Published:Updated:

"பெருமாளுக்கு சமர்ப்பிக்க வஸ்திரம் கொண்டுபோனோம். ஆனால்..."- ஆன்மிகம் பகிரும் திருமதி லட்சுமி! #Video

"பெருமாளுக்கு சமர்ப்பிக்க வஸ்திரம் கொண்டுபோனோம். ஆனால்..." - ஆன்மிகம் பகிரும் திருமதி லட்சுமி! #Video

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

இந்தியத் திரையுலகில் கடந்த 50 ஆண்டுகளாக ஜொலித்துக்கொண்டிருக்கும் நட்சத்திரம் லட்சுமி. தனித்துவமான நடிப்புக்குச் சொந்தக்காரரான இவருக்கு மாநில அரசு விருது, ஃபிலிம் ஃபேர் விருது, தேசிய விருது என விருதுகள் விலாசம் தேடிவந்தவண்ணம் இருந்தன. நடிப்புத்துறையில் தனிமுத்திரை பதித்த இவரிடம் அவரின் ஆன்மிகம் குறித்துக்கேட்டோம்.

ரம்மியமான சூழலில் இயற்கை மூலிகைகளும் வில்வம், நாகலிங்கம் முதலிய தெய்விக விருட்சங்களும் நிறைந்திருந்த அவர் வீட்டில் அமைதியான பின்னணியில் தன் ஆன்மிகம் குறித்துப் பேசத் தொடங்கினார் திருமதி லட்சுமி. முதலிலேயே தனக்குப் பிரியமான நாகலிங்க மரத்திலிருந்தே தன் பேச்சை தொடங்கினார்.

மாரியம்மன்
மாரியம்மன்

"சில இடங்களில்தான் சில மரங்கள் வளரும்னு சொல்லுவாங்க. அதைப்பற்றி எல்லாம் எதுவும் எனக்குத் தெரியாது. என் வீட்டுக்காரர்தான் இந்த நாகலிங்க மரத்தை இங்கே கொண்டுவந்து வைத்தார். இந்த மரத்தின் மலர்கள் எனக்கு ரொம்பப் பிடிக்கும். தினமும் காலையில் அவற்றைப் பரித்து சுவாமிக்கு வைப்பது வழக்கம். அதனால்தானோ என்னவோ எனக்கு அதோடு ஒரு பெரிய நெருக்கம் ஏற்பட்டுவிட்டது. தினமும் அதை என் தாயாக நினைத்துக் கட்டிப்பிடித்துக் கொள்வேன். கொஞ்சநேரம் அதோடு பேசுவேன். நீங்களே பாருங்கள். அப்படியே சடையெல்லாம் வளர்த்து காளி மாதிரியே இருக்கிறாள். இல்லை நீங்க ஈஸ்வரன்னு நினைத்தால் ஈஸ்வரனாகவே உங்களுக்குக் காட்சி கிடைக்கும். இப்படிப் பலவிதமான மூலிகைகள் எல்லாம் இருக்கு.

ஒரு நல்ல ஆன்மிக அனுபவம் ஒன்றை உங்களோடு பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இதை யாரும் பொய் என்று சொல்லமுடியாது. காரணம் இன்றும் இதற்கு சாட்சிகள் இருக்கிறாங்க. முப்பது ஆண்டுகளுக்கு முன்பாக நடந்த சம்பவம் இது. ஒருநாள் கனவு கண்டு பாதி தூக்கத்தில் அழுதுகொண்டே எழுந்தேன். காரணம் கனவில் ஒரு பெரியவர் வந்தார். நாமம் போட்டுக்கொண்டு பஞ்சகச்சம் கட்டிக்கொண்டு பிரசாதம் கொடுத்துக் கொண்டிருந்தார். அது ஒரு கூட்டம் மாதிரி இருக்கு. நான் உட்கார்ந்து இருக்கிறேன். எனக்கு அவர் பிரசாதம் கொடுத்துவிட்டு, ' ஏன் நிக்கிற எழுந்து போ' அப்படீன்னு அதட்டினார். எனக்கு அழுகை வந்துவிட்டது.

நடிகை லட்சுமி
நடிகை லட்சுமி

இதேபோல ஒரு முறையில்லை, இரு முறையில்லை மூன்று முறை இந்தக் கனவு வந்தது. மூன்றாம் முறைக் கனவில் நான் கேட்கிறேன், 'போ போ அப்படீன்னு சொல்றீங்களே நான் எங்க போவேன்' என்று கேட்கிறேன். அதற்கு என் அருகே இருந்த அந்த வயதான சுமங்கலி, 'காரை எடுத்துக்கிட்டுப்போ. வழி தெரியும்'னு சொல்றாங்க.. நான் கார்ல ஏறி உட்கார்ந்தேன். பச்சைக்கலர் புடவை கட்டியிருக்கேன். முன்னாடி டிரைவர் கட்டம்போட்ட சட்டை போட்ருக்கார். முன் சீட்ல ஒரு போலீஸ்காரர். போலீஸ் ட்ரெஸ்ல பார்த்ததும் எனக்கு பயம். அவர், 'இல்லை மேடம். கொஞ்சநேரத்தில் சட்டை மாற்றிக்கொள்வேன்' என்கிறார். அதேபோல கொஞ்சநேரத்தில் ஒரு நீல சட்டை மாற்றிக் கொள்கிறார். கொஞ்சதூரம் போனால் ஒரு மாரியம்மன் கோயில் என்கிறார்கள். என்னால் அந்தக் கோயிலைக் காணமுடிந்தது. அந்தக் கோயிலின் பெயர் அத்தனூர் மாரியம்மன் கோயில் என்றார்கள். சிலிரிப்போடு கண்விழித்தேன்.

எல்லாப் பிரச்னைகளுக்கும் தீர்வு தரும் மகா சுவாதி யாகத்தில் நீங்களும் கலந்து கொண்டு சங்கல்பிக்கலாம்!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மறுநாள் கனவை என் கணவரிடம் சொன்னேன். அவர் 'உடனே கிளம்பு போகலாம்' என்றார். சேலம் போய் இறங்கினோம். நடிகர் சரவணன் எங்கள் குடும்பத்துக்கு நல்ல பழக்கம் என்பதால் அவர் எங்களை வரவேற்றார். காரில் ஏறினோம். பார்த்தால் டிரைவர் கனவில் பார்த்ததுபோல அதே கட்டம்போட்ட சட்டை போட்டிருக்கிறார். சரவணன் அவர் அப்பாவோடு வருகிறார். அவர் அப்பா ஒரு போலீஸ் அதிகாரி. யூனிபார்மிலேயே வருகிறார். காரில் ஏறி அமர்ந்ததும் கொஞ்ச நேரம் கழித்து ஓரிடத்தில் நிறுத்தும்போது அவர் நீல சட்டை மாற்றிக்கொண்டுவிட்டார். நான் சொன்ன அடையாளங்கள் இருக்கும் இடத்துக்கு சரவணன் அழைத்துச் சென்றார். அங்கே ஒரு மாரியம்மன் கோயில் இருப்பது தெரிந்தது.

அப்போது மழை தூறத் தொடங்கியது. நனைந்துகொண்டே கோயிலுக்குள் சென்றோம். கனவில் கண்டதுபோலவே கோயில் பூசாரி, 'வாங்க வாங்க. என்ன அம்மனுக்குப் புடவை சாத்தணுமா' என்றார். 'ஆமாம்' என்று சொல்லிக்கொடுத்தோம். நாங்கள் கொடுத்த மஞ்சள் புடவையை வாங்கி சாத்தி அலங்காரம் செய்து காட்டினார். சாட்ஷாத் நான் கனவில் கண்ட அதே அம்பிகை. அப்படியே சிலிர்த்துப்போனேன். ஏதோ ஜன்மத்தில் வைத்த நேர்த்திக்கடனைக் கேட்டு வாங்கிக் கொண்டாள் அம்மா என்று தோன்றியது. இதுபோல பல சம்பவன்கள் என் வாழ்க்கையில் நடந்திருக்கு" என்று சிலிர்ப்போடு சொல்லி முடித்தவர், சிறிது இடைவேளைக்குப் பின் படையப்பா படப்பிடிப்புக்காக கர்நாடக சென்றபோது நிகழ்ந்த சம்பவம் ஒன்றையும் நம்மோடு பகிர்ந்துகொண்டார்.

ஶ்ரீரங்கப் பட்டிணம் சென்று பெருமாளை தரிசிக்கச் சென்ற அந்த சிலிர்ப்பூட்டும் அனுபவத்தை அறிந்துகொள்ள மேலே உள்ள வீடியோவைப் பாருங்கள்.
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு