Published:Updated:

வீட்டுமனை வாங்கும்போது கவனிக்க வேண்டிய 9 வாஸ்துக் குறிப்புகள்! #Vasthu #Video

"நாம் தேர்வு செய்யும் இடத்துக்கு வடக்கிலும் கிழக்கிலும் கோயில் இருக்கக் கூடாது. கோயில்குளம் வீட்டுக்குத் தென்கிழக்கு, வடமேற்கு, தென்மேற்கில் இல்லாதவாறு பார்த்து வாங்க வேண்டும். இதற்கு மாறான இடத்தை வாங்கி, வீடு கட்டி வசித்தால் கையில் காசு பணம் தங்காது."

வாஸ்து
வாஸ்து

கிராமங்களில் இருந்து நகரங்களுக்கும் நகரங்களிலிருந்து பெருநகரங்களுக்கும் பிள்ளைகளின் கல்வி, வேலை வாய்ப்புக்காகப் புலம்பெயர்ந்து வாழ்வதென்பது இன்று சர்வசாதாரணமாகிவிட்டது. அப்படி வாழுமிடங்களில், மக்கள் தங்களுக்காகவும் தங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்துக்காகவும் வீட்டுமனை வாங்கிப்போடுவதும் அங்கு வீடு கட்டிக் குடியேறுவதும் இயல்பு. அப்படி வாங்கும் வீட்டுமனையை வாஸ்துபடித் தேர்வு செய்வதெப்படி என்பது பற்றி பிரபஞ்ச வாஸ்து நிபுணர் ஆண்டாள் பி.சொக்கலிங்கத்திடம் கேட்டோம்.

வீடு
வீடு

''வீட்டைக் கட்டிப் பார், கல்யாணம் பண்ணிப் பார்' என்பது முதுமொழி. ஆனால், நாகரிக உலகில் சொந்த வீடு கட்டுவதற்கு வங்கிக்கடன், பிரதமர் வழங்கும் அரசு மானியம் எனப் பல வசதி வாய்ப்புகள் தற்போது உள்ளன. அவரவர் வசதிக்கேற்ப தங்களின் தேவைக்கான கனவு இல்லத்தைக் கட்டி முடிப்பதென்பது இன்று முயன்றால் சாத்தியமான விஷயம்தான். 'மனமிருந்தால் மார்க்கமுண்டு' என்று பலரும் தங்களின் சொந்தவீட்டுக் கனவுகளை நிறைவேற்றி வருகிறார்கள். அப்படிச் சொந்தவீடு கட்டுவதற்குத் தேவையான மனையைத் தேர்வு செய்வதெப்படி எனப் பார்ப்போம்.

* ஓர் இடத்தை வாங்க முடிவு செய்தால் அந்த இடத்துக்குள் போய்பார்ப்பதைவிட அந்த இடத்துக்கு வெளியே என்ன இருக்கிறதென்று பார்க்க வேண்டும். இடத்தின் தென்மேற்குப் பகுதி உயரமாகவும் வடகிழக்குப் பகுதி பள்ளமாகவும் இருப்பது நல்லது.

வீடு
வீடு

* தென்மேற்குப்பகுதி உயரமாக இருக்கிறதென்றால் உயரமான மலைகள், தோப்புகள், மரங்கள் போன்றவை இருக்கலாம். ஆனால், இவை வடகிழக்கில் இருக்கக் கூடாது.

* இடம் வாங்கும்போது, பொதுக்கிணறு, குளம், ஏரி ஆகியவை இருப்பதைக் கவனிக்க வேண்டும். வடகிழக்கில் கிணறு, ஏரி, ஆறு போன்ற நீர்நிலைகள் இருப்பது சிறப்பு.

* தெருக்குத்து என்பது வீட்டுமனை வாங்கும்போது கவனிக்க வேண்டிய மற்றுமொரு முக்கியமான அம்சம். தெருக்குத்தில், இரண்டு வகைகள் இருக்கின்றன. வீட்டுக்கு வடக்கு மற்றும் கிழக்கு நோக்கி வாசல் அமைவது சிறப்பு. அப்படி அமைந்த வாசலில் இருந்து தெரு தொடங்குவது நல்லது. பிற திசைகளில் வாசல் அமைய, அங்கு தெருக்குத்து அமைவது உகந்ததல்ல.

ஆண்டாள் பி. சொக்கலிங்கம்
ஆண்டாள் பி. சொக்கலிங்கம்

* வடக்கிலிருக்கும் தெருவும் கிழக்கிலிருக்கும் தெருவும் சந்திக்கும் இடத்தில் இருக்குமிடத்தை வாங்கச் சிலர் யோசிப்பார்கள். அப்படி யோசிக்கத் தேவையில்லை. மனையில் 100 சதுர அடி அளவை விட்டுவிட்டு வீடு கட்டலாம். அப்படிச் செய்யும்போது அந்த இடம் யோகமுள்ளதாக மாறும்.

* கோயில் கோபுரத்தின் நிழல் விழும் இடம், மிக உயரமான கட்டடங்கள், மின்சார டிரான்ஸ்பார்மர்கள், செல்போன் டவர்கள் ஆகியவை இருக்குமிடங்களைப் பாதுகாப்பு போன்ற பொதுவான காரணங்களுக்காக மட்டுமில்லாமல் வாஸ்துப்படியும் கவனிக்க வேண்டும்.

* வடக்கிலிருக்கும் தெருவும் கிழக்கிலிருக்கும் தெருவும் சந்திக்கும் இடத்தில் இருக்குமிடத்தை வாங்கச் சிலர் யோசிப்பார்கள். அப்படி யோசிக்கத் தேவையில்லை. மனையில் 100 சதுர அடி அளவை விட்டுவிட்டு வீடு கட்டலாம். அப்படிச் செய்யும்போது அந்த இடம் யோகமுள்ளதாக மாறும்.

* கோயில் கோபுரத்தின் நிழல் விழும் இடம், மிக உயரமான கட்டடங்கள், மின்சார டிரான்ஸ்பார்மர்கள், செல்போன் டவர்கள் ஆகியவை இருக்குமிடங்களைப் பாதுகாப்பு போன்ற பொதுவான காரணங்களுக்காக மட்டுமல்லாமல் வாஸ்துபடியும் கவனிக்க வேண்டும்.

அழகிய இல்லம்
அழகிய இல்லம்

* நாம் தேர்வு செய்யும் இடத்துக்கு வடக்கிலும் கிழக்கிலும் கோயில் இருக்கக் கூடாது. கோயில்குளம் வீட்டுக்குத் தென்கிழக்கு, வடமேற்கு, தென்மேற்கில் இல்லாதவாறு பார்த்து வாங்க வேண்டும். இதற்கு மாறான இடத்தை வாங்கி, வீடு கட்டி வசித்தால் கையில் காசு பணம் தங்காது.

* நிலம், காலிமனை ஆகியவற்றை வாங்கும்போது மருத்துவமனை, போலீஸ் ஸ்டேஷன், சுடுகாடு ஆகியவை அருகில் இல்லாத மனைகளாக வாங்குவது வாஸ்துபடி மட்டுமல்ல உளவியல் ரீதியாகவும் நம்மை மேம்படுத்தும்.

வாடகை வீட்டில் இருப்பவர்களும் வாஸ்து பார்க்க வேண்டுமா?

* இடத்துக்கான லே அவுட்டில் குறைவான விலை என்பதற்காக ஒழுங்கற்ற அளவுகள் உள்ள மனைகளை வாங்கக் கூடாது. அளவில் கூடுதலாக இருந்தாலும், மனையைச் சதுரமாகவோ செவ்வகமாகவோ கத்தரித்துப் பிரித்துத்தான் வீடு கட்ட வேண்டும். இடம் இருக்கிறதென்பதற்காக அப்படியே கட்டக் கூடாது. தேவையற்ற இடத்தைப் பயன்படுத்தாமலிருப்பது நல்லது'' என்கிறார் வாஸ்து நிபுணர் ஆண்டாள் பி. சொக்கலிங்கம்.