Published:Updated:

நீங்கள் இப்படித்தான்!

லக்னமும் இயல்புகளும்
பிரீமியம் ஸ்டோரி
லக்னமும் இயல்புகளும்

லக்னமும் பிறவி இயல்பும் ஆரூர் ஆர்.சுப்ரமணியன்

நீங்கள் இப்படித்தான்!

லக்னமும் பிறவி இயல்பும் ஆரூர் ஆர்.சுப்ரமணியன்

Published:Updated:
லக்னமும் இயல்புகளும்
பிரீமியம் ஸ்டோரி
லக்னமும் இயல்புகளும்

உலகில் பிறந்த மனிதர்கள் அனைவரும் ஒரே இயல்புடன் இருப்பது இல்லை. ஒருதாய் வயிற்றில் பிறந்த பிள்ளைகளாக இருந்தாலும் மாறுபட்ட இயல்புடனேயே திகழ்வார்கள்.
ஜன்ம லக்ன அடிப்படையில் ஒருவரின் பிறவிக் குணம் இப்படித்தான் இருக்கும் என்று ஜோதிட சாஸ்திரம் விளக்குகிறது.

நீங்கள் இப்படித்தான்!

ஜன்ம லக்னம் ஜோதிடத்தில் மூன்று வகையாகப் பிரித்தறியப்படுகிறது.

சர லக்ன வீடுகள்: மேஷம், கடகம், துலாம், மகரம்

ஸ்திர லக்னம்: ரிஷபம், சிம்மம், விருச்சிகம், கும்பம்.

உபய லக்னம்: மிதுனம், கன்னி, தனுசு, மீனம்.

ஜாதகத்தில் உங்களின் ஜன்ம லக்னம் குறிப்பிடப்பட்டிருக்கும். அது, மேற்காணும் பிரிவுகளில் எந்தப் பிரிவில் உள்ளது என்பதை அறிந்துகொண்டு, கீழ்க்காணும் விவரப்படி உங்களின் பிறவிக்குணம் குறித்த ஜோதிட விளக்கத்தை அறியலாம்.

சர லக்னத்தில் பிறந்தவர்கள்: ஆற்று நீரைப் போன்றவர்கள். எப்போதும் சுறுசுறுப்போடும் பரபரப்போடும் திகழ்வர். எந்தக் காரியத்தையும் உடனடியாகச் செய்து முடிக்கும் வல்லமை பெற்றவர்கள். பிரச்னைகளைத் தைரியமாக எதிர்கொள்வதுடன், விரைவில் தீர்வு காணவும் முயற்சி எடுப்பார்கள்.

நேரம் பொன் போன்றது என்பதில் உறுதியானவர்கள். பொதுநல சேவைகளில் நாட்டம் உண்டு. இவர்களில் சிலர், கறார் பேர்வழியாக இருந்தாலும் கண்டிப்பு காட்டினாலும் உடனுக்குடன் கோப தாபத்தை மறந்துவிடுவார்கள். அரசியல் தலைமை பொறுப்பு, பாதுகாப்புத் துறை, ராணுவம், காவல் துறை, விமானப் போக்குவரத்து, தீயணைப்புத் துறை, மருத்துவம் போன்றவை இவர்களுக்கு அதிகம் பொருந்தும்.

ஸ்திர லக்னம்: அமைதியான கிணற்று நீரைப் போன்றவர்கள். பொறுமை நிதானம் மிக்கவர்கள். ஆர்ப்பாட்டம் இருக்காது. எந்த காரியத்தையும் பலமுறை யோசித்துச் செயல்படுத்துவார்கள். அடுத்தவர் ஆலோசனையையும் கேட்பர். நேரத்துக்கு அதிக முக்கியத்துவம் தருவது குறைவு. தோல்வி கண்டால் துவண்டு போவார்கள். குடும்ப வாழ்வில் அதிக கவனமும் பொறுப்பும் கொள்வர். எதிலும் ரகசியத்தைக் கடைப்பிடிப்பார்கள். பாசம், பரிவு, நேசம் கொண்டவர்கள்.

அதேநேரம், தருணம் வாய்க்கும்போது பழிவாங்க தயங்கமாட்டார்கள். விஞ்ஞானத் துறை, பொருளாதாரம், தத்துவம், சுற்றுலா, பொழுதுபோக்கு, நீதித்துறை ஓவியம் மற்றும் சிற்பக் கலை இவர்களுக்கு மிகவும் பொருந்தும்.

உபய லக்னம்: அலை ததும்பும் ஏரி-குளத்தின் நீரைப் போன்ற வர்கள். செயல்பாடுகளில் வேகத்துடன் விவேகமும் இருக்கும். பொறுப்புகளைத் திறம்பட செய்து முடிப்பார்கள். கால அவகாசம் எடுத்துக்கொண்டு செயல்படுவர். எதிலும் பட்டும் படாமலும் இருப்பார்கள். பிரச்னைகளைத் தைரியமாக எதிர்கொள்வர். பொருள் ஈட்டுவதில் சமர்த்தர். அடுத்தவர் நலனிலும் அக்கறை கொள்வார்கள். மற்றவர்களைக் கவர்ந்திழுக்கும் திறமை உள்ளவர். வர்த்தகம், வங்கித் துறை, பங்கு வர்த்தகம், சினிமா, சின்னத் திரை, கல்வி, கலை சார்ந்த துறைகள் இவர்களுக்கு பொருந்தும்.