Published:Updated:

வாடகை வீட்டில் வாஸ்து பிரச்னையா?

வாஸ்து நிபுணர் Dr.ஆண்டாள் பி.சொக்கலிங்கம்

பிரீமியம் ஸ்டோரி

வாஸ்துவைப் பொறுத்தவரை சொந்த வீடு, வாடகை வீடு என்று எந்த வித்தியாசமும் இல்லை. வாடகை வீட்டிலும் முறையான வாஸ்து அமைப்புகள் இருக்கவேண்டும். ஆனால், வாடகை வீடு கிடைப்பதே கஷ்டம் என்று இருக்கக்கூடிய சூழலில் வாஸ்து முறைப்படி அந்த வீட்டை மாற்றுவது என்பது எளிதான காரியமல்ல. வீட்டு உரிமையாளரும் அதற்கு ஒப்புக்கொள்ள மாட்டார். பிறகு எப்படி வாடகை வீட்டில் வாஸ்துவை நூறு சதவிகிதம் அமைப்பது?!

பகவத்கீதையில் ஓர் அருள்வாக்கு உண்டு. `இல்லாததை இருப்பதாக உருவாக்க முடியாது. இல்லை என்றால் இல்லைதான்’ என்கிறது கீதை. ஆகவே, வாடகை வீடு வாஸ்துபடி இல்லையெனில், அதற்குப் பரிகாரமாக வாஸ்து பொருள்களை வாங்கிவைப்பது சரியல்ல. கடவுளை நம்பாமல் படைப்புகளை நம்புவது தேவையற்றது என்கின்றன சாஸ்திரங்கள். ஆகவே, வாடகைக்குக் குடியிருக்கும் வீட்டில் ஏதோ வாஸ்து குறைபாடு உள்ளது என்று நீங்கள் கருதினால், அது மனக்குறையாக இருந்தால் ‘தானம், நிதானம், சமாதானம்’ என்ற வழிமுறைகளைக் கடைப்பிடிக்கலாம்.

உங்களால் முடிந்த தானத்தை தினமும் செய்யலாம். அது வாஸ்து குறைபாடுகளை சரி செய்யும். எல்லாவற்றுக்குமே ஒரு காலம், நேரம் தேவைப்படும். பொறுமையோடு எந்த காரியத்தையும் அணுகவேண்டும். அவசர கதியில் எதையும் செய்யக் கூடாது. ஆக நிதானத்தைக் கடைப்பிடித்தால் நல்லதே நடக்கும். அடுத்து சமாதானம். பிரச்னைகளே இல்லாத வாழ்க்கை வேண்டுமென்றால் எவர் மீதும் வன்மம் இல்லாமல் விட்டுப்பிடிக்கும் சமாதான வாழ்க்கையை மேற்கொள்ள வேண்டும். கோபமில்லாத வாழ்க்கை பல துன்பங்களைத் தவிர்த்துவிடும். எனவே வாழ்வில் சமாதானத்தை கடைப்பிடிப்ப வர்களுக்கு எந்த துன்பமும் வருவதே இல்லை.

வாஸ்து
வாஸ்து

வீட்டில் ஒரு பொருளை 96 நாள்கள் தொடாமல், பயன்படுத்தாமல் இருந்தால் அது எதிர்மறை விளைவுகளை உண்டாக்கும். ஆகவே, வேண்டாத பொருள்களை எடுத்துவிடுங்கள். வீட்டைச் சுத்தமாக வைத்துக்கொள்ளுங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பூஜையறையில் வெள்ளிக்கிழமை இரவு 8 முதல் 9 மணிக்குள் கல் உப்பு வைத்து வழிபடுங்கள். உப்பு மகாலட்சுமி என்பதால் செல்வம் சேரும். அதேபோல், அதே வேளையில் துர்கை அம்மனுக்கு அகல் விளக்கில் நல்லெண்ணெய் ஊற்றி வெள்ளைத் தாமரை சாத்தி வழிபடுங்கள். சமையலறையில் நல்ல இசையை ஒலிக்கவிடுங்கள்.

மேலே சொன்ன விஷயங்கள் உங்கள் வீட்டின் வாஸ்து பிரச்னைகளைச் சரிசெய்து உங்கள் வாழ்வை வளமாக்கும்.

உங்கள் ராசிக்கு எந்தத் திசையில் வீட்டு வாசல் அமையவேண்டும்?

வாஸ்து விளக்கங்களை அறிய...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு