபாடு அவசியம். - ஆல் இஸ் வெல்!

ரிஷபம்:

அனுகூலம் : எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாகும். சகோதர உறவுகள் உதவி கேட்டு வருவார்கள். உடல் ஆரோக்கியமும் மேம்படும். - என்ஜாய் தி டே!

மிதுனம்:

செலவு : எதிர்பாராத திடீர் செலவுகள் ஏற்படும். உறவினர்களால் அனுகூலம் ஏற்பட்டாலும் தேவையில்லாத வருத்தங்களும் ஏற்படலாம். கவனம் தேவை. - செலவே சமாளி!

கடகம்:

சோர்வு : மனதில் இனம் தெரியாத சோர்வு ஆட்கொள்ளும். கடன் விஷயங்களில் கவனம் தேவை. உறவினர்களிடம் தேவையில்லாத வார்த்தைகளைப் பேச வேண்டாம். - நா காக்க!

சிம்மம்:

உதவி : எதிர்பார்த்த உதவிகள் வந்து சேரும். உறவினர்கள் வாங்கிய பணத்தைத் திருப்பித் தருவார்கள். ஆனாலும் உடல் ஆரோக்கியத்தில் உரிய கவனம் தேவை. - ரிலாக்ஸ் ப்ளீஸ்!

கன்னி:

விவாதம் : அனைத்தும் சாதகமாக இருக்கும் நாள். பணவரவும் பிறரின் ஆதரவும் இருக்கும். என்றாலும் தேவையற்ற விவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. - நோ ஆர்கியுமென்ட்ஸ்!

துலாம்:

நன்மை : அதிக அளவில் நன்மைகள் நடைபெறும் நாள். புதிய முயற்சிகள் அனுகூலமாகும். குடும்பத்தினரின் உடல் ஆரோக்கியத்திலிருந்த பின்னடைவுகள் நீங்கும். - நாள் நல்ல நாள்!

விருச்சிகம்:

மகிழ்ச்சி : குடும்பத்தில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும் என்றாலும் குடும்பத்தினரின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்த வேண்டும். செலவுகளும் அதிகரிக்கும். - ஹெல்த் இஸ் வெல்த்!

தனுசு:

ஆதரவு : நீண்ட நாள்களாக நிலுவையிலிருந்த தொகை கைக்குவரும். உங்கள் முயற்சிகளுக்குக் குடும்பத்தினரின் ஒத்தாசை கிடைக்கும். உற்சாகமான நாள். - ஜாலி டே!

மகரம்:

சாதகம் : முக்கியமான முடிவுகளை எடுக்கலாம், சாதகமாகும். சிலருப் பொருள்களின் சேர்க்கை ஏற்படும். எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்புண்டு. - சாதகமான ஜாதகம் இன்று!

கும்பம்:

கவனம் : அனுகூலமான நாள் என்றபோதும் மறைமுக எதிரிகளால் தொல்லைகள் ஏற்படலாம் என்பதால் யாரையும் நம்பி எதையும் பேச வேண்டாம். - டேக் கேர் ப்ளீஸ்!

மீனம்:

பொறுமை : நாள் முழுவதும் சொல்லிலும் செயலிலும் பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டிய நாள். பிரச்னைகள் தோன்றி மறையும். பிற்பகலில் நன்மைகள் நடைபெறும். - நாளை உங்க நாள்!

அடுத்த கட்டுரைக்கு