Published:Updated:

வெளிநாடுகளில் வாழ்பவர்கள் செய்யும் சடங்குகள் விரதங்களுக்குப் பலன்கள் உண்டா? - அதிகாலை சுபவேளை

மகாவிஷ்ணு! - அதிகாலை சுபவேளை
மகாவிஷ்ணு! - அதிகாலை சுபவேளை

வெளிநாடுகளில் வாழ்பவர்கள் செய்யும் சடங்குகள் விரதங்களுக்குப் பலன்கள் உண்டா?

27. 6. 21 ஆனி 13 ஞாயிற்றுக்கிழமை

திதி: திரிதியை இரவு 7.39 வரை பிறகு சதுர்த்தி

நட்சத்திரம்: திருவோணம்

யோகம்: அமிர்தயோகம்

ராகுகாலம்: மாலை 4.30 முதல் 6 வரை

எமகண்டம்: பகல் 12.00 முதல் 1.30 வரை

நல்லநேரம்: காலை 6.15 முதல் 7.15 வரை/ பகல் 3.15 முதல் 4.15 வரை

சந்தோஷி மாதா விநாயகர்
சந்தோஷி மாதா விநாயகர்

சந்திராஷ்டமம்: திருவாதிரை

சூலம்: மேற்கு

பரிகாரம்: வெல்லம்

வழிபடவேண்டிய தெய்வம்: விநாயகப் பெருமான்

இன்று: சங்கடஹர சதுர்த்தி, திருவோண விரதம்

வெளிநாடுகளில் வாழ்பவர்கள் செய்யும் சடங்குகள் விரதங்களுக்குப் பலன்கள் உண்டா?

திதிப்படியான விரதங்கள், மாதந்தோறும் மேற்கொள்ள வேண்டிய சடங்குகள், விசேஷ தினங்களில் செய்யவேண்டிய பூஜைமுறைகள் ஆகியவற்றை முறைப்படி அறிந்துகொள்ளவும் செய்யவும் நாம் பஞ்சாங்கத்தின் உதவியை நாடுகிறோம். நம் நாட்டின் சூரிய உதய அஸ்தமங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த சாஸ்திரமுறைகள் வெளிநாடுகளில் வாழ்பவர்கள் பயன்படுத்த முடியாத சூழலில் அவர்கள் செய்யும் சடங்குகளுக்குப் பயன் உண்டா என்னும் கேள்வி பலரிடையே உள்ளது. சிலர்,அவ்வாறு வெளிநாடுகளில் இருப்பவர்கள் செய்யும் சடங்குகள் வெறும் மன நிம்மதிக்கானவை தானே தவிர அவற்றுக்கு சாஸ்திரப்படி எந்தப் பலனும் இல்லை என்று சொல்கிறார்கள். வெளிநாடுகளில் செய்யப்படும் பூஜைகள், சடங்கள் எல்லாம் எந்த அடிப்படையில் செய்கிறார்கள் என்னும் கேள்விக்கான பதில் குறித்த உரையாடலை அறிந்துகொள்ள கீழே உள்ள வீடியோவைப் பாருங்கள்.

இன்றைய ராசிபலன்

மேஷம்:

பொறுமை : சொல்லிலும் செயலிலும் பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டிய நாள். பிற்பகலுக்கு மேல் மன அமைதியும் மகிழ்ச்சியும் உண்டாகும். - ஸ்லோ அண்ட் ஸ்டெடி வின்ஸ் தி ரேஸ்!

ரிஷபம்:

தெளிவு : குழப்பங்கள் மறையும். புதிய சிந்தனைகள் தோன்றும். ஆனாலும் பணிச்சுமை அதிகரிக்கும். தேவையற்ற சிறு பதற்றத்தோடு காணப்படுவீர்கள். - ஆல் இஸ் வெல்!

மிதுனம் -

பதற்றம் : செயல்களில் சிறிது தடைகள் ஏற்பட்டு முடியும். உறவினர்களிடம் பேசும்போது கவனம் தேவை. பதற்றத்தால் வேலைகளில் பிழைகள் ஏற்படலாம். - பதறாத காரியம் சிதறாது!

கடகம்

அனுகூலம் : செயல்கள் அனுகூலமாக முடியும். சின்னச் சின்னப் பிரச்னைகள் ஏற்பட்டாலும் சமாளித்துவிடுவீர்கள். சிலருக்கு திடீர் பணவரவுக்கும் வாய்ப்புண்டு. - என்ஜாய் தி டே!

சிம்மம்:

உற்சாகம் : மனதில் உற்சாகமும் உடலில் சுறுசுறுப்பும் காணப்படும். செலவுகள் அதிகரித்தாலும் அதனால் மனமகிழ்ச்சியே ஏற்படும். பிற்பகலுக்கு மேல் செயல்கள் சாதகமாகும். - ஜாலி டே!

கன்னி:

ஆதரவு : புதிய முயற்சிகள் சாதகமாகும். குடும்ப உறுப்பினர்கள் உங்ககளுக்கு ஆதரவாக இருப்பார்கள். உறவினர்களிடையே விட்டுக்கொடுத்துப் போவது நல்லது. - ரிலாக்ஸ் ப்ளீஸ்!

துலாம்:

தன்னம்பிக்கை : மனதில் நம்பிக்கை அதிகரிக்கும். முக்கியமான முடிவு ஒன்றை எடுப்பீர்கள். சகோதரர்களால் செலவுகள் ஏற்பட்டாலும் நன்மையே உண்டாகும். - நம்பிக்கை அதுதானே எல்லாம்!

விருச்சிகம்:

மகிழ்ச்சி : குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பணவரவும் அதற்கேற்ப செலவுகளும் இருக்கும். குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். நண்பர்கள் உதவி கேட்டு வருவார்கள். - ஆல் தி பெஸ்ட்!

தனுசு:

நன்மை : குடும்பத்திலிருந்த கருத்து வேற்றுமைகள் மறையும். உற்சாகமாகவும் சுறுசுறுப்பாகவும் செயல்படுவீர்கள். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்புண்டு. - நாள் நல்ல நாள்!

மகரம்:

கவனம் : செலவுகள் அதிகரிக்கும். வெளியில் செல்லும்போது தக்க பாதுகாப்பு தேவை . கடன் தவணைகளை மறந்துபோக வாய்ப்பிருப்பதால் கவனம் தேவை. - டேக் கேர் ப்ளீஸ்!

கும்பம்:

சாதகம் : அனைத்து விதத்திலும் நன்மைகளே நடைபெறும். எதிர்பாராத பொருள்வரவுக்கு வாய்ப்புண்டு. குடும்பத்தினர் உங்கள் ஆலோசனைகளைக் கேட்டு நடப்பார்கள். - சாதகமான ஜாதகம் இன்று!

மீனம்

வெற்றி : செயல்கள் வெற்றியாகும். மனதில் உற்சாகம் அதிகரிக்கும். குடும்பத்தினரின் தேவைகளை விரைந்து நிறைவேற்றுவீர்கள். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. - வெற்றி நிச்சயம்!

அடுத்த கட்டுரைக்கு