Published:Updated:

எப்போது நீங்கும் இந்த கொரொனா காலம்... நம்பிக்கையே வலிமை! - அதிகாலை சுபவேளை

கொரொனா காலம் தெய்வ வழிபாடு!
கொரொனா காலம் தெய்வ வழிபாடு!

எப்போது நீங்கும் இந்த கொரொனா காலம்... நம்பிக்கையே வலிமை! - அதிகாலை சுபவேளை

இன்றைய பஞ்சாங்கம்

15. 6. 21 ஆனி 1 செவ்வாய்க்கிழமை

திதி: பஞ்சமி இரவு 8.21 வரை பிறகு சஷ்டி

நட்சத்திரம்: ஆயில்யம் இரவு 7.33 வரை பிறகு மகம்

யோகம்: சித்தயோகம்

ராகுகாலம்: பகல் 3 முதல் 4.30 வரை

எமகண்டம்: காலை 9 முதல் 10.30 வரை

நல்லநேரம்: காலை 7.30 முதல் 8 வரை/ மாலை 4.30 முதல் 5.30 வரை

வாராஹி
வாராஹி

சந்திராஷ்டமம்: பூராடம் இரவு 7.33 வரை பிறகு உத்திராடம்

சூலம்: வடக்கு

பரிகாரம்: பால்

வழிபடவேண்டிய தெய்வம்: வாராஹி தேவி

எப்போது நீங்கும் இந்த கொரொனா காலம்... நம்பிக்கையே வலிமை!

இந்த நோய்த் தொற்றுக்காலம் அனைவரையும் சோர்ந்துபோகச் செய்கிறது. நம்மைச் சுற்றி நடக்கும் அனைத்தும் நம்மை நம்பிக்கை இழக்கச் செய்கின்றன. நோயினால் கொஞ்சம்பேரும் அச்சத்தில் பெரும்பாலானவர்களும் பாதிக்கப்படுகின்றனர். எப்போது இந்தக் கொடுங்காலம் நீங்கும் என்கிற வினா எல்லோர் மனத்திலும் எழுகிறது. ஜோதிட ரீதியாக கொரோனா நீங்கும் காலம் என ஒன்றைச் சொல்கிறார்கள். அதுவரைக்கும் துன்பம் நீளும் என்று நினைக்கவே பயமாக இருக்கிறது. ஓர் உண்மையைப் புரிந்துகொள்ள வேண்டும். கொரோனா போன்ற கொள்ளை நோய்கள் உலகுக்குப் புதியன அல்ல. ஒவ்வொரு நூற்றாண்டிலும் ஒரு நோய் தோன்றி உயிர்களை வதைத்தன என்பது தான் நிஜம். ஆனால் அவற்றிலிருந்து எப்படி நம் முந்தைய தலைமுறைகள் மீண்டார்கள் என்னும் பாடம் மிக முக்கியமானது. நமக்குத் தேவை முதலில் நம்பிக்கை. நம்பிக்கையின் மூலம் உருவாகும் ஒரு போர்குணம். இதுகுறித்து மேலும் அறிந்துகொள்ள கீழே உள்ள வீடியோவைப் பாருங்கள்.

இன்றைய ராசிபலன்

விரிவான இன்றைய பலன்களை அறிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.

மேஷம்

ஆதாயம் : உறவினர்கள் மற்றும் நண்பர்களால் ஆதாயம் ஏற்படும் நாள். செலவுகள் அதிகரிப்பதால் சிக்கன நடவடிக்கை அவசியம். - ஆல் இஸ் வெல்!

ரிஷபம்

அனுகூலம் : தேவையற்ற சஞ்சலம் ஏற்படும் நாள். அதைத் தவிர்த்துவிட்டால் மகிழ்ச்சியும் அனுகூலமும் அதிகரிக்கும். குடும்பத்தில் அன்பு நிறைந்திருக்கும். - இறைவன் இருக்க பயம் ஏன்?!

மிதுனம்

பக்தி : நன்மைகள் நடைபெறும் நாள். ஆரோக்கியம் மேம்படும். இறைவழிபாட்டில் மனம் செல்லும். பிறர் விஷயத்தில் தலையிட வேண்டாம். - எல்லாம் அவன் செயல்!

கடகம்

கவனம் : புதிய முயற்சிகளில் மிகுந்த கவனம் தேவை. பிற்பகலுக்கு மேல் சாதகமான பலன்கள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. - டேக் கேர் ப்ளீஸ்!

சிம்மம்

ஆரோக்கியம் : செயல்கள் அனுகூலமாகும். என்றபோதும் ஆரோக்கியத்தில் உரிய அக்கறை தேவை. உறவினர்களிடம் பேசும்போது பொறுமை அவசியம். - ஹெல்த் இஸ் வெல்த்!

கன்னி

சாதகம் : அனைத்துவிதத்திலும் நன்மைகள் நடைபெறும் நாள். புதிய முயற்சிகள் சாதகமாகும். எதிர்பாராத பொருள் சேர்க்கைக்கும் வாய்ப்புண்டு. - சாதகமான ஜாதகம் இன்று!

துலாம்

நம்பிக்கை : மனதில் நம்பிக்கை அதிகரிக்கும். குடும்பத்திலிருந்த வருத்தங்கள் மாறி மகிழ்ச்சி திரும்பும். சகோதர உறவுகள் அனுகூலமாக இருப்பார்கள். - நம்பிக்கை அதுதானே எல்லாம்!

விருச்சிகம்

நிதானம் : பேச்சில் நிதானமும் செயலில் கவனமும் தேவைப்படும் நாள். குடும்பத்தில் சின்னச் சின்ன சச்சரவுகள் தோன்றி மறையும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. - கேர் ஃபுல் ப்ளீஸ்!

தனுசு:

குழப்பம் : பிரச்னைகளும் குழப்பங்களும் அதிகரிப்பதுபோல் தோன்றும். இறைவழிபாட்டில் ஈடுபடுங்கள். பிற்பகலுக்கு மேல் அனைத்தும் அனுகூலமாகும். - லெஸ் டென்ஷன் மோர் வொர்க்!

மகரம்

துணிவு : நம்பிக்கையும் துணிவும் ஏற்படும் நாள். புதிய முயற்சிகளைத் துணிந்து மேற்கொள்ளலாம். எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. - துணிவே துணை!

கும்பம்

வரவு : குழப்பங்கள் நீங்கிப் பணவரவும் மகிழ்ச்சியும் ஏற்படும் நாள். சகோதர உறவுகள் பணம் கேட்டு வருவார்கள். மற்றபடி நன்மைகளே நடைபெறும். - நாள் நல்ல நாள்!

மீனம்

செலவு : செலவுகள் அதிகரிக்கும். பேச்சில் பொறுமை அவசியம். தாய்வழி உறவுகள் ஆதரவாக இருப்பார்கள். சிந்தித்துச் செயல்படுவதன் மூலம் நன்மைகளை அதிகரிக்கலாம். - செலவே சமாளி!

அடுத்த கட்டுரைக்கு