Published:Updated:

நிறைவாழ்வு வாழும் யோகம் யாருக்கெல்லாம் வாய்க்கும்?#Astrology

எஸ்.கதிரேசன்

'சஷ்டியப்த பூர்த்தி', 'சதாபிஷேகம்' ஆகிய விழாக்களைக் கண்டு மகன், மகள் பேரக்குழந்தைகளுடன் கொண்டாடி வாழும் வாழ்க்கையையே 'நிறைவாழ்வு' யோகம் பற்றி கட்டுரை பேசுகிறது.

யோகம்
யோகம்

'சஷ்டியப்த பூர்த்தி', 'சதாபிஷேகம்' ஆகிய விழாக்களைக் கண்டு பேரக்குழந்தைகளுடன் கொண்டாடி வாழும் வாழ்க்கையையே 'நிறைவாழ்வு' என்பார்கள். இதற்கு ஆரோக்கியமான உடலும் நல்ல மனத்துடன் கூடிய ஆயுள்பாவமும் சிறப்பாக இருக்கவேண்டும். நிறைவாழ்வு வாழ, ஜாதக ரீதியாக ஒருவரின் ஜாதகம் எப்படிப்பட்ட அனுகூலமான பலன்களை உள்ளடக்கியதாக இருக்கவேண்டும், என்று ஜோதிடத் திலகம் காழியூர் நாராயணனிடம் கேட்டோம்.

சுபமுகூர்த்தம்
சுபமுகூர்த்தம்

'ஜனனி ஜென்ம சௌக்கியனாம் பதவி பூர்வ புண்ணியனாம்' என்றுதான் ஜாதகங்கள் எழுதுவதற்கு முன் குறிப்பிடுவார்கள். ஏனென்றால் இந்த உலகில் ஒரு உயிர் பிறப்பெடுக்கும்போதே அதன் மரணமும் நிச்சயிக்கப்பட்டுவிடுகிறது. அதனால் ஆயுள்பாவம் மிக முக்கியமானது. ஒருவரின் ஜாதகத்தில் ஆயுள்பாவத்தை அறிய லக்னமே பிரதானமானது. லக்னத்தில் தவறு நேர்ந்தால், அதைத் தொடர்ந்து சொல்லப்படும் பலன்களும் தவறாகவே இருக்கும்.

சனி  பகவான்
சனி பகவான்

அதனால், ஜாதகம் எழுதத் தொடங்கும்போதே மிகவும் கவனமாக லக்னத்தைக் கணிக்க வேண்டுமென்பது மிகவும் முக்கியம். லக்னத்தைச் சரியாக கணித்த பிறகு அதை மீண்டும் ஒருமுறைக்கு இருமுறை கணித்துப் பார்ப்பது நல்லது. மனித வாழ்க்கையில் வேலை, திருமணம், வீடு, மக்கட்பேறு, ஆரோக்கியம் எனப் பல செல்வங்களிருந்தாலும் அவற்றை அனுபவிப்பதற்குரிய ஆயுள்பாவம் மிகவும் முக்கியம். அந்த ஆயுள்பாவம் ஒருவருக்குச் சிறப்பாக இருந்தால்தான் அவரால் நல்லவிதமாக வாழமுடியும். இப்படிப்பட்ட அமைப்புள்ள ஜாதகர்களே தங்களின் பேரன் பேத்திகளுடன் நிறைவாழ்வு வாழ்வார்கள்.

ஜாதகர் தீர்க்காயுளுடன் வாழ்வதற்கு சனி பகவானே துணை புரிகிறார். லக்னம், 3, 8  - ம் இடங்களில் சனி பகவான்  தங்கினாலும் உச்ச ராசியில் சஞ்சரித்தாலும் ஜாதகருக்கு ஆயுள் தீர்க்கம். ஜாதகக் கட்டத்தில் லக்னாதிபதி எட்டாமிடத்திலும் சனி லக்னத்திலும் இருந்தால் நீண்ட நாள் வாழ்வார். லக்னத்துக்கு 8-ம் இடத்து அதிபதி லக்னத்தில் தங்கியிருக்க, மூன்று கிரகங்கள் உச்சமடைந்திருந்தால் ஜாதகர் 80 வயது வரை வாழ்வார்.

ஜாதகம்
ஜாதகம்

லக்னாதிபதியும் 8 - ம் இடத்தின் அதிபதியும் பரிவர்த்தனையாகி, குரு பகவான் கேந்திர வீடுகளான 1, 4, 7,10- ம் வீடுகளிலிருந்தால், ஜாதகர் 75 வயதுக்கு மேல் வாழ்வார்.லக்னத்துக்கு 8 - ம் இடத்தின் அதிபதி அசுப கிரகமானாலும், உச்சமடைந்தாலும், சுப கிரகங்களின் பார்வை பெற்றாலும் ஜாதகர் நீண்டநாள் உயிர் வாழ்வார்.  8-ம் இடத்தின் அதிபதி எட்டாம் இடத்தில் தங்கியிருந்தாலும் குரு, சுக்கிரன், புதன் ஆகிய மூன்று கிரகங்கள் பலம் பெற்றிருந்தாலும் ஜாதகரின் ஆயுள் எழுபது வயதுக்குமேல் உண்டு.

லக்னத்துக்கு 8-ம் இடத்தில் ராகுவும் 10 - ம் இடத்தில் குரு பகவானும் தங்கியிருந்தால் ஜாதகர் நீண்ட ஆயுளுடன் இருப்பார். லக்னத்துக்கு 8-ம் இடத்து அதிபதி லக்னத்தில் தங்கியிருக்க மூன்று கிரகங்கள் உச்சமடைந்தால் ஜாதகர் 80 வயது வரை  நிறைவாழ்வு வாழ்வார். ராகு மகர ராசியில் தங்கினாலோ 8 - ம் வீட்டில் தங்கினாலோ எட்டாம் வீட்டைப் பார்த்தாலோ ஜாதகருக்கு தீர்க்காயுள் உண்டு.எட்டாம் இடத்தின் அதிபதி எட்டாம் இடத்திலே தங்கியிருந்தாலும் குரு, சுக்கிரன், புதன் மூன்று கோளங்கள் பலமுடன் இருந்தாலும் ஜாதகருக்க எழுபது வயதுக்குமேல் உண்டு.

சனி கிரகம்
சனி கிரகம்

லக்னத்துக்கோ ராசிக்கோ 3, 6, 11  - ம் இடங்களில் ஏதேனும் ஒன்றில் இடங்களில் ஒன்றில் ராகு தங்கியிருந்தால் ஜாதகர் தொண்ணூறு வயது வாழ்வார். லக்கினத்துக்கு 8 - ம் இடத்தின் அதிபதி அசுபக் கிரகமானாலும் உச்சமடைந்தாலும், சுபக் கிரகங்களின் பார்வை பெற்றாலும் ஜாதகர் நீண்ட நாள் உயிர் வாழ்வார்.

 குரு பகவான் சொந்த வீடுகளான தனுசு மீனம் ஆகிய ராசிகளில்  ஆட்சி பெற்றிருந்தாலும்  கடகத்தில் உச்சமடைந்தாலும் லக்னத்தைப் பார்த்தாலும் ஜாதகருக்கு தீர்க்கமான ஆயுள் உண்டு. ஜாதகத்தில் அசுபக் கிரகங்கள் கெட்டாலும் ஜாதகருக்கு நீண்டநாள் ஆயுள் உண்டு.

அபிராமி
அபிராமி

பரிகாரம்: திருக்கடையூர் அபிராமியை மனத்தாலும் செயலாலும் இடைவிடாது வழிபட்டு வந்தால், நிறைவாழ்வு எல்லோருக்கும் வாய்க்கும்'' என்கிறார் ஜோதிடத்திலகம் காழியூர் நாராயணன்.