Published:Updated:

தமிழரசு கழகத்தில் 'கலைஞர்' என்றால் அது ஏ.பி. நாகராஜன்தான்... திருவிளையாடல் முதல் கிருஷ்ணலீலை வரை!

ஏ.பி. நாகராஜன்
ஏ.பி. நாகராஜன்

வெள்ளித்திரையில் பக்தி வளர்த்த கலைஞர்கள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

அக்கம்மாப்பேட்டை பரமசிவம் நாகராஜன் என்றால் உங்களுக்குக் குழப்பம் ஏற்படலாம். ஏ.பி.நாகராஜன் என்றால் பலருக்கும் தெரியலாம். ஆம், தமிழ் சினிமாவில் பல தெய்விகப் படங்களை இயக்கிய ஆன்மிகச் செல்வர் இவர். காரைக்கால் அம்மையார், அகத்தியர், ஸ்ரீகிருஷ்ணா லீலை, திருமலை தெய்வம், திருமலை தென்குமரி, திருவருட்செல்வர், திருவிளையாடல், திருமால் பெருமை, கந்தன் கருணை, சரஸ்வதி சபதம் என இவர் இயக்கிய படங்களில் பாதிக்கும் மேலானவை பக்தி படங்களே. இவரின் படங்களில் பாடல்கள், நடிப்பு, வசனம், காட்சி அமைப்பு, அரங்கின் பிரமாண்டம் என அனைத்துமே அத்தனை அற்புதமாக அமைந்து இருக்கும்.

அகத்தியர்
அகத்தியர்

நடிகராக திரை உலகில் நுழைந்து, திரைக்கதை வசனகர்த்தா, தயாரிப்பாளர் என உயர்ந்து பிறகு இயக்குநராக வெற்றிநடை போட்டவர் ஏபி.நாகராஜன் எனும் ஏபிஎன்.

ஏ.பி.நாகராஜன் 1928-ம் ஆண்டு பிப்ரவரி 24-ந்தேதி பிறந்தார். சொந்த ஊர் சேலம் மாவட்டம், சங்ககிரி பக்கத்திலுள்ள அக்கம்மாபேட்டை. தந்தை பெயர் பரமசிவம். தாயார் லட்சுமி அம்மாள்.

நாகராஜனின் தந்தை ஜமீன்தார். எனவே நாகராஜன் பிறந்த போது நல்ல வசதி படைத்திருந்தார். ஆனால் சிறு வயதிலேயே தந்தையையும், தாயையும் இழந்தார். பணக்கார குடும்பம் வறுமையில் வாடியது. இதன் விளைவாக பள்ளிக்கூட படிப்பைத் தொடர முடியாமல் நாடகக் கம்பெனியில் சேர்ந்தார், நாகராஜன். இளம் வயதிலேயே பெற்றோரை இழந்த அவரை பாட்டி மாணிக்கம்மாள்தான் வளர்த்தார். அதனால் சின்ன வயதிலேயே புராண-இதிகாசக் கதைகளை கேட்டு வளரும் வாய்ப்பு அமைந்தது. அது அவரைக் கவர்ந்தது.

ஏ.பி.நாகராஜனுக்கு பெற்றோர் வைத்த பெயர் “குப்புசாமி” என்பதாகும். இவர் பணியாற்றிய டி.கே.எஸ். நாடக குரூப்பில் மொத்தம் 3 பேர் “குப்புசாமி” என்ற பெயர் கொண்டவர்களாக இருந்தனர். இதனால் டி.கே.சண்முகம் அதற்கு ஒரு முடிவு கட்டினார். இவருக்கு பெற்றோர் வைத்த `குப்புசாமி’ என்ற பெயரை மாற்றி “நாகராஜன்” என்று பெயர் சூட்டினார். பிற்காலத்தில் அது புகழ் பெற்ற பெயராக மாறியது.

சிவாஜிகணேசன் நாடகங்களில் பெண் வேடத்தில் நடித்து வந்த அதே காலக்கட்டத்தில், ஏ.பி.நாகராஜனும் பெண் வேடத்தில் நடித்து வந்தார். “சங்கீதக் கோவலன்” நாடகத்தில், மாதவியாகவும், கண்ணகியாகவும் இரட்டை வேடத்தில் நடித்தார். அப்போது அவருக்கு வயது 9. நாடக நோட்டீசில் “9 வயது குயிலினும் இனிய குரல் வாய்ந்த சங்கீத மாஸ்டர் ஏ.பி.நாகராஜன், மாதவியாகவும், பின் கண்ணகியாகவும் நடிக்கிறார்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

திருவிளையாடல்
திருவிளையாடல்

நாத்தீக கருத்துக்களை சேர்ந்தவர்கள் தமிழ்த்திரையில் பகுத்தறிவுக் கருத்துகளைப் பரப்பி வந்தகாலத்தில் அதற்கு நேர்எதிராக புராணப் பாத்திரங்கள் மூலம் ஆன்மிகம் பேச வைத்தவர் ஏ.பி.நாகராஜன். இதற்காகாகவே, திராவிட இயக்கத்திற்கு எதிராக ம.பொ.சி. தொடங்கிய தமிழரசுக் கழகத்தில் இணைந்திருந்தார். அதனால், அவருடைய படைப்புகளிலும் அது வெளிப்பட்டது. தி.மு.கவில் மு.கருணாநிதியை கலைஞர் என்று அழைத்ததுபோல தமிழரசு கழகத்தில் ஏ.பி.நாகராஜனை ‘கலைஞர்’ என்று அடைமொழியிட்டு அழைத்தனர்.

மேலும் ஏ.பி. நாகராஜன் குறித்த சுவாரஸ்யமான தகவல்களை அறிந்துகொள்ள கீழே உள்ள வீடியோவைப் பாருங்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு