நவராத்திரி பண்டிகையைக் கொண்டாடுவதற்கான ஆயத்தங்களில் இறங்கியிருப்பீர்கள். நவராத்திரி திருவிழா தொடங்கப்போகிறது என்றதுமே வீட்டில் உற்சாகம் களைகட்டிவிடும். கொலுவுக்கு பொம்மைகள் வாங்குவது, எந்த நாளுக்கு என்ன சுண்டல் செய்வது, ரங்கோலிக்கான கலர் கோலப்பொடிகள் வாங்குவது, பட்டுப்புடவைகள் வாங்குவது என அனைத்தையும் திட்டமிட ஆரம்பித்திருப்போம்.

உங்கள் ஆயத்தங்களில் அவள் விகடனும் கைகோத்துள்ளது. அவள் விகடனின் ஆன்லைன் நவராத்திரி திருவிழா 2020 அக்டோபர் 12-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. அக்டோபர் 12-ம் தேதி கொலு பொம்மை தயாரிக்கும் பயிற்சி, அக்டோபர் 13-ம் தேதி ஒன்பது வகை சுண்டல் தயாரிக்கும் பயிற்சி நடைபெற்றது.
நிறைவு நிகழ்ச்சியாக அக்டோபர் 15-ம் தேதி (வியாழக்கிழமை) 9 வகை ரங்கோலி போடும் பயிற்சி வழங்கப்பட உள்ளது.
சென்னையைச் சேர்ந்த கைவினைக் கலைஞர் ஆண்டாள் ஆள்வான் நிகழ்ச்சியில் பங்கேற்று 9 வகையான ரங்கோலிகளைப் போட்டுக் காட்டுவார்.
எந்த நாளுக்கு எந்த ரங்கோலி போடுவது, எளிதாக ரங்கோலி போடுவது எப்படி, ரங்கோலி போடுவதற்கான பயனுள்ள டிப்ஸ் ஆகியவற்றை வழங்குவார்.

இந்தக் கட்டணமில்லா ஆன்லைன் பயிற்சி அக்டோபர் 15-ம் தேதி மாலை 4 முதல் 5 மணி வரை நடைபெறும். பயிற்சியில் பங்கேற்க இங்கே க்ளிக் செய்யவும்.