Published:Updated:

அடுத்தவர்களுக்கு உதவுவதில் ஆர்வம் காட்டும் தனுசு ராசிக்காரர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?

தனுசு ராசி

தனுசு ராசிக்காரர்களின் குணநலன்கள்.

Published:Updated:

அடுத்தவர்களுக்கு உதவுவதில் ஆர்வம் காட்டும் தனுசு ராசிக்காரர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?

தனுசு ராசிக்காரர்களின் குணநலன்கள்.

தனுசு ராசி

பன்னிரண்டு ராசிக்காரர்களில், ஒவ்வொரு ராசிக்காரருக்கும் வெவ்வேறு விதமான குணங்கள் இருக்கும். ஆகவே, பன்னிரண்டு ராசிக்காரர்களின் குணநலன்கள் பற்றி ஜோதிடக்கலை அரசு ஆதித்ய குருஜியிடம் கேட்டோம். தனுசு ராசிக்காரர்களின் குணங்கள்பற்றி அவர் இங்கே விவரிக்கிறார்.

ராசிகள்
ராசிகள்

தனுசு ராசிக்காரர்கள் சிறந்த ஆன்மிகவாதிகளாக இருப்பார்கள். நாத்திகவாதிகளாக இருந்தாலும், தங்களுக்கு மேல் ஒரு சக்தி இருக்கிறதென்பதில் ஆழ்ந்த நம்பிக்கைக் கொண்டிருப்பார்கள். தனுசு ராசிக்காரகள் சாஸ்திர சம்பிரதாயங்களில் மிகுந்த நம்பிக்கையும் அவற்றைக் கடைப்பிடிப்பதில் மனஉறுதியும் உள்ளவர்களாக இருப்பார்கள்.முன்னோர்கள் சொன்ன வார்த்தைகளைக் கடைப்பிடிப்பார்கள். வீட்டின் மூத்தவர்கள் சொல்லும் சொற்களைக் கேட்டு அதன்படி நடப்பார்கள்.

தனுசு ராசிக்காரர்கள் அடுத்தவர்களுக்கு உதவுவதில் மிகுந்த ஆர்வமுள்ளவர்களாக இருப்பார்கள். குருவின் ஆதிக்கத்தில் பிறந்த தனுசு, மீனம் ராசிக்காரர்கள் இருவருமே ஊருக்காக உழைத்துவிட்டு, வீட்டிலுள்ளவர்களிடம் நற்பெயர் எடுக்கமாட்டார்கள். 'எல்லோரும் நல்லவரே' என நம்பி ஏமார்ந்து போவார்கள். அப்படியே ஏமார்ந்தாலும், ஆத்திரப்பட மாட்டார்கள். 'பணம் வேண்டுமா, புகழ் வேண்டுமா?' என்றால் 'புகழ்தான் வேண்டும்' என யோசிக்காமல் சொல்லுவார்கள்.

தான் சம்பாதிக்கும் பணத்தில் ஒரு பகுதியை தானமாக வழங்குவரக்ள். மஞ்சள் இவர்களுக்குரிய ராசியான நிறம். வங்கித்துறை, ஆன்மிகம், கோயில், ஆசிரியர் பணி ஆகியவற்றில் ஈடுபட்டுப் புகழ்பெறுவார்கள். இவர்கள் வணங்க வேண்டிய தெய்வம் தட்சிணாமூர்த்தி மற்றும் சிவன். சிவ வழிபாடு, பிரதோஷ வழிபாடு ஆகியவை இவர்களுக்கு விருப்பமுள்ளதாக இருக்கும். தூரதேச பயணங்களில் ஆர்வமுள்ளவர்களாக இருப்பார்கள். கோயில் குளங்களுக்குத் தீர்த்தயாத்திரைகளை அடிக்கடி செய்வார்கள்'' என்கிறார் ஜோதிடக்கலை அரசு ஆதித்ய குருஜி.