Published:Updated:

வாஸ்துப்படி வீட்டில் பூஜையறை எப்படி இருக்கவேண்டும்? #video

பூஜையறை
பூஜையறை

மனிதனும் தெய்வமாகலாம் என்பதற்கு ஆகச்சிறந்த உதாரணம் ஆண்டாள். கனவு கண்டு நினைத்ததை நிறைவேற்றிய பெண் தெய்வம்.

வாஸ்துப்படி வீட்டில் பூஜையறை எப்படி இருக்கவேண்டும், அதில் என்ன வகையான சுவாமிப் படங்கள் இடம் பெறவேண்டும் என்பது பற்றி வாஸ்து நிபுணர் ஆண்டாள் பி.சொக்கலிங்கத்திடம் கேட்டோம்.

``பூஜையறை என்பது அளவோடு சிறியதாக இருக்கவேண்டும். பூஜையறை வடகிழக்கு, தென்மேற்கு, பிரம்மஸ்தானம் எனும் வீட்டின் நடுப்பகுதி ஆகிய பகுதிகளைத் தவிர, வேறு எங்கு வேண்டுமானாலும் இருக்கலாம்.

பூஜையறை விளக்கு
பூஜையறை விளக்கு

பூஜையறை தென்கிழக்கில் வைப்பது மிகவும் சிறப்பானது. பொதுவாக, சைவ உணவு சாப்பிடுபவரின் வீடுகளில் இந்த இடத்தில்தான் சமையலறை இருக்கும். குறிப்பாக சமையலறையோடு பூஜையறையில் இருப்பதை நாம் பார்க்கலாம். அதற்குக் காரணம் என்னவென்றால், நாம் சமைக்கும்போது நமது உணவு வகைகளிலிருந்து வரும் வாசனை அவிர்ப்பாகமாக இறைவனுக்குப் படையல் ஆவதுதான். இந்த ஒரு நோக்கத்தை அறிந்து பெரும்பாலானவர்கள் சமையலறைக்கு அருகில் பூஜையறையை வைப்பார்கள். வடமேற்குப் பகுதியிலும் பூஜையறை அமைக்கலாம்.

பூஜையறை அமைக்கும்போது கோயில் வடிவிலான மரத்தாலான அமைப்பில் சிமென்ட் கட்டுமானங்களில் சிலர் அமைப்பதைப் பார்த்திருக்கிறேன். ஆனால், அத்தகைய அமைப்பை வீட்டில் அமைக்கத் தேவையில்லை. ஏனென்றால் கோயில்  அமைக்கும்போது அதற்குரிய ஆகம விதிகள் வேறானவை. அவற்றை நாம் வீட்டுக்குக் கொண்டுவர வேண்டியதில்லை.

பூஜையறை
பூஜையறை

பூஜையறையில் பழனி மலை முருகன், திருச்செந்தூர் செந்திலாண்டவன் படங்களை இடம்பெறச்செய்யலாம். பழனி முருகனைப் பொறுத்தவரை 'என் நாடு என் மக்கள்' என்று தனியாகச் சென்று வெற்றிக்கொடி நாட்டியவர். அது நமக்கு மிகவும் உத்வேகத்தை அளிக்கக் கூடியதாக இருக்கும்.

வழிகாட்டும் வாஸ்து!

திருச்செந்தூரைப் பொறுத்தவரை பல படிகள் இறங்கிச் சென்று சுவாமி தரிசனம் செய்துவிட்டு மீண்டும் பல படிகள் ஏறி வரவேண்டியிருக்கும் இது வேறு எந்தக் கோயிலிலும் இல்லாத ஒரு நிலை. எனவே, திருச்செந்தூர் முருகனை வழிபட்டால் வாழ்க்கை ஏறுமுகம்தான்.

சிவன் பார்வதி
சிவன் பார்வதி

காஞ்சி காமாட்சியின் படம் ரொம்பவும் முக்கியம். காரணம் என்னவென்றால் காஞ்சிபுரத்தில் ஏராளமான சிவாலயங்கள் இருந்தாலும், அம்மனுக்குத் தனிக்கோயில் அமைந்திருப்பது காமாட்சி அம்மன் கோயிலில்தான்.

ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் படத்தை வைத்து வழிபடுவது மிகவும் நல்லது. மனிதனும் தெய்வமாகலாம் என்பதற்கு ஆகச்சிறந்த உதாரணம் ஆண்டாள். கனவு கண்டு நினைத்ததை நிறைவேற்றிய பெண் தெய்வம்.

ஆண்டாள்
ஆண்டாள்

ஆண்டாள் இயற்றிய நாச்சியார் திருமொழி 143 பாசுரங்களைக் கொண்டது. திருப்பாவை 30 பாசுரங்கள் கொண்டது இவற்றையெல்லாம் இயற்றிவிட்டு அவர் சென்று சேர்ந்த இடம் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் சந்நிதி. ஆண்டாளை நாம் சிறந்த முன்னுதாரணமாகக் கொண்டு வரவேண்டும். நாம் வாழ்வில் முன்னேற அது பெரிதும் உதவிடும்.

வாஸ்து என்பது ஏமாற்று வேலையா? #Video

திருவண்ணாமலை, சதுரகிரி ஆகிய சிவாலயங்களின் படங்கள், திருவொற்றியூர் வடிவுடையம்மன் ஆகிய படங்களை வைத்து வணங்கலாம்.

ராமர் பட்டாபிஷேகம்
ராமர் பட்டாபிஷேகம்

பெரியபாளையம் பவானி அம்மன், சிறுவாச்சூர் மதுர காளியம்மன், சமயபுரம் மாரியம்மன், தஞ்சாவூர் அருகில் இருக்கும் புன்னைநல்லூர் மாரியம்மன் ஆகிய அம்மன் கோயில் ஆகியவை மிகவும் சிறப்பான சேத்திரங்கள். இந்த அம்மன் திருத்தலங்களின் படங்களை வீட்டில் வைத்து வணங்குவது நல்ல பலன்களை அளிக்கும்.

அன்னபூரணியை வைத்திருப்பவர்கள் தினமும் அதற்குப் படையலிடும் அரிசியை மாற்றவேண்டும், சாளக்கிராமம் வைத்திருப்பவர்கள் தினமும் அதற்கு உணவளிக்க வேண்டும். இவற்றுக்கெல்லாம் மேலாக ஶ்ரீராமர் பட்டாபிஷேகப்படம் மிகவும் சிறப்பானது.

பூஜையறையில் நிறைய பொருள்களை அடைத்து வைக்காமல் சுத்தமாகவும் தூய்மையாகவும் தட்டுமுட்டுச் சாமான்கள் இல்லாதவாறு வைத்திருப்பது சிறப்பான பலன்களைத் தரும்.  இப்படி எல்லாம் செய்தால் உங்களின் பூஜையறை மிகவும் சந்தோஷம் தரும் இடமாகவும் மனநிம்மதி தரக்கூடியதாகவும் இருக்கும் என்கிறார் ஆண்டாள் பி.சொக்கலிங்கம்.

அடுத்த கட்டுரைக்கு