Published:Updated:

“அவங்க காலைப் பிடிச்சிட்டு எனக்கு இது வேணும்னு கேட்டா...” - ரம்யா ராமகிருஷ்ணன்

ரம்யா ராமகிருஷ்ணன்

எப்ப நான் வாராஹியை மனசார என் அம்மாவாக நினைச்சு கும்பிட ஆரம்பிச்சேனோ படிப்படியா அந்த மன அழுத்தத்தில் இருந்து வெளியே வந்தேன்.

“அவங்க காலைப் பிடிச்சிட்டு எனக்கு இது வேணும்னு கேட்டா...” - ரம்யா ராமகிருஷ்ணன்

எப்ப நான் வாராஹியை மனசார என் அம்மாவாக நினைச்சு கும்பிட ஆரம்பிச்சேனோ படிப்படியா அந்த மன அழுத்தத்தில் இருந்து வெளியே வந்தேன்.

Published:Updated:
ரம்யா ராமகிருஷ்ணன்

'தலைமுறைகள்' திரைப்படத்தின் மூலம் திரைத்துறைக்கு அடியெடுத்து வைத்தவர் ரம்யா ராமகிருஷ்ணா. வெள்ளித்திரை, சின்னத்திரை என இரண்டிலும் இவரைப் பார்த்திருப்போம். சக்தி விகடன் விஐபி பூஜையறை பகுதிக்காக ரம்யாவை சந்தித்தோம். அவருடைய ஆன்மிக அனுபவம் குறித்து நம்மிடையே பகிர்ந்து கொண்டார்.

"இந்த சமூகத்தில் எப்படி வேண்டுமானாலும் வாழலாம். அப்படியில்லாம நம்மைச் சுற்றி சில கோட்பாடுகளை வகுத்துக் கொண்டு பாசிட்டிவ் எனர்ஜியுடன் வாழுறதைத்தான் ஆன்மிகம்னு நினைக்கிறேன். என்னோட குலதெய்வம் மகாலட்சுமி. திருச்சானூர் கோயிலுக்குக் குறைந்தபட்சம் ஆறு மாசத்துக்கு ஒருமுறையாச்சும் போயிட்டு வந்திடுவேன். மகாலட்சுமி ரொம்ப லட்சணமா இருப்பாங்க. அதனாலேயே அவங்களை எனக்கு ரொம்பப் பிடிக்கும்.

ரம்யா ராமகிருஷ்ணன்
ரம்யா ராமகிருஷ்ணன்

முருகன்தான் என்னுடைய இஷ்ட தெய்வம். நான் என் அம்மா வயித்துல இருந்தப்ப இந்தக் குழந்தை நல்ல கை, காலுடன் பிறக்கிறது கொஞ்சம் கஷ்டம்னு டாக்டர்ஸ் சொல்லியிருக்காங்க. என் அம்மா தொடர்ந்து வடபழனி முருகன் கோயிலுக்குப் போய், 'என் குழந்தை நல்லபடியா உன்னை மாதிரி அழகாப் பொறக்கணும்!'னு வேண்டியிருக்காங்க. நான் பிறக்கும்போது ப்ளூ கலரில்தான் பிறந்திருக்கேன். அப்புறமா டார்க் ஆகிட்டேன்னு அம்மா அடிக்கடி சொல்லுவாங்க. முருகரை நினைச்சு என் கையில் ஓம் டாட்டூ குத்தியிருக்கேன்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

2021லிருந்து வாராஹி அம்மனைக் கும்பிட ஆரம்பிச்சேன். எனக்குள்ள அவங்களுக்கான தேடல் அதிகமாயிருந்தது. என் குரு ஜி பாலகுமரன் வேலூரில் உள்ள மரகதக் கோட்டை வாராஹி அம்மனை எனக்கு அறிமுகப்படுத்தினார். அவர்கிட்ட இருந்து நிறைய ஆன்மிகம், மந்திரம் எல்லாம் கத்துக்கிட்டேன். எப்பவும் என் மனசுல வாராஹியுடைய மந்திரத்தை சொல்லிட்டே தான் இருப்பேன். எனக்கும், அவங்களுக்கும் 24/7, 365 நாள்களும் கனெக்ட் இருந்துக்கிட்டே இருக்குனு சொல்லலாம்னா பாத்துக்கோங்களேன்!

வாராஹி
வாராஹி

நான் பிடித்து வணங்கும் மகான்னா அது மகாவதார் பாபாஜிதான். 2020 - ல் அவரை நான் நேரில் சந்தித்ததைப் போல் உணர்ந்தேன். ஒருவேளை அது என் கற்பனையாகக்கூட இருக்கலாம். என் சின்ன வயசில இருந்தே ஆன்மிக நாட்டம் எனக்கு அதிகம். கிரியா யோகா, ஷாம்பவி மஹாமுத்ரா ரெண்டுமே தெரியும். அதனால் சில நொடிகள் அவர் முகம் எனக்கு தெரிந்த மாதிரி உணர்ந்திருக்கேன்.

அம்மா காலமான பிறகு பெரிய அளவில் மன அழுத்தம் ஏற்பட்டுச்சு. அந்த மன அழுத்தத்தில் நீளமாக இருந்த முடியெல்லாம் வெட்டிட்டேன். அப்ப என்ன பண்றேன்னுகூடப் புரியாத மன நிலையில்தான் சுத்திட்டிருந்தேன். நிறைய இடத்துல வாராஹி அம்மனை கும்பிடச் சொல்லி சொன்னாங்க. ஆனா, அப்ப நான் அவ்வளவு சீரியஸா கும்பிட ஆரம்பிக்கல. எப்ப நான் அவங்களை மனசார என் அம்மாவாக நினைச்சு கும்பிட ஆரம்பிச்சேனோ படிப்படியா அந்த மன அழுத்தத்தில் இருந்து வெளியே வந்தேன்.

வடபழநி ஆண்டவர்
வடபழநி ஆண்டவர்
MURUGARAJ

17, 18 வயசு எனக்கு இருந்தபோது பரம கல்யாணின்னு ஒரு அம்மன் போஸ்டரை எனக்குக் கொடுத்தாங்க. அந்த அம்மனை நான் பிரேம் பண்ணி வச்சிருக்கேன். நிறைய வீடு மாறியிருக்கேன். ஆனாலும், அவங்க என் கூடவே தான் பயணிக்கிறாங்க. அவங்க காலைப் பிடிச்சிட்டு எனக்கு இது வேணும்னு கேட்டா அதை எனக்குக் கொடுத்திடுவாங்க. இதுவரைக்கும் என் ஏற்ற, இறக்கம் எல்லாத்திலும் அவங்க என் கூடவே இருந்திருக்காங்க. அவங்களை ரொம்ப பாதுகாப்பா பூஜையறையில் வச்சு வழிபடுறேன்! என்றார்.

இன்னும் தன் ஆன்மிகம் குறித்து பல விஷயங்களை ரம்யா நம்மிடையே பகிர்ந்து கொண்டார். அவற்றைக் காண லிங்கை கிளிக் செய்யவும்!