
நாம் இங்கே தலைவாசல் குறித்த சில வேதை களைப் பற்றி அறிந்துகொள்வோம்.
சொந்த வீடு அல்லது தொழில் நிறுவனத்துக் கான புதிய கட்டடங்களைக் கட்டும்போது, கவனத் துடன் தவிர்க்கவேண்டிய சில குறைகளைப் பற்றி ஞான நூல்கள் விளக்கியுள்ளன. அப்படியான குறைகளை `வேதைகள்’ என்பார்கள்.
நாம் இங்கே தலைவாசல் குறித்த சில வேதை களைப் பற்றி அறிந்துகொள்வோம்.
நிசாசர வேதை: அமையப்போகும் கட்டடத் துக்குள் பகலில் சூரிய ஒளியும் இரவில் சந்திரனின் ஒளியும் நன்குபடும்படி இருப்பது அவசியம். அதனால் ஆரோக்கியமான வாழ்வைப் பெறலாம்.
பர்வத வேதை: கட்டடம் அல்லது வீட்டின்மீது மலையின் உச்சி, மலையின் சாய்வு ஆகியவற்றின் நிழல் பரவினால் செல்வ அழிவு ஏற்படும்

ஸங்காத வேதை: வீட்டின் முன் கால்நடைகளைக் கொல்லும் இடமிருந்தால், இல்லத் தலைவனின் ஆயுள் குறையும். புகழ் மங்குதலும் ஏற்படும்.
கூப வேதை: வீட்டின் தலைவாசலுக்கு எதிரில் கிணறு இருந்தால், அந்த வீட்டில் வசிக்கும் தலை வனுக்கு விபத்துகள் அல்லது இதயம் சம்பந்தமான (சுவாசக்) கோளாறுகள் ஏற்படும்.
விருட்ச வேதை: வீட்டுக்கு எதிரில் பட்டுப்போன மரம் இருந்தால், பிள்ளைகளுக்குத் துயரமும், வீட்டில் வறுமையும் தீங்கும் ஏற்படும்.
விகட வேதை: வீட்டின் தலைவாசலின் அகலம் மற்றும் உயரம் இல்லத்துக்கேற்ப சரியாக இருக்கவேண்டும். இல்லையெனில் அது விகட வேதை ஆகும்; ஆயுள் குறைவு ஏற்படும்.
குலிச வேதை: இல்லத்தின் தலைவாயில் மற்றுமுள்ள வாயில்களின் கதவுகள் கோடரி போன்ற ஆயுதங்களால் தாக்கப்பட்டு, பழுதாகியிருந்தால் இல்லத் தலைவன் ஆயுள் இழப்பான்.
அந்தர்வினத த்வார வேதை: தலைவாசல் சரியாக அமையாமல் வீட்டின் உள்நோக்கிச் சாய்ந்திருந்தால், அந்த வீட்டில் பூசல்கள் நிறைந்திருக்கும்.
பாஹ்யவிநத த்வார வேதை: வீட்டின் தலைவாசல் வெளிப்பகுதியை நோக்கிச் சாய்ந்திருந்தால், இல்லத்தலைவனுக்குப் பயணங்கள் அதிகரிக்கும்.
இந்தக் குறைகள் இல்லாதவாறு தலைவாசல் அமையும்போது, அந்த இல்லத்தில் சகல சுபிட்சங் களும் பெருகும்.
- கே. சுப்ரமணியம், சிதம்பரம்