Published:Updated:

எந்த ராசிக்கு இந்த வாரம் சாதகம்? - ஜோதிடர் ஸ்ரீரங்கம் கார்த்திகேயன் #Video

இன்றைய ராசிபலன்
இன்றைய ராசிபலன்

எந்த ராசிக்கு இந்த வாரம் சாதகம்? - ஜோதிடர் ஸ்ரீரங்கம் கார்த்திகேயன் #Video

மே 30 முதல் ஜூன் 5 வரையிலான இந்த வாரத்துக்கான ராசிபலன்களை ஜோதிடர் ஸ்ரீரங்கம் இரா. கார்த்திகேயன் கணித்துத் தந்திருக்கிறார். குறிப்பாக இந்த வாரத்தில் சந்திரனின் சஞ்சாரத்தை அடிப்படையாகக் கொண்டு மேஷம் முதல் மீனம் வரையிலான பன்னிரண்டு ராசிகளுக்கான ராசி பலன்களை வழங்கியிருக்கிறார்.

வார ராசிபலன்கள்
வார ராசிபலன்கள்

சந்திர பகவான் மே 30 முதல் ஜூன் 5 வரை தனுசி ராசியிலிருந்து மீன ராசி வரை சஞ்சாரம் செய்ய இருக்கிறார். ஜூன் 5-ம் தேதி சந்திரன் மீன ராசியில் தன் சஞ்சாரத்தை முடிக்கிறார். எனவே தனுசு, மகரம், கும்பம், மீனம் ஆகிய நான்கு ராசிகளில் சந்திரன் சஞ்சாரம் செய்யும் போது உண்டாகும் பலன்களின் அடிப்படையில் இந்த வார பலன்களை வழங்கியிருக்கிறார் ஸ்ரீரங்கம் கார்த்திகேயன்.

இந்த வாரத்தின் தொடக்கத்தில் ராகு, புதன், சூரியன் ஆகியோர் ரிஷப ராசியில் சஞ்சரிக்கிறார்கள். சுக்கிரனும் செவ்வாயும் மிதுனத்தில் சஞ்சரிக்கிறார்கள். கேது விருச்சிகத்திலும் சனி மகரத்திலும் இருக்கிறார்கள். குருபகவான் அதிசாரமாக கும்பத்தில் சஞ்சரிக்கிறார். செவ்வாய் பகவான் 3 ம் தேதி மிதுனத்திலிருந்து விலகி கடகராசிக்குள் பிரவேசிக்கிறார்.

ஸ்ரீரங்கம் கார்த்திகேயன்
ஸ்ரீரங்கம் கார்த்திகேயன்

இந்த சஞ்சாரங்களையும் மனதில் கொண்டு தனிப்பட்ட வாழ்க்கை, தொழில், ஆரோக்கியம், குடும்பம் ஆகியன குறித்த கணிப்புகளை வழங்கியிருக்கிறார் ஸ்ரீரங்கம் கார்த்திகேயன். இந்த வார பலன்களை அறிந்துகொள்ள கீழே உள்ள வீடியோவைப் பாருங்கள்.

அடுத்த கட்டுரைக்கு