Published:Updated:

துர்கா ஸ்டாலின் வழிபடும் கோயில்கள்: ``அவங்க கொள்கையில் அவங்க... என் பக்தியில் நான்...!"

துர்கா ஸ்டாலின்

"சிலரோட வேண்டுதல்களும், முரட்டுத்தனமான பக்தியும் என்னைப் பதற அடிச்சுடுச்சு. ஒருத்தர் அவரோட விரலையே துண்டிச்சுகிட்டார், இன்னொரு பெண்மணி, தன்னுடைய நாக்கையே துண்டிச்சுகிட்டாங்கன்னு கேள்விப் பட்டப்போ மனசு பதறுச்சு” - துர்கா ஸ்டாலின்

துர்கா ஸ்டாலின் வழிபடும் கோயில்கள்: ``அவங்க கொள்கையில் அவங்க... என் பக்தியில் நான்...!"

"சிலரோட வேண்டுதல்களும், முரட்டுத்தனமான பக்தியும் என்னைப் பதற அடிச்சுடுச்சு. ஒருத்தர் அவரோட விரலையே துண்டிச்சுகிட்டார், இன்னொரு பெண்மணி, தன்னுடைய நாக்கையே துண்டிச்சுகிட்டாங்கன்னு கேள்விப் பட்டப்போ மனசு பதறுச்சு” - துர்கா ஸ்டாலின்

Published:Updated:
துர்கா ஸ்டாலின்

ஸ்டாலின் முதல்வராகப் பதவியேற்றபோது அந்தக் காட்சியைப் பார்த்துக்கொண்டிருந்த துர்கா ஸ்டாலின் மகிழ்ச்சியில் கண் கலங்கிய காட்சி ஊடகங்களில் வைரலானது. பலரும் துர்கா ஸ்டாலினின் பக்தியையும் வைராக்கியத்தையும் பாராட்டினார்கள். சிலர் ஒரு படி மேலேபோய் துர்கா ஸ்டாலினின் பக்தியும் வழிபாடுகளும்தான் ஸ்டாலினை வெற்றிபெறச்செய்துள்ளது என்று சொன்னார்கள். அவள் விகடன் இதழுக்காக துர்கா ஸ்டாலின் அளித்த பேட்டி ஒன்றிலும் அப்படி ஒரு கேள்விக்கு அவர் பதிலளித்திருந்தார். அதில்

“என்னோட பிரார்த்தனையைவிட, இவங்களுக்காகப் பிரார்த்தனை பண்ணின கோடானு கோடி ஜனங்களோட பிரார்த்தனை ரொம்ப பெருசு. எத்தனையோ பேர் என்னைப் பார்க்கிறப்போ எல்லாம், ‘இவங்கதான் கண்டிப்பா ஜெயிப்பாங்க. சார் ஜெயிக்கணும்னு கோயில் கோயிலா வேண்டிட்டேன்' பாங்க. சிலரோட வேண்டுதல்களும், முரட்டுத்தனமான பக்தியும் என்னைப் பதற அடிச்சுடுச்சு. ஒருத்தர் அவரோட விரலையே துண்டிச்சுகிட்டார், இன்னொரு பெண்மணி, தன்னுடைய நாக்கையே துண்டிச்சுகிட்டாங்கன்னு கேள்விப் பட்டப்போ மனசு பதறுச்சு” என்று ஸ்டாலினின் வெற்றியில் தன் பக்தியின் பங்கு என்பது மிகக் குறைவானதே என்று அடக்கத்தோடு கூறினார்.

 துர்கா ஸ்டாலின்
துர்கா ஸ்டாலின்

ஆனாலும் அரசியல் களத்தில் ஸ்டாலின் எப்படி மன உறுதியுடன் போராடினாரோ அதற்கு இணையாக ஆன்மிகக் களத்தில் துர்கா வழிபாடுகள் செய்தவண்ணம் இருந்தார் என்பதை யாராலும் மறுக்க முடியாது. ஸ்டாலினின் வெற்றிக்கு முன்பாக துர்கா ஸ்டாலினின் ஆலய வழிபாடு பலராலும் விமர்சனத்துக்கு உள்ளான போதும் அது குறித்த எந்தக் கவலையும் இன்றி தொடர்ந்து அவர் வழிபாடுகள் செய்துவந்தார். தன் சிறுவயது முதலே பக்தியோடு வளர்ந்துவந்த துர்காவுக்கு அதைக் கைவிட வேண்டிய நெருக்கடி ஒருபோதும் எழவேயில்லை. இதைப் புரிந்துகொள்ள முடியாதவர்களின் புகார்களாகவே பெருமாலான சமூக ஊடக விமர்சனங்கள் இருந்தன.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

“நான் கோயிலுக்குப் போவதைப் பற்றியோ, பக்தியோடு இருக்கிறது பற்றியோ என்னிக்குமே இவங்க தலையிட்டது கிடையாது. இவங்க கிட்ட சொல்லிட்டுத்தான் நான் கோயில்களுக்கு கிளம்புவேன். இவங்க என்னிக்குமே மறுத்ததில்லை. தன் கருத்தை வலியுறுத்தினதும் இல்லை. நான் கோயிலுக்குப் போயிட்டு வந்து தர்ற பிரசாதங்களையும் இவங்க வாங்கிப்பாங்க.நான் சின்ன வயசிலிருந்து கோயில்களுக்குப் போயிட்டு, பூஜை பண்ணிட்டு இருக்கேன். இவங்க கொள்கையில் இவங்க இருக்காங்க. என் பக்தியில் நான் இருக்கேன்” என்று சொல்லும் துர்கா ஸ்டாலின் கடந்த ஓர் ஆண்டாகப் பல்வேறு ஆலயங்களுக்குச் சென்று வழிபட்டு வருகிறார்.

துர்கா ஸ்டாலின்
துர்கா ஸ்டாலின்

தேர்தலில்கிடைத்த வெற்றிக்கு நன்றி சொல்லும் வகையில் அவர் பல்வேறு ஆலயங்களுக்குக் கடந்த ஆண்டுமுதல் சென்று வருகிறார். கடந்த ஜூலை மாதம் காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலுக்குச் சென்று ஆஷாட நவராத்திரி பூஜையில் கலந்துகொண்டு வழிபாடு செய்தார். ஆகஸ்ட் மாதம் திருப்பதி சென்று தரிசனம் செய்தார். திருப்பதி பெருமாளின் மீது அவருக்கு எப்போதும் மிகுந்த பக்தி உண்டு. பல முறை அவர் திருமலைக்குப் பாதயாத்திரை சென்று வழிபட்டதும் உண்டு. இதே ஆகஸ்ட் மாதத்தில் திருவண்னாமலைக் கோயிலுக்கும் சென்று வழிபாடுகள் செய்தார்.

செப்டம்பர் மாதம் 18 ம் தேதி கொடைக்கானல் சத்தியசாயி அறக்கட்டளை சார்பில் அமைக்கப்பட்ட காயத்ரி பீடப் பிரதிஷ்டையில் கலந்துகொண்டு வழிபாடு செய்த துர்காஸ்டாலின் 21 ம் தேதி மாத வைத்தீஸ்வரன் கோயிலுக்குச் சென்று வழிபாடுகள் செய்தார். அதைத் தொடர்ந்து. அத மாத இறுதியில் திருச்செந்தூருக்குச் சென்ற துர்கா ஸ்டாலின் திருச்செந்தூர் கடலில் கால் நனைத்து வழிபட்டுப் பின் ஆலயத்துக்குள் சென்று ஷண்முகரை தரிசனம் செய்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அக்டோபர் மாதத் தொடக்கத்தில் சமயபுரம் சென்றார். திருச்சி டோல் கேட்டிலிருந்து இரண்டு கி. மீ தூரம் பாதயாத்திரையாகச் சென்று சமயபுரத்தில் தரிசனம் செய்தார். அதேபோன்று வெக்காளியம்மன் கோயிலுக்கும் ஸ்ரீரங்கம் கோயிலுக்கும் சென்று வழிபாடுகள் செய்தார். நவம்பர் மாதம் திருக்கார்த்திகை உற்சவத்தை ஒட்டி மீண்டும் திருவண்ணாமலை சென்று வழிபாடு செய்தார். டிசம்பர் மாதம் குருவாயூர் கோயிலுக்குச் சென்ற துர்கா அங்கு துலாபாரம் செலுத்தி வழிபாடு செய்தார்.

கடந்த மாதம் துர்கா ஸ்டாலினின் சொந்த ஊர் திருவெண்காடு. அங்கே இருக்கும் ஸ்ரீ சுவேதாரண்யேஸ்வரர் திருக்கோயிலில் நடைபெறும் மாசி இந்திரப் பெருவிழாவில் கலந்துகொண்டு வடம் பிடித்துத் தேர் இழுத்தார்.

இப்படி, ஸ்டாலின் முதல்வர் ஆவதற்கும் முன்னும் பின்னுமாக அவர் தமிழகத்தில் உள்ள பெரும்பாலான கோயில்களுக்குச் சென்று வழிபாடு செய்துள்ளார். இவை தவிர ஷீர்டிக்குச் செல்லும் வழக்கமும் உண்டு.

துர்கா ஸ்டாலின் வழிபாடு
துர்கா ஸ்டாலின் வழிபாடு

பக்தி தனிமனித விருப்பமும் உரிமையும் ஆகும். அதை மற்றவர்களுக்காக மாற்றிக்கொள்ள வேண்டிய அல்லது மறைத்துக்கொள்ள வேண்டிய அவசியம் ஒருவருக்கும் இல்லை.

பக்தியினால் “சோம்ப லழியும்-உடல் சொன்ன படிக்கு நடக்கும்,முடி சற்றுங் கூம்புத லின்றி-நல்ல கோபுரம் போல நிமிர்ந்த நிலைபெறும் வீம்புகள் போகும்-நல்ல மேன்மையுண்டாகிப் புயங்கள் பருக்கும்,பொய்ப் பாம்பு மடியும்-மெய்ப் பரம் வென்று நல்ல நெறிகளுண்டாய் விடும்” என்பான் பாரதி.

இன்று ஸ்டாலின் பிறந்த நாள். ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னும் ஒரு பெண் இருப்பாள் என்பார்கள். ஸ்டாலினின் வெற்றிக்குப் பின்னால் துர்கா ஸ்டாலினும் அவரின் பக்தியும் தொடர்ந்து நிற்கிறது என்கின்றனர் ஆன்மிகவாதிகள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism