Published:Updated:

பதவி உயர்வு... ‘லக்ன’ வழிபாடுகள்!

பதவி உயர்வு
பிரீமியம் ஸ்டோரி
பதவி உயர்வு

கே.குமாரசிவம்

பதவி உயர்வு... ‘லக்ன’ வழிபாடுகள்!

கே.குமாரசிவம்

Published:Updated:
பதவி உயர்வு
பிரீமியம் ஸ்டோரி
பதவி உயர்வு

பதவியில் - பணியில் இருப்போரின் வாழ்க்கை லட்சியம், தனது துறையில் உயர்ந்த ஸ்தானத்தை அடைய வேண்டும் என்பதாகவே இருக்கும். ஆனால் இந்தப் பேறு எல்லோருக்கும் கிடைப்பதில்லை!

பூர்வ புண்ணியமும், ஜாதகத்தில் பதவி யோக அமைப்பும் நன்றாக இருந்தால், இந்திர பதவிக்கு நிகரான உயர்பதவி வாய்ப்பு தேடி வரும். இதுகுறித்து ஜோதிட நூல்கள் சில விளக்கங்களைக் கூறுகின்றன.

ஒருவரது ஜாதகத்தில் 5-ஆம் வீடும், 5-ஆம் வீட்டோனும், குருவும் பலம் பெற்றிருந்தால், அந்த ஜாதகர் பூர்வஜன்மத்தில் செய்த புணணிய பலன் காரணமாக பதவி யோகத்தை அடைவார்.

செவ்வாய் சிம்மத்திலும், குரு மேஷத்திலும், சூரியன் தனுசிலுமாக ஒருவர் வீட்டில் மற்றவர் இருந்தாலும், ஒருவருக்கொருவர் பரிவர்த்த னையாக இருந்தாலும் உயர் பதவி கிடைக்கும். இவர்கள் மூவருமே ராஜ கிரகங்கள் என்பதால் ராஜயோகமும் ஸித்திக்கும். அரசாங்கத்தில் உயர் பொறுப்புள்ள அமைச்சர் பதவி கிடைக்கும்.

சந்திரனுக்கு 6,7,8-ல் குரு, சுக்கிரன், புதன் அமர்ந்தால், `அதி யோகம்’ அமையும். ஆனால், ஓய்வு பெற ஐந்து ஆண்டுகளே இருக்கும் நிலையில்தான் பதவி உயர்வு வந்துசேரும். ஓரிரு நாட்களே பதவி சுகத்தை அனுபவிக்கும் நிலையும் இந்த யோகம் பெற்றவருக்கு அமைய வாய்ப்பு உண்டு.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

5-ல் சூரியனும் புதனும், 2-ல் சனி, 12-ல் குரு அமையப்பெற்றிருந்தால் சமுத்திர யோகம் வாய்க்கும். இது, இந்த ஜாதகர்களுக்கு அரசுப் பதவி மூலம் நன்மைகளை வாரி வழங்கும்.

மேஷம் லக்னமாகி, மேஷத்தில் சூரியனும்; துலாத்தில் சந்திரனும் சனியும்; தனுசில் குருவும் அமர்ந்திருந்தால், அரசாங்கப் பதவி உயர்வு கிடைக்கும்.

மகரம் லக்னமாக இருந்து, சனியும் செவ்வாயும் சேர்ந்திருக்க, சூரியனும் சந்திரனும் தனுசில் அமர்ந்திருந்தால், அரசுப் பதவியில் மேன்மேலும் உயரலாம்.

பதவி உயர்வு... ‘லக்ன’ வழிபாடுகள்!

செவ்வாயும் சனியும் லக்னம், 5 அல்லது 10-ல் அமர்ந்திருந்திருக்க, வளர்பிறைச் சந்திரன் 9-ல் அமர்ந்திருந்தால்... இப்படியான கிரக அமைப்பைப் பெற்றவர்கள், அரசு மற்றும் தனியார் பணிகளில் பதவி உயர்வு இல்லாமல் அடிக்கடி இடமாற்றங்களுக்கு ஆளாக நேரிடும்.

பொதுவாக 2-க்கு உரிய கிரகம் பலவீன மாகி, அந்தக் கிரகத்தின் தசை நடைபெறுகிற காலத்தில், அரசுப் பதவியில் இருப்பவர்கள் பதவி உயர்வை எதிர்பார்க்க முடியாது. இதன் பொருட்டு வீண் செலவும் அலைச்சலுமே மிஞ்சும்.

இங்ஙனம், ஜாதகத்தில் கிரக அமைப்புகள் பலமின்றி இருப்பவர்கள், என்ன செய்யலாம்? லக்ன ரீதியாக சில எளிய வழிகாட்டல்கள் உங்களுக்காக...

மேஷம் மற்றும் ரிஷப லக்னத்தில் பிறந்த அன்பர்கள் சனிக் கிழமைகளில் எள் முடிச்சு தீபம் ஏற்றி சனிபகவானை வணங்கி வரம் பெறலாம்.

உத்திர நட்சத்திர நாள்களில் சாஸ்தா துதிப்பாடலைப் பாடி வழிபடுவதாலும் பலன் கிடைக்கும். அருகிலிருக்கும் அனுமனை தரிசித்து வழிபட்டு வந்தாலும், பதவியில் முன்னேற்றம் உண்டாகும்.

மிதுனம் மற்றும் மீன லக்னத்தில் பிறந்தவர்கள் குரு பகவானை வழிபடுவது விசேஷம். அத்துடன் சிவாலயத்தின் கோஷ்டத்தில் தென்முகமாக வீற்றிருக்கும் தட்சிணாமூர்த்திக்கு வில்வம் சார்த்தி, கொண்டைக் கடலை சுண்டல் சமர்ப்பித்து வழிபட்டால், செய்யும் பணியில் உரிய அங்கீகாரமும் விசேஷ சலுகைகளும் கிடைக்கும். விரைவில் உங்கள் பெயர் உயர்பதவிக்குப் பரிசீலிக்கப்படும்.

கடகம் மற்றும் கும்ப லக்னக்காரர்கள், செவ்வாய்க் கிழமைகளில் சர்க்கரைப் பொங்கல் படைத்து நெய்விளக்கு ஏற்றி வைத்து முருகக் கடவுளை வழிபடலாம். அத்துடன் ஒருமுறை திருச்செந்தூர் சென்று செந்திலாண்டவனை தரிசித்து வழிபட்டு வரம் பெற்று வரலாம்.

சிம்ம லக்னக்காரர்கள், வெள்ளிக் கிழமைகளில் மகாலட்சுமியையும் சுக்ரனையும் வழிபடுவதன் மூலம் பதவி யோகம் கிடைக்கப்பெறலாம். வீட்டில் மாலை வேளையில் விளக்கேற்றி வைத்து கனகதாரா ஸ்தோத்திரம் படிப்பது விசேஷம்.

கன்னி மற்றும் தனுசு லக்னக் காரர்கள் திருமாலையும், நவகிரகங் களில் புதன் பகவானையும் வழிபட வேண்டும். ஒருமுறை திருப்பதிக்குச் சென்று ஏழுமலையானை தரிசித்து வந்தால் ஏற்றங்கள் உண்டாகும்.

துலாம் மற்றும் மகர லக்னக் காரர்கள் சந்திரனையும் பராசக்தியையும் வழிபடவேண்டும். வெள்ளி மற்றும் செவ்வாய்க் கிழமை களிலும் பெளர்ணமி தினங்களிலும் அருகிலுள்ள சிவாலயத்தில் அருளும் அம்பாளுக்கு வெண்மலர்கள் சமர்ப்பித்து வழிபட்டு வந்தால் பதவியோகம் ஸித்திக்கும்.

விருச்சிக லக்னக்காரர்கள் சூரியனையும் ருத்திரனையும் வழிபடுவதன் மூலம் பதவி யோகம் ஸித்திக்கும். இவர்கள் ஒருமுறை, சூரியனார் கோயிலுக்குச் சென்று வழிபட்டு வரலாம். இதனால் பணியில் தடைகள், ஏமாற்றங்கள், அதீத வேலைப்பளு, சூழ்ச்சிகள், வீண் பழி முதலான பிரச்னைகள் நீங்கும்.

இந்திரன் போகங்களுக்கு அதிபதி. ஆக, அனைவரும் கீழ்க்காணும் இந்திர காயத்ரீ மந்திரத்தைச் சொல்லி இந்திரனை தியானித்து நல்லருள் பெறலாம்.

ஈம் வஜ்ரஹஸ்தாய வித்மஹே ஸஹஸ்ரக்ஷாய தீமஹி

தந்நோ இந்திர: ப்ரசோதயாத்