Published:Updated:

`` ஷீர்டி சாயி அபிஷேகத்துக்கு தினமும் சுடுநீர் தருவது யார் தெரியுமா? ” - நடிகை நீலிமா ராணி

நீலிமா ராணி

எங்க வீட்ல ஒருத்தர் மாதிரி எதார்த்தமா சாயி தாத்தாகிட்ட பேசிட்டு இருப்பேன் - நடிகை நீலிமா

`` ஷீர்டி சாயி அபிஷேகத்துக்கு தினமும் சுடுநீர் தருவது யார் தெரியுமா? ” - நடிகை நீலிமா ராணி

எங்க வீட்ல ஒருத்தர் மாதிரி எதார்த்தமா சாயி தாத்தாகிட்ட பேசிட்டு இருப்பேன் - நடிகை நீலிமா

Published:Updated:
நீலிமா ராணி
`ஓம் நமச்சிவாய, ஓம் சாயி' என அடிக்கடி சொல்லிட்டு இருப்பேன். எனக்கு சிவன் அப்பா... சாய்பாபா தாத்தா!' என்றவாறு பேசத் தொடங்கினார் நீலிமா ராணி. சின்னத்திரை, வெள்ளித்திரை என இவர் நமக்கு பரிச்சயமானவர். அவருடைய வாழ்வில் சாயி நிகழ்த்திய அற்புதம் குறித்துக் கேட்கவும் அவருக்கே உரித்தான புன்னகையுடன் நம்மிடையே பகிர்ந்து கொண்டார்.
சாயிபாபா
சாயிபாபா

நம்ம வீட்ல ஒருத்தர் மாதிரி எதார்த்தமா பேசிட்டு இருப்பேன்நம்ம வீட்ல ஒருத்தர் மாதிரி எதார்த்தமா பேசிட்டு இருப்பேன்மிளகுப் பொங்கலும் கேசரியும்

என்னோட சின்ன வயசிலேயே என் அப்பா மூலமா எனக்கு சாயிபாபா அறிமுகமானார். அப்போது அதிக அளவில் சாயிபாபா கோயில்களைப் பார்க்க முடியாது. மைலாப்பூரில்தான் சாயிபாபா கோயில் இருந்துச்சு. கோடம்பாக்கத்திலிருந்து மைலாப்பூருக்கு பஸ்ல வந்து பாபா தாத்தாவைப் பார்த்துட்டுப் போவோம். அப்போதிருந்து இப்ப வரைக்குமே அவரைத் தாத்தான்னுதான் கூப்டுவேன். அந்தக் கோயிலுக்கு அதிகாலை போயிட்டா நாமளே சாய் தாத்தாவுக்கு நம் கையால அபிஷேகம் பண்ணலாம். அப்படி நம்ம கையால அபிஷேகம் பண்ற ஃபீல் வேற லெவலில் இருக்கும். அதுக்காகவே சீக்கிரம் கிளம்பி அப்பா எங்களைக் கூட்டிட்டு போவார். என் பிறந்தநாள், என் தம்பி பிறந்தநாள், அம்மா அப்பாவுடைய கல்யாண நாள்னு எங்க வீட்ல நடக்குற எல்லா விசேஷங்களுக்கும் எங்க அப்பா எங்களை அங்கதான் கூட்டிட்டுப் போயிடுவாங்க.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அந்தக் கோயிலில் மிளகுப் பொங்கலும், கேசரியும் பிரசாதமா கொடுப்பாங்க... அதோட ருசியே தனிங்க... இப்ப உங்ககிட்ட சொல்லும்போதே கோயிலுக்குப் போய் பிரசாதம் வாங்கி சாப்பிடணும்போல இருக்கு! அந்த அளவுக்கு ரொம்பவே அருமையா இருக்கும்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

கபாலீஸ்வரர் கோயிலுக்கும் அடிக்கடி போவோம். சிவன் எனக்கு அப்பா! திருவண்ணாமலை பெளர்ணமி அன்னைக்கு தொடர்ந்து 11 மாதங்கள் கிரிவலம் போயிருக்கேன். பெண்களுக்கு மாதவிடாய் பிரச்னைகள் எல்லாம் இருக்கும். ஆனாலும், எந்தத் தடையும் இல்லாம நான் நினைச்ச மாதிரியே 11 மாதங்கள் கிரிவலம் போனேன். கபாலீஸ்வரர் கோயிலில் மிளகு வடையும், புளியோதரையும் என் ஃபேவரைட் பிரசாதம்.

நடிகை நீலிமா
நடிகை நீலிமா

சின்ன வயதில் இருந்தே சாய் தாத்தா அறிமுகம் இருந்தாலும் நான் ஷீர்டி போனதில்லை. `வாணி ராணி' சீரியலில் நடிச்சிட்டு இருக்கும்போது என்னுடன் நடிச்சிட்டு இருந்த நடிகர் அருண் ஷீர்டி போயிட்டு வந்திருந்தார். அவர் அங்க போயிட்டு வந்து அனுபவம் எல்லாம் என்கிட்ட ஷேர் பண்ணினார். அது ரொம்ப இன்ஸ்பயர் பண்ணவும் நானும் உடனே ஷீர்டிக்குக் கிளம்பிப் போயிட்டேன்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அங்க தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரசாந்த்னு ஒருத்தர் உணவகம் நடத்திட்டு இருக்கார். பரம்பரை பரம்பரையா ஷீர்டி சாயிபாபாவைக் குளிப்பாட்டுவதற்காக சுடு தண்ணீர் இந்த அண்ணனுடைய வீட்டில் இருந்துதான் போகுமாம். அவருடைய வழிகாட்டுதலின் பேரில் அவர் சொன்னாருன்னு சாய் உட்கார்ந்திருக்கிற புகைப்படம் ஒன்றை வாங்கிட்டு வந்தேன்.

சாயிபாபா
சாயிபாபா

அந்த நேரத்துல எங்க வீட்ல கொஞ்சம் கஷ்டம். வாடகைக்கு ஒரு வீட்டிற்குக் குடி போனோம். அந்த வீட்டு ஹாலில் ஒரு பொருள்கூட இல்ல. ஏன்னா, எங்ககிட்ட அப்போது எதுவுமே இல்ல. வாங்கிட்டு வந்திருந்த சாய் தாத்தாவையே தரையில்தான் வச்சிருந்தேன். அவர்கிட்ட தரையில் உட்கார்ந்து நம்ம வீட்ல ஒருத்தர் மாதிரி எதார்த்தமா பேசிட்டு இருப்பேன். அந்த வீட்ல கொஞ்ச, கொஞ்சமா ஒவ்வொரு பொருளா வாங்க ஆரம்பிச்சோம். டிவி, சோபா, டைனிங் டேபிள், பெரிய டிவிரேக்னு அந்த வீடே முழுமையடைந்தது. சாய் தாத்தாவையும் தரையில் இருந்து ஷிப்ட் பண்ணினேன். இதெல்லாத்தையும் விட என் முதல் குழந்தை கர்ப்பமானதும், டெலிவரி ஆனதும் அந்த வீட்டில்தான்! வாடகைக்கு அந்த வீட்டுக்குக் குடியேறிப் பிறகு நாங்களே அந்த வீட்டை சொந்தமா வாங்கினோம். ‘நான் உன் கூடவே இருக்கேன்’ என்கிற உணர்வை சாய் தாத்தா எனக்கு கொடுத்துட்டே இருந்தார்.

பிறகு அந்த வீட்டில் இருந்து வேற வீட்டுக்கு ஷிப்ட் ஆனோம். ஆனா, தாத்தா மாறவே இல்ல. அவர் அப்படியேதான் இருக்கார்! சாய் சத்சரிதம் படிப்பேன். தாத்தா விரதம் இருக்கணும்னுலாம் எனக்கு தெரிஞ்சு சொன்னதில்லை. அதனால நான் அதெல்லாம் பண்ணமாட்டேன்.

அவர் எங்க குடும்பத்தில் ஒருத்தர். எங்களுக்குள்ள இயல்பான கலந்துரையாடல்தான் இருக்கும். எங்க வீட்ல அவர் உட்கார்ந்திருக்கும் புகைப்படத்தைப் பார்த்தா அது புகைப்படம் மாதிரியே தெரியாது. அவர் அங்கதான் உண்மையாவே அமர்ந்திருக்கார்னு தோணும்! தாத்தா எங்க வீட்ல எங்க கூடவே தான் இருக்கார்! தினம், தினம் புதுப்புது அற்புதங்களை நிகழ்த்திட்டே என்னை வழிநடத்திட்டு இருக்கார்!'
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism