Published:Updated:

கோசார பலன்கள்... எப்போது பலன் அளிக்கும்?

கோசார பலன்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
கோசார பலன்கள்

க.காந்தி முருகேஷ்வரர்

ருடத்திற்கு ஒருமுறை குருப்பெயர்ச்சியும், இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறை சனிப் பெயர்ச்சியும், ஒன்றரை ஆண்டுக்கு ஒரு முறை ராகு கேது பெயர்ச்சியும் நடைபெறுகின்றன.

இதையொட்டி, வாக்கிய பஞ்சாங்கம் மற்றும் திருக்கணித அடிப்படையில் பலன்கள் சொல்லப் படும். அவற்றின் அடிப்படையில் வாழ்க்கையில் எவ்விதமான ஏற்றத்தாழ்வுகள், மாற்றங்கள் ஏற்படும் என்பதை அறிந்துகொள்வதில் மக்கள் ஆர்வம் காட்டுவது இயற்கையே.

அதேநேரம், கிரகப் பெயர்ச்சிகளை ஒட்டிய பலன்கள் பொதுவானவையே. அந்தந்த கிரகங்களின் நிலைகளை - நகர்வுகளைக் கொண்டு, குறிப்பிட்ட காலத்தில் எந்த ராசிக் காரர்களுக்கு எவ்விதமான பலன்கள் அமைய வாய்ப்பு உண்டு எனும் பொதுவான தகவல்களை பெயர்ச்சி பலன்கள் சொல்லும். அவற்றில், சில ராசிகளுக்குக் குறைபாடுகள் மிக்க பலன்கள் அல்லது எதிர்மறையான பலன்கள் சொல்லப் படலாம். அதற்காக வருந்தத் தேவையில்லை; அவை கோசார பலன்களே.

கோசார பலன்கள்... எப்போது பலன் அளிக்கும்?

கோசார பலன்களான கிரகப் பெயர்ச்சிகளைவிடவும், அவரவருக்கு நடக்கும் தசாபுத்திகளே ஜாதகரை வழி நடத்தும். நல்ல தசா புத்தி காலங்களில் கோச்சார பலன்களும் நன்றாக அமைந்துவிட்டால் பெரிய வெற்றி, பணம், பெயர், புகழ் யாவும் கிடைக்கும்.

அதேபோல் ஜாதக அடிப்படையில் கெடுதியான தசா புத்திக வரும் வேளையில், கோசார பலன்கள் நன்றாக அமைந்திருந்தால், கெடுபலன்கள் கொஞ்சம் குறையும்.

ஆகவே வாசகர்கள் தெரிந்துகொள்ள வேண்டியது, ராசிக்குச் சொல்லப்படும் கோசாரப் பலன்கள் பொதுவானவைதான். சுய ஜாதகத்தில் - அவரவர் தசாபுத்திகளின்படிதான் பலன்கள் நடைபெறும். இனி, தசாகாலங்கள் குறித்த விவரங்களை அறிந்துகொள்வோம்.

தசா காலங்கள்

பிறக்கும் நட்சத்திரத்தின் அடிப்படையில் ஜாதகருக்கு  தசாகாலம் தொடங்கும். பிறந்த நேரத்தின்படி அமையும் லக்னத்தைப் பொறுத்து தசா இருப்பு கணக்கிடப்படுகிறது.

தசா இருப்பிலிருந்து அடுத்தடுத்து நடக்கும் தசைகளின்படி வாழ்க்கையில் படிப்படியான மாற்றம் ஏற்படும். தொடர்ந்து நல்ல தசை காலம் அமைபவர்களுக்கு ஆயுள் முழுக்க சந்தோஷம் நிலைத்திருக்கும். எதிர்மறையான தசாகாலம் தொடர்ந்து அமைந்தால், பலன்களும் குறைவுபடும். இப்படியான குறைபாடுகளையும், தடை களையும் பெரிதாக எண்ணாமல், வாழ்வின் வெற்றி-தோல்விகளை, ஏற்ற - இறக்கங்களை உள்ளபடியே ஏற்று, இறை பக்தியுடன் கர்மம் ஆற்றுவதில் முனைப்பு காட்டி வாழ்வோரை, எவ்வித இடர்ப் பாடுகளும் பாதிக்காது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

அதிஷ்ட தசைகள்

`நேற்று வரை சோற்றுக்கு வழியின்றி இருந்தார்கள். இன்றைக்குப் பணம் புகழ் சேர்ந்துவிட்டது’ என்று சிலரைப் பற்றிய பேச்சுகள் எழும். இப்படித் திடுமென ஒருவருக்கு அதிர்ஷ்டம் கைகூடுகிறது என்றால், அவருக்கு நல்ல தசாகாலம் தொடங்கிவிட்டது என்று அர்த்தம்.

தொழிலதிபதியான பத்தாம் அதிபதியின் தசா காலம் நடந்தால், அது லாபம் தரும். பதினோராம் அதிபதியின் தசாகாலத்தில், ஜாதகர் தொழிலில் திடீர் லாபம் பெறுவர். அதேபோல் லக்னாதிபதி மற்றும் ராசி அதிபதிகளின் தசாகாலங்கள் நல்ல யோகத்தைத் தரும்.

இரண்டு மற்றும் நான்காம் இடத்து அதிபதியின் தசாகாலங்களில் நல்ல வருமானமும், வீடு - வாகனம் மற்றும் சுக போகங்களும் கிடைக்கும். ஐந்து மற்றும் ஒன்பதாம் இடத்து அதிபதிகளின் தசா காலங்களில் குழந்தைகள் முன்னேற்றம் காண்பார்கள். அனைத்து விதமான பாக்கியங்களும் கிடைக்கும்.

கோசார பலன்கள்... எப்போது பலன் அளிக்கும்?

ஒருவருக்கு யோக பலன்கள் கைகூடவேண்டுமெனில், தசா அதிபதிகள் ஆட்சி, உச்சம் அடைந்திருப்பதுடன், சுபகிரகங்களின் பார்வையையும் சேர்க்கையையும் பெற்று நல்ல நிலையில் இருக்க வேண்டும். இத்துடன் கோசார பலனும் நன்றாக அமைந்துவிட்டால், சராசரி மனிதனும் கோடீஸ்வரனாகிவிடுவான்.

அதேபோல் இன்றொன்றையும் சொல்லியாக வேண்டும். எதிர் மறை பலன்களை அளிக்கும் திசைகளின் அதிபதியானவர் நிற்கும் நட்சத்திர சாரம் யோகமாக அமைந்துவிட்டால், திடீர் அதிர்ஷ்டம் விபரீதராஜ யோக பலன் கைகூடும்.

மத்திம பலன்களைத் தரும் தசா காலங்கள்

3, 6, 8, 12-ம் இடத்து அதிபதிகளும் 1, 2, 4, 5, 7, 9, 10, 11-ம் இடத்து அதிபதிகளும் இணைந்த தசாகாலங்களில், புத்திகளைப் பொறுத்து லாபமும் நஷ்டமும் கலந்து கிடைக்கும். உதாரணமாக.  3, 9-க்கு உடையவர், 6, 9-க்கு உடையவர், 12, 9-க்கு உடையவர் தசை நடந்தால், கிரக புத்தி நிலைகளைப் பொறுத்து வாழ்வில் நன்மை தீமைகள் ஏற்படும்.

எதிர்மறை பலன்களைத் தரும் தசாகாலங்கள்

உயர்ந்த அந்தஸ்தில் வாழ்ந்துகொண்டிருப்பவர் திடீரென அவப் பெயரைச் சந்தித்தால், தொழிலில் நஷ்டம், தீராத பிணிகள் ஏற்பட்டால், கடன் பிரச்னை, வழக்குகள், தேவையற்ற இழப்புகள் என்று ஏற்பட்டால், குறிப்பிட்ட காலம் அந்த ஜாதகருக்கு 3, 6, 8, 12-க்கு உடைய கிரகங்களின் தசாகாலமாக இருக்கும்.

3-வது தசா காலம், நீச தசா காலம், 4-வதாக சனி தசை அமைவது, 5-வதாக செவ்வாய் தசை அமைவது, 6-வதாக குரு திசை அமையும் நிலையும் எதிர்மறை பலன்களை அளிக்கும்.

சிலருக்கு `அதிர்ஷ்ட தசா காலம்’ நடக்கும் தருணத்திலும் கஷ்டம் ஏற்படுகிறது எனில், தசா அதிபதி பலமற்று திகழ்வார். அத்துடன்அசுப கிரகங்களின் பார்வையைப் பெற்று, மறைவிட அதிபதிகளின் நட்சத்திர சாரத்தில் இருப்பார் என்பதை அறியலாம். இனி கிரகப் பெயர்ச்சிகளைப் பார்ப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கிரகப் பெயர்ச்சிகள்

பொதுவாக வருடத்துக்கு ஒருமுறை குருவும், இரண்டரை ஆண்டு காலத்துக்கு ஒருமுறை சனியும், ஒன்றரை வருடத்துக்கு ஒருமுறை ராகு-கேதுவும் பெயர்ச்சியாகின்றன. கிரகங் களில் இவற்றின் பெயர்ச்சிகள் முக்கியத்துவம் பெறுகின்றன. அதேபோல், சந்திரன் 2 நாள் 6 மணி நேரம், சூரியன் 1 மாதம், செவ்வாய் ஒன்றரை மாதம், புதன், சுக்ரன் ஒருமாதம் என்ற காலக் கணக்குப்படி அடுத்த ராசிக்கு மாறுவார்கள்.

இத்தகைய கோசாரத்தில் குரு பகவான் 2, 5, 7, 9, 11-ல் இருக்கும் போது நற்பலன்களையும், 1, 3, 4, 10-ல் இருகும்போது மத்திம பலன்களையும் தருவார். 6, 8, 12-ல் எதிர்மறை பலன்கள் கிடைக்கும்.

சனி, 3, 6, 11 ஆகிய இடங்களில் வரும்போது அதிக நன்மையையும், 5, 9, 10-ல் சுமாரான பலன்களையும் தருவார். 4-ல் வரும்போது அர்த்தாஷ்டமச் சனி; 7-ல் இடம்பெற்றால் கண்டச் சனி; 8-ல் அஷ்டமத்துச் சனி; 12, 1, 2 இந்த இடங்களில் சனி வரும்போது ஏழரைச் சனிக் காலம் அமையும். இந்தக் காலகட்டங்களில் முறையே முடக்கம், எதிர்ப்புகள், இக்கட்டான நிலைகளில் அகப்படுதல், பிரச்னைகள் ஆகிய பலன்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு.

ராகு சனியின் அம்சமும்; கேது செவ்வாயின் அம்சமும் பெற்றிருப்பதால் அதற்கேற்ப பலன் தருவார்கள். இவர்கள் 3, 6, 9, 11-ம் இடங்களில் நன்மை செய்வார்கள். இருவரும் நிற்கும் நட்சத்திரம், பார்க்கும் கிரகங்களுக்கேற்ப பலன் தருவார்கள்.

கோசாரப்படி கிரகப் பெயர்ச்சிகள் எவ்வித மான பலன்களை அளிக்கும் எனப் பார்த்தோம். எனினும், குறைவான அல்லது எதிர்மறையான பலன்கள் சொல்லப்படும்போது `இந்தப் பெயர்ச்சியில் இப்படியான பலன்கள்தானா’ என்று மனச் சோர்வு அடையத் தேவையில்லை.

அவரவர் ஜாதகத்தை துல்லியமாக ஆராய்ந்து, அதன்படி கோசாரப் பலன்கள் எந்த அளவுக்கு ஒத்துழைப்பாக - பலமாக அமையும் என்பதைக் கணித்துச் செயல்பட்டு வெற்றி பெறலாம்.

பொருள் வசதி படைத்தவர்களும்கூட சில வேளைகளில் இனம் புரியாத மனத் துயரங் களுக்கு ஆளாவார்கள். அதேபோல், பொருளாதாரத்திலும் வாழ்க்கை நிலையிலும் பின்தங்கிய நிலையில் உள்ளவர்கள், அதீத மகிழ்ச்சியோடு வாழ்க்கையைக் கழிக்கும் நிலையும் உண்டு. இதற்கெல்லாம் காரணம் முன்வினைப்படி அமைந்த அவரவர் ஜாதகப் பலன்களே ஆகும்.

ஆக, கஷ்டங்களை எதிர்த்து போராடுபவர்களும், கஷ்டங்களோடு தன்னைத் தானே தேற்றி வாழ்பவர்களும், கஷ்டத்தைத் தாங்க முடியாமல் தவிப்பவர்களும், மனநிம்மதியற்று - நினைத்தது நடக்காமலும், முயற்சி செய்தும் பலன் அடையாமலும், திறமை இருந்தும் முன்னேறாமலும் இருக்கும் அன்பர்கள் பலர் உண்டு.

இப்படியானவர்கள் தங்களின் நிலைக்குக் காரணம் தெரியாமல் தவிக்கும்போது, அவர்களுக்குச் சரியான ஆலோசனைகளை வழி காட்டலை வழங்கும் இடத்தில் ஜோதிட சாஸ்திரம் உள்ளது.

ஆகவே, ஜோதிடர்களிடம் ஆலோசித்து, அவரவர் ஜாதக நிலைகளுக்கு ஏற்ப ஜோதிட சாஸ்திரம் பரிந்துரைக்கும் பரிகாரங்களை நம்பிக்கையுடன் செய்து பலன் பெறலாம். அப்போது மனத்தில் தைரியம் நிரம்புவதுடன், வாழ்வில் நிச்சயம் வெல்வோம் எனும் நம்பிக்கையும் பிறக்கும்.