Published:Updated:

அடுக்குமாடி இல்லங்கள் வாஸ்து வழிகாட்டல்!

அடுக்குமாடிக் கட்டடங்களில் வாஸ்து நியதிகள்!
பிரீமியம் ஸ்டோரி
அடுக்குமாடிக் கட்டடங்களில் வாஸ்து நியதிகள்!

‘ஜோதிட விபூஷண்’ தஞ்சை இராஜ ஞானசேகர்

அடுக்குமாடி இல்லங்கள் வாஸ்து வழிகாட்டல்!

‘ஜோதிட விபூஷண்’ தஞ்சை இராஜ ஞானசேகர்

Published:Updated:
அடுக்குமாடிக் கட்டடங்களில் வாஸ்து நியதிகள்!
பிரீமியம் ஸ்டோரி
அடுக்குமாடிக் கட்டடங்களில் வாஸ்து நியதிகள்!

வாஸ்து என்றால் பொருள்கள் அதாவது வஸ்துக்கள் இருக்கும் இடங்கள் என்பது பொருள். வாஸ்து சாஸ்திரத்தின்படி உருவான வீட்டில் நேர்மறை ஆற்றல் பெருகும். புது மனைக்கு அதிர்ஷ்ட திசைகளின் அம்சத்தை உணர்ந்து அதன்படி வீடுகளை அமைத்தால், குடும்பத்தில் உள்ளவர்கள் ஆரோக்கியத்துடனும் செல்வச் செழிப்புடனும் வாழ முடியும் என்கின்றன வாஸ்து சாஸ்திரம் தொடர்பான ஞானநூல்கள்.

அடுக்குமாடி இல்லங்கள் 
வாஸ்து வழிகாட்டல்!

வாஸ்துவுக்கான தெய்வத்தை வாஸ்து புருஷன் என்று வணங்குகிறோம். ஐம்புலன்களால் அறியக்கூடியதும் அறிய முடியாததுமான இயற்கை சக்திகளை, மனித வாழ்வுக்குப் பயன்படும் வகையில் அமைத்துக் கொள்வதே, வாஸ்து சாஸ்திரத்தின் அடிப்படைக் குறிக்கோள்.

`சரி, வாஸ்துப்படி நிலம் வாங்கி - வீட்டின் வரைபடம் வரைந்து, அதன்படியே வீடு கட்டுபவர் களுக்கு யோகம் சரியாக அமையலாம். ஆனால், நகரத்தில் வாழும் மத்திய தர மக்கள் பலரும் சிறுகச் சிறுக பணம் சேர்த்து, புறநகர்ப் பகுதியில் குறைந்த விலையில் ஏற்கெனவே கட்டி முடிக்கப்பட்ட அல்லது வடிவமைப்பு செய்யப்பட்ட அடுக்குமாடிக் குடியிருப்புகளை வாங்கும்போது வாஸ்து பார்ப்பது எப்படி? ஜன்னலை மாற்றுவது, அறைகளை மாற்றுவது எல்லாம் சாத்தியம் இல்லையே' என்ற கேள்வி பலருக்கும் எழுவது உண்டு.

இந்நிலையில் என்ன செய்யலாம்?

அடுக்குமாடி இல்லங்கள் 
வாஸ்து வழிகாட்டல்!

குறிப்பிட்ட அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டத் தொடங்குவதற்கு முன்பாகவே, வாஸ்து அமைப்புகளை ஆராயலாம். இயன்ற வரையிலும் வாஸ்து முறைப்படி ஜன்னல்கள், அறைகள், வாயில்கள் அமையும்படி கட்டுவதற்குக் கோரிக்கை விடுக்கலாம். ஆனால் இப்படியான வாய்ப்பு கிடைப்பது மிகவும் அரிதுதான்.

எனவே, குறைந்தபட்சம் வாஸ்து அமைப்புகள் பொருந்தியுள்ள வீட்டைத் தேர்வு செய்யலாம். அதன்படி நீங்கள் தேர்வு செய்யும் வீடு வடக்கு, கிழக்குப் பக்கங்களில் காற்றும் ஒளியும் புகுமாறு ஜன்னல், கதவுகளைக் கொண்டிருக்க வேண்டும்.

நீங்கள் தேர்வு செய்யும் உங்களுக்கான ஃபிளாட் செவ்வகம், சதுரம் என்ற ஒழுங்கான அளவில் அமைந்திருப்பது சிறப்பு.

தலைவாசல் வடகிழக்கு அல்லது தென் கிழக்கு பகுதிகளில் இருப்பது சிறப்பு.

தென்கிழக்கில் சமையலறை, தென்மேற்கில் குடும்பத்தினர் உபயோகிக்கும் படுக்கையறை இருக்க வேண்டும். வடகிழக்கில் உள்ள அறை படிக்கும் அறையாக அல்லது குழந்தைகள் உபயோகிக்கும் அறையாக இருக்க வேண்டும்.

பூஜையறை வடக்கு அல்லது கிழக்குத் திசையில் இருக்க வேண்டும். தனியாக பூஜை அறை இல்லாவிட்டால் இதே திசைகளில் ஹாலிலோ அல்லது சமையலறையிலோ உள்ள அலமாரிகளில் தெய்வப் படங்களை வைத்து வணங்கலாம். பூஜை அறை அல்லது பூஜை அலமாரி கதவுகளுடன் இருந்தால், அவற்றில் மணிகள் அமைப்பது விசேஷம். கதவுகளைப் பூட்டும்போதும் திறக்கும்போதும் அந்த மணிகள் ஒலிப்பதால் நல்ல அதிர்வுகள் வீட்டில் சேரும்.

தென்கிழக்கில் வாசல் இருந்தால் வடமேற்குப் பகுதியில் கழிவறை அமைய லாம். வடமேற்கில் வாசல் இருந்தால், தென் கிழக்கில் கழிவறை இருக்கலாம். அப்படி கழிவறை அமைத்தால், தரைமட்டத்தைவிட சற்று உயரமாக அமைக்கவேண்டும்.

இப்படியான அமைப்புகளில் ஏதேனும் குறைகள் இருந்தால், வாஸ்து நிபுணர்களை அணுகி ஆலோசனைகளைப் பெறலாம்.

அடுக்குமாடி இல்லங்கள் 
வாஸ்து வழிகாட்டல்!

வாஸ்துப் பரிகாரத்துக்காக நீரூற்றுகள், பொம்மைகள், தாவரங்கள் வைப்பதெல்லாம் அவரவர் நம்பிக்கை சார்ந்த விஷயங்கள். அப்படி வைப்பதானால் கிழக்கு, வடக்குத் திசைகளில் பறக்கும் குதிரை, ஆமை, வாயில் காசு வைத்திருக்கும் தவளை, சிரிக்கும் புத்தர், காற்றில் ஒலிக்கும் மணிகள் போன்றவற்றை வைக்கலாம்.

காற்று வீசும் வடமேற்கு திசையில் சிறிய நீரூற்று அமைப்புகளை வைக்கலாம். படுக்கையறை, படிக்கும் அறையின் பக்கமாகப் பசுமையான சிறிய செடிகளைத் தொட்டிகளில் வைக்கலாம். இது உங்களை உற்சாகப்படுத்தி, நல்ல அதிர்வுகளை உருவாக்கும்.

சூரியனின் சக்திதான் வாஸ்துவின் அடிப்படை என்பார்கள். அதன்படி நல்ல வெளிச்சம் வரும்படி உங்கள் வீடுகளை ஒழுங்குபடுத்திக் கொள்ளுங்கள்.

அடுக்குமாடி இல்லங்கள் 
வாஸ்து வழிகாட்டல்!

உங்கள் வீடும் தலைவாயிலும்!

வீட்டில் மிக முக்கிய அம்சம் தலைவாசல். இது குறிப்பிட்ட திசையில் சரியான அமைப்புடன் திகழ்வது அவசியம். தவறான வாசல் உள்ள வீட்டில் வசிக்கும் ஒருவர், அவர் எவ்வளவு நல்ல யோகமான ஜாதகத்தில் பிறந்திருந்தாலும் யோகங்களை அனுபவிக்க இயலாதபடி, பல பிரச்னைகளைச் சந்திக்க நேரிடலாம்.

வடக்குப் பார்த்த கட்டடம் எனில், வடக்குநோக்கியபடி கிழக்குத் திசையை ஒட்டியவாறு தலை வாசலை அமைக்கவேண்டும். மேற்கு திசைக்கு ஒட்டியவாறு தலைவாசல் அமைக்கக் கூடாது.

கிழக்குப் பார்த்த கட்டடத்துக்குத் தலைவாசலைக் கிழக்கு நோக்கியபடியும் வடக்கு திசையை ஒட்டிய வாறும் அமைக்க வேண்டும். தெற்கு திசைக்கு ஒட்டிய வாறு தலைவாசல் அமைக்கக் கூடாது.

தெற்கு பார்த்த கட்டடத்துக்குத் தெற்கு நோக்கியபடி கிழக்கு திசையை ஒட்டியவாறு தலைவாசலை அமைக்க வேண்டும். மேற்கு திசைக்கு ஒட்டியவாறு தலைவாசல் அமைக்கக் கூடாது.

மேற்கு பார்த்த கட்டடத்துக்குத் தலைவாசல் மேற்கு நோக்கியபடி வடக்கு திசையை ஒட்டியவாறு அமைக்க வேண்டும்; தெற்கை ஒட்டி அமைக்கவே கூடாது.

ஒரு வீட்டுக்கோ அல்லது தொழில் நிறுவனத்துக்கோ அமைக்கப்படும் வாசல்கள் 1, 2, 4, 6, 8... என்ற எண்ணிக்கையில் வருமாறு அமைதல் வேண்டும். அதேபோல் கட்டடத்துக்குள் அமைக்கப்படும் அறைகளின் வாசல்களும் இந்த எண்ணிக்கையிலேயே அமைவது சிறப்பு.

எக்காரணம் கொண்டும், கட்டடத்தின் தலைவாசலை நீச்ச‌த்தில் உள்ளது போல் அமைக்கக்கூடாது. மீறினால் வாழ்வில் இன்னல்கள் உண்டாகும்.