திருத்தலங்கள்
Published:Updated:

வெற்றி தரும் நட்சத்திரங்கள்!

வெற்றி தரும் நட்சத்திரங்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
வெற்றி தரும் நட்சத்திரங்கள்

- ஜோதிடர் முருகப்ரியன் -

நல்லதொரு தொடக்கம் அந்தக் காரியத்தின் பாதி வெற்றிக்குச் சமம் என்பார்கள் பெரியோர்கள். தொழில் தொடங்குவதோ, புதுச் சொத்து-வாகனம் வாங்குவதோ, சுபகாரியங்களுக்கான பேச்சு வார்த்தையோ எதுவாயினும் நல்ல கால - நேரம் பார்த்து, நாள் நட்சத்திரம் கணித்துச் செயல்படுவது தொன்றுதொட்டு இருந்து வரும் வழக்கம். அவ்வகையில் அவரவர் ஜன்ம நட்சத்திரத்துக்கு ஏற்ற நட்சத்திர நாளில் புதிய முயற்சிகளைக் கையில் எடுத்தால் வெற்றி நிச்சயம்.

வெற்றி தரும் நட்சத்திரங்கள்!
nilanewsom

ஜோதிட ரீதியாக இதனை ‘தாரா பலன்’ என்று கூறுவார்கள். அதாவது ஒரு செயலைச் செய்பவரின் நட்சத்திரத்துக்கும் அதைத் தொடங்குகிற நாளின் நட்சத்திரத்துக்கும் உள்ள பலனையே `தாரா பலன்’ என்று சொல்வார்கள். இதன்படி நாம் நம் ஜன்ம நட்சத்திர அடிப்படையில், எந்தெந்த நட்சத்திர நாளில் புதுக்காரியங்களைத் தொடங்கினால் வெற்றி பெறலாம் என்பதைத் தெரிந்துகொள்வோம்.

உதாரணத்துக்கு ஜன்ம நட்சத்திரம் அசுவினி எனில். இந்த நட்சத்திரக்காரர்களுக்கு ரோகிணி, அஸ்தம், திருவோணம், சுவாதி, சதயம், பூசம், உத்திரட்டாதி மற்றும் ரேவதி நட்சத்திர நாள்கள் வெற்றியைத் தரும் எனலாம். இப்படியே பின்வரும் பட்டியலில் உள்ளபடி உங்களுக்கான நட்சத்திர நாளைத் தெரிந்துகொள்ளுங்கள்.

அசுவினி: ரோகிணி, அஸ்தம், சுவாதி, திருவோணம், சதயம், பூசம், உத்திரட்டாதி, ரேவதி வெற்றியைத் தரும்

பரணி: உத்திரம், உத்திராடம், மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம், புனர்பூசம், ரேவதி, அசுவினி, மகம், மூலம்.

கார்த்திகை: ரோகிணி, அஸ்தம், திருவோணம், சுவாதி. சதயம், பூசம், உத்திரட்டாதி, அசுவினி, மகம், மூலம்.

ரோகிணி: மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம், புனர்பூசம், விசாகம், ரேவதி, உத்திரம்

மிருகசீரிடம்: சுவாதி, சதயம், பூசம், அனுஷம், உத்திரட்டாதி, அசுவினி, மகம், உத்திரம், ரோகிணி, அஸ்தம்.

திருவாதிரை: புனர்பூசம், விசாகம், ரேவதி, ரோகிணி, அஸ்தம், மிருகசீரிடம், சித்திரை.

புனர்பூசம்: பூசம், அனுஷம், உத்திரட்டாதி, அசுவினி, மகம், மூலம், உத்திரம், உத்திராடம், மிருகசீரிடம், சித்திரை, சுவாதி.

பூசம்: ரோகிணி, அஸ்தம், திருவோணம், சுவாதி, புனர்பூசம், விசாகம், ரேவதி.

ஆயில்யம்: அசுவினி, மகம், மூலம், உத்திரம், உத்திராடம், மிருகசீரிடம், சித்திரை, புனர்பூசம், அனுஷம், உத்திரட்டாதி.

மகம்: ரோகிணி, அஸ்தம், திருவோணம், சுவாதி, சதயம், பூசம், அனுஷம்

பூரம்: உத்திரம், உத்திராடம், மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம், புனர்பூசம், விசாகம், அசுவினி, மகம், மூலம்

உத்திரம்: ரோகிணி, அஸ்தம், திருவோணம், சுவாதி, சதயம், பூசம், அனுஷம், உத்திரட்டாதி, மகம், மூலம்.

அஸ்தம்: மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம், புனர்பூசம், விசாகம், ரேவதி, உத்திரம், உத்திராடம்.

சித்திரை: சுவாதி, சதயம், பூசம், அனுஷம், உத்திரட்டாதி, மகம், மூலம், உத்திரம், உத்திராடம், அஸ்தம், திருவோணம்.

சுவாதி: புனர்பூசம், விசாகம், அஸ்தம், திருவோணம், சித்திரை, அவிட்டம், ரேவதி

விசாகம்: பூசம், அனுஷம், உத்திரட்டாதி, அசுவினி, மகம், மூலம், உத்திரம், உத்திராடம், சித்திரை, அவிட்டம், சுவாதி, சதயம்.

அனுஷம்: ரோகிணி, அஸ்தம், திருவோணம், சுவாதி, சதயம், விசாகம்,ரேவதி.

கேட்டை: அசுவினி, மகம், மூலம், உத்திரம், உத்திராடம், சித்திரை, அவிட்டம், விசாகம், பூசம், அனுஷம், உத்திரட்டாதி.

மூலம்: ரோகிணி, அஸ்தம், திருவோணம், சுவாதி, சதயம், அனுஷம், உத்திரட்டாதி, ரேவதி.

பூராடம்: உத்திரம், உத்திராடம், மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம், விசாகம், ரேவதி, அசுவினி, மகம், மூலம்.

உத்திராடம்: ரோகிணி, அஸ்தம், திருவோணம், சுவாதி, சதயம், அனுஷம், உத்திரட்டாதி, அசுவினி, மூலம்.

திருவோணம்: மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம், புனர்பூசம், விசாகம், உத்திராடம், ரேவதி.

அவிட்டம்: சுவாதி, சதயம், பூசம், அனுஷம், உத்திரட்டாதி, அசுவினி, மூலம், உத்திராடம், ரோகிணி, திருவோணம்.

சதயம்: புனர்பூசம், விசாகம், ரோகிணி, திருவோணம், மிருகசீரிடம், அவிட்டம், ரேவதி.

பூரட்டாதி: பூசம், அனுஷம், உத்திரம், அசுவினி, மகம், மூலம், உத்திராடம், மிருகசீரிடம், அவிட்டம், சதயம்.

உத்திரட்டாதி: ரோகிணி, அஸ்தம், திருவோணம், சதயம், புனர்பூசம், ரேவதி.

ரேவதி: அசுவினி, மகம், மூலம், உத்திரம், உத்திராடம், மிருகசீரிடம், அவிட்டம், புனர்பூசம், பூசம், அனுஷம், உத்திரட்டாதி.