Published:Updated:

பெற்றவர்கள் செய்த பாவம் பிள்ளைகளைச் சேருமா? - அதிகாலை சுபவேளை

மதுரை மீனாட்சி அம்மன்

பெற்றவர்கள் செய்த பாவம் பிள்ளைகளைச் சேருமா? - அதிகாலை சுபவேளை

பெற்றவர்கள் செய்த பாவம் பிள்ளைகளைச் சேருமா? - அதிகாலை சுபவேளை

பெற்றவர்கள் செய்த பாவம் பிள்ளைகளைச் சேருமா? - அதிகாலை சுபவேளை

Published:Updated:
மதுரை மீனாட்சி அம்மன்

28.5.21 வைகாசி 14 வெள்ளிக்கிழமை

திதி: துவிதியை பகல் 12.56 வரை பிறகு திரிதியை

நட்சத்திரம்: மூலம் இரவு 11.44 வரை பிறகு பூராடம்

யோகம்: அமிர்தயோகம் இரவு 11.44 வரை பிறகு சித்தயோகம்

ராகுகாலம்: காலை 10.30 முதல் 12 வரை

எமகண்டம்: பகல் 3 முதல் 4.30 வரை

நல்லநேரம்: காலை 12.30 முதல் 1.30 வரை / பகல் 4.30 முதல் 5.30 வரை

அம்மன்
அம்மன்

சந்திராஷ்டமம்: கிருத்திகை இரவு 11.44 வரை பிறகு ரோகிணி

சூலம்: மேற்கு

பரிகாரம்: வெல்லம்

வழிபடவேண்டிய தெய்வம்: புவனேஸ்வரி அம்பிகை

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

பெற்றவர்கள் செய்த பாவம் பிள்ளைகளைச் சேருமா?

‘வாழுகின்ற மக்களுக்கு வாழ்ந்தவர்கள் பாடமடி - பெற்றவர்கள் பட்ட கடன் பிள்ளைகளைச் சேருமடி’ என்று கவிஞர் கவிஞர்.காமகோடியன் ஒரு பாடலில் எழுதியிருப்பார். இந்த வார்த்தைகள் மிகவும் முக்கியமான விஷயம் ஒன்றை முன்வைக்கிறது. பெற்றவர்கள் பிள்ளைகளுக்கு சொத்தை சேர்த்துவைப்பதுபோல் கடனை சேர்த்துவைத்தால் அதுவும் பிள்ளைகளின் பொறுப்பாகத்தான் மாறிவிடும். இதில் கடன் என்று சொல்வது பொருளாதாரம் சார்ந்த கடன் என்று கொண்டாலும் இதில் மற்றுமொரு பொருளும் உள்ளது. அதாவது பெற்றவர்கள் செய்த பாவமும் புண்ணியமும் பிள்ளைகளைச் சேரும் என்பதாகவும் கொள்ளலாம். புண்ணியம் வழிவழியாக வருவதில் கவலையில்லை. ஆனால் பெற்றோர் செய்த பாவம்... அவையும் பிள்ளைகளைத்தான் சேருமா? இதுகுறித்து அறிந்துகொள்ள கீழே உள்ள வீடியோவைப் பாருங்கள்.

இன்றைய ராசிபலன்

விரிவான இன்றைய பலன்களை அறிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்யவும்

மேஷம்

தெளிவு : நேற்று வரையிருந்த குழப்பங்கள் நீங்கும். சின்னச் சின்னப் பிரச்னைகள் ஏற்பட்டாலும் சரியாகிவிடும். செலவுகள் அதிகரிக்கும். - நாளை உங்க நாள்!

ரிஷபம் -

கவனம் : முற்பகலில் உற்சாகமும் பிற்பகலில் சோர்வும் உண்டாகும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும் என்றாலும் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை.. - டேக் கேர் ப்ளீஸ்!

மிதுனம்

பணவரவு : எதிர்பார்த்த பணவரவு உண்டாகும். குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையைக் கேட்டு நடப்பார்கள். செயல்களிலிருந்த இடையூறுகள் நீங்கும். - நாள் நல்ல நாள் !

கடகம்

உற்சாகம் : மனதில் உற்சாகம் அதிகரிக்கும். புதிய முயற்சிகளைத் திட்டமிடுவீர்கள்.. பிற்பகலுக்கு மேல் நண்பர் மூலம் மகிழ்ச்சியான செய்தி ஒன்று வந்துசேரும். - ஆல் தி பெஸ்ட்!

சிம்மம்

குழப்பம் : மனதில் தேவையற்ற குழப்பங்கள் அதிகரிக்கும். உறவினர்கள் வகையிலும் சின்னச் சின்னப் பிரச்னைகள் தோன்றி மறையும். - இறைவன் இருக்க பயம் ஏன்?!

கன்னி

அனுகூலம் : எதிர்பார்த்த காரியம் அனுகூலமாகும். சகோதரர்கள் பணம் கேட்டுத் தொந்தரவு செய்வார்கள். உடல் நலனிலும் அக்கறை தேவை. - ஆல் இஸ் வெல்!

துலாம்:

நிதானம் : முக்கிய முடிவுகள் எதையும் எடுக்க வேண்டாம். குடும்ப உறுப்பினர்களை அனுசரித்துப் போங்கள். நிதானம் அவசியம். - ஸ்லோ அண்ட் ஸ்டெடி வின்ஸ் தி ரேஸ்

விருச்சிகம்

விவாதம் : தேவையற்ற விவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. குடும்ப உறுப்பினர்களிடையே பேசும்போது பொறுமை அவசியம். சகோதர உறவுகள் உதவுவார்கள். - நோ ஆர்கியுமென்ட்ஸ்

தனுசு:

செலவு : பிரச்னைகள் ஒவ்வொன்றாகத் தீரும். குடும்பத்தில் அன்பு அதிகரிக்கும். என்றபோதும் செலவுகள் அதிகரிப்பது கவலை தரும். - சிக்கனம் தேவை இக்கணம்.

மகரம்

துணிச்சல் : மனதில் துணிவும் நம்பிக்கையும் அதிகரிக்கும். செயல்களில் நம்பிக்கை அதிகரிக்கும். செலவுகள் அதிகரித்தாலும் அதனால் நன்மையே ஏற்படும். - துணிவே துணை

கும்பம்

சாதகம் : இன்று சாதகமான நாள். எதிர்பாராத பணவரவும் கிடைக்கும். சகோதர வகையிலும் நன்மையே உண்டாகும். - சாதகமான ஜாதகம் இன்று!

மீனம்

மகிழ்ச்சி : செயல்கள் அனுகூலமாகும். முக்கிய முடிவுகள் எடுக்க உகந்த நாள். தந்தைவழி உறவினர்கள் மூலம் பணவரவு உண்டாகும். - என்ஜாய் தி டே!