Published:Updated:

“சின்ன வயசுல வேண்டிக்கிட்டது இப்போ நடந்தது” - சின்னத்திரை நடிகை சுஷ்மாவின் ஆன்மிக அனுபவம்

நடிகை சுஷ்மா

மதுரை மீனாட்சி அம்மன் மனதுக்கு நெருக்கமான தெய்வம். எங்களுக்குள் அம்மா - மகள் உறவு இருக்கு என்றவரிடம் அவருடைய வாழ்வில் நடந்த அற்புதம் குறித்துக் கேட்டோம்.

“சின்ன வயசுல வேண்டிக்கிட்டது இப்போ நடந்தது” - சின்னத்திரை நடிகை சுஷ்மாவின் ஆன்மிக அனுபவம்

மதுரை மீனாட்சி அம்மன் மனதுக்கு நெருக்கமான தெய்வம். எங்களுக்குள் அம்மா - மகள் உறவு இருக்கு என்றவரிடம் அவருடைய வாழ்வில் நடந்த அற்புதம் குறித்துக் கேட்டோம்.

Published:Updated:
நடிகை சுஷ்மா

“நமக்கும் மேல வலிமையான ஒருத்தங்க இருக்காங்க என்பதை நான் எப்பவும் நம்புறேன். இந்த உலகத்துலேயே அதிகமா நான் பயப்படுற ஆள் அவர்தான்! என்னை பொறுத்தவரைக்கும் அந்த நம்பிக்கை தான் கடவுள்!” என்றவாறு கடகடவென பேசத் தொடங்கினார் சுஷ்மா. சின்னத்திரையில் நன்கு பரிச்சயமானவர். அவருடைய இறை நம்பிக்கை குறித்து நம்மிடையே பகிர்ந்து கொண்டார்.

விநாயகர்
விநாயகர்

எனக்கு எல்லாக் கடவுளும் ஒன்றுதான். எல்லாரையுமே எனக்கு பிடிக்கும். மனசார விரும்பிக் கும்பிடுவேன். சின்ன வயசில இருந்தே ரொம்பப் பிடிச்ச கடவுள்னு யாராவது ஒருத்தரைச் சொல்லணும்னு சொன்னா கணேஷாவைத்தான் சொல்லுவேன். விநாயகர் எனக்கு பெஸ்ட் ஃப்ரெண்ட் மாதிரி. சின்ன வயசில கார்டூனில் சின்னப் பையனுக்கு ஃப்ரெண்டாக விநாயகர் இருப்பதை பார்த்திருக்கேன். அதுல இருந்துதான் அவரைப் பிடிக்க ஆரம்பிச்சது.

நாங்க பெங்களூரில் இருந்ததால அங்க தீபாவளி, பொங்கல் பண்டிகையை விட விநாயகர் சதுர்த்தியை பிரமாண்டமாகக் கொண்டாடுவோம். அந்தப் பண்டிகையின் போது புது டிரஸ், கிஃப்ட்ஸ், பலகாரங்கள்னு கலகலன்னு இருக்கும். தவிர, தெருவில் போட்டிகள் நடத்தி பரிசெல்லாம் கொடுப்பாங்க. அதனால அப்போதிலிருந்து விநாயகர் பிடிக்கும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

மதுரை மீனாட்சி அம்மனும் என் ஃபேவரைட். எங்களுக்குள் அம்மா - மகள் உறவு இருக்கு என்றவரிடம் அவருடைய வாழ்வில் நடந்த அற்புதம் குறித்துக் கேட்டோம்.

நம்ம வீட்ல பெரியவங்க கடவுள்கிட்ட என்ன வேணுமோ அதை மனசார வேண்டிக்கோ. நிச்சயம் கடவுள் உனக்கு அதைக் கொடுப்பார்னு சொல்லுவாங்க. அப்படி நான் சின்ன வயசில வேண்டின விஷயங்கள் இப்ப நான் பெரியவள் ஆனதும் என் வாழ்க்கையில் நிஜமா நடந்திருக்கு.

சுஷ்மா
சுஷ்மா

எங்க வீட்டுக்குப் பக்கத்துல என்னைவிட வயசுல ஏழு வயது பெரிய இளைஞர் ஒருத்தர் இருந்தார். அவர் தான் எனக்குப் பாடம் சொல்லிக் கொடுப்பார். அவர் மேல ஏதோ ஒரு கிரஷ் இருந்துச்சு. அவரைக் கல்யாணம் பண்ணிக்கணும்னு ஆசைப்பட்டேன். அதுக்காகக் கடவுள்கிட்ட ரொம்ப வேண்டிக்கிட்டேன். ‘ஒழுங்காப்படி’ அப்படின்னு அப்போ எனக்கு அவர் அட்வைஸ் பண்ணினார். அடுத்து இரண்டு பேரும் அவங்க அவங்க கெரியரில் கவனம் செலுத்த ஆரம்பிச்சிட்டோம். பிறகு சில ஆண்டுகள் கழிச்சி அவர் துபாய் போயிட்டார். நான் நடிக்க வந்துட்டேன். எங்களுக்குள் எந்த சம்பந்தமும் இல்ல.

எப்படி நாங்க மறுபடி பேச ஆரம்பிச்சோம்னே தெரியல. 'திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன' என்பதுபோல நாங்க ரெண்டு பேரும் திருமணம் பண்ணிக்கலாம்னு முடிவு பண்ணி வீட்ல சொன்னோம். இரு வீட்டு சம்மதத்துடன் எங்களுக்குத் திருமணமும் ஆச்சு. இப்படி என் வாழ்க்கையில் நடக்கும்னு நான் கனவுல கூட நினைச்சு பார்க்கல. இதெல்லாம் கடவுளுடைய விளையாட்டுன்னு தான் சொல்லுவேன். எப்பவோ வேண்டிக்கிட்டது. ஆனா, அது எனக்கு நல்லதுன்னு நினைச்ச கடவுள் அதை இப்போ நிறைவேத்தி வச்சிருக்கார்

நடிகை சுஷ்மா
நடிகை சுஷ்மா

தினமும் நாள் தொடங்கும்போதே கடவுளைக் கும்பிட்டுட்டுத்தான் கண் விழிப்பேன். அதே மாதிரித் தூங்கும்போதும் சாமி கும்பிட்டுட்டுத்தான் தூங்குவேன். என் பாட்டி இறந்து ஒரு நான்கு வருஷம் இருக்கும். அவங்க தாலியில் போட்டிருந்த லட்சுமி டாலர் என்கிட்ட இருக்கு. அந்த லட்சுமி என்னுடன் இருக்கும் போதெல்லாம் ஒரு பாசிட்டிவ் எனர்ஜி என்னுடன் இருக்கிற மாதிரி உணர்வேன். அதை ரொம்ப பொக்கிஷமா என் பூஜையறையில் வைத்து பாதுகாக்கிறேன்!” என்றார் சுஷ்மா.