Published:Updated:

இந்த வாரம் காரிய வெற்றி எந்த ராசிக்கு? வார ராசிபலன் - ஜூன் 20 முதல் ஜூன் 26 வரை! #Video

வார ராசிபலன்
வார ராசிபலன்

இந்த வாரம் காரிய வெற்றி எந்த ராசிக்கு? வார ராசிபலன் - ஜூன் 20 முதல் ஜூன் 26 வரை! #Video

ஒவ்வொரு வாரமும் நமக்கு எப்படி அமையும் என்னும் எதிர்பார்ப்பு ஒவ்வொருவருக்கும் உள்ளது. அப்படி இந்த வாரத்துக்கான ராசிபலன்களை அறிந்துகொள்வதற்கு முன்பாக இந்த வார கிரக நிலவரங்களைப் பார்ப்போம். தற்போது, ரிஷபத்தில் ராகு, புதன், மிதுனத்தில் சூரியன், சுக்கிரன், கடகத்தில் செவ்வாய், விருச்சிகத்தில் கேது, மகரத்தில் சனி என கிரக சஞ்சாரங்கள் உள்ளன.

குரு பகவான்
குரு பகவான்

இதில் சுக்கிரன், ஆனி மாதம் 9 ம் தேதி (ஜூன் 23) ம் தேதி மிதுனத்திலிருந்து கடக ராசிக்குப் பெயர்ச்சியாகிறார். இந்த வாரத்தின் தொடக்கத்திலேயே குருபகவான் வக்ர கதி அடைகிறார். இதையும் கவனத்தில் கொள்ளவேண்டும். முழு சுபகிரகமான குருபகவான் வக்ர கதி அடைவதன் மூலம் பல மாற்றங்கள் ஏற்படும் என்று சொல்வார்கள்.

இந்த வாரத் தொடக்கத்தில் கன்னி ராசியில் சித்திரை நட்சத்திரத்தில் சந்திரன் சஞ்சாரம் செய்கிறார். வாரம் முடியும்போது, மகர ராசியில் உத்திராட நட்சத்திரத்தில் முடிக்கிறார். இதன் காரணமாக, மீனம், மேஷம், ரிஷபம் ஆகிய ராசிகளுக்கு ராசிகளுக்கு சந்திராஷ்டம் தினங்கள் இந்த வாரம் ஏற்படுகிறது.

இந்த அடிப்படையில் எந்த ராசிக்கு சந்திரன் சாதகமாக சஞ்சரிக்கப்போகிறார்? எந்த ராசிக் காரர்கள் இதனால் பயன் அடைவார்கள்? யார் எல்லாம் கொஞ்சம் எச்சரிக்கையோடு இந்த வாரத்தைக் கடக்க வேண்டும் என்னும் தகவல்களோடு எளிய பரிகாரங்களையும் வழங்கியிருக்கிறார் ஜோதிடர் ஸ்ரீரங்கம் கார்த்திகேயன். அந்தக் கணிப்புகளைக் மேலே உள்ள வீடியோவில் பாருங்கள்.

அடுத்த கட்டுரைக்கு