Published:Updated:

லட்சுமி கடாட்சம்

லட்சுமி கடாட்சம் - பஜனை
பிரீமியம் ஸ்டோரி
லட்சுமி கடாட்சம் - பஜனை

லக்ஷ்மி சிவச்சந்திரன்

லட்சுமி கடாட்சம்

லக்ஷ்மி சிவச்சந்திரன்

Published:Updated:
லட்சுமி கடாட்சம் - பஜனை
பிரீமியம் ஸ்டோரி
லட்சுமி கடாட்சம் - பஜனை

காலையில் குளிப்பதே நல்லதோர் ஆரோக்கியமான செயல். காலையில் குளித்துவிட்டு, விபூதியோ, சூர்ணமோ, சந்தனமோ, செந்தூரமோ - அவரவரின் மதச் சின்னங்களை நெற்றியில் இட்டுக் கொள்ள... பார்க்கும்போதே மனதுக்கு இதமாக இருக்கும்.

மார்கழி மாதமானாலும் காலையில் நடுங்கும் அந்தக் குளிரிலும் குளித்துவிடுவது சுகம்தான். காலையில் குளித்துவிட்டால், அதன் பிறகு குளிர் தெரியாது; சோம்பல் இருக்காது. நம்மை அறியாமலேயே தெய்வ நாமத்தைச் சொல்லிக்கொண்டு, கோயிலைச் சுற்றி வருவது எவ்வளவு ஆனந்தம் தெரியுமா? அதுவும் மார்கழி மாதமென்றால் பேரானந்தம்!


முன்பெல்லாம்... நான் சிறுமியாக இருந்த காலத்தில், அதிகாலை நான்கு அல்லது நான்கரை மணி அளவில், தெருவில் சுவாமி பாடல்களையோ பஜன்களையோ பாடிக்கொண்டு போவதைப் பார்த்திருக்கிறேன். தினமுமே போவார்கள். மார்கழி மாதமென்றால் திருப்பாவை, திருவெம்பாவை பாடுவார்கள். கூடவே நானும் பாடிக்கொண்டு போனதுண்டு. அந்தக் குழுவில் பெண்கள், குழந்தைகள் இருப்பார்கள். வயதானவர்களும் இருப்பார்கள். சொல்லப்போனால், வயதானவர்கள்தான் குழுவின் முன்னால் ‘லீட்’ பண்ணிச் செல்வார்கள். இப்போது வெகு சில இடங்களில்தான் இந்த அதிகாலை பஜனைக் குழுவைப் பார்க்க முடிகிறது.

இப்படித்தான் எங்கள் காலனியில் போன கொரோனாவுக்கு முன்னால்… (யப்ப்ப்பா… கி.மு., கி.பி. போல கொரோனா வுக்கு முன், கொரோனாவுக்கு பின் என்பது போல ஆகிவிட்டது!) 2019 டிசம்பர் மாதம், அதிகாலையில் பத்து பேர் பஜனை பாடிச் சென்றார்கள். உடனே, எங்கள் காலனிவாசிகளில் சிலர், அசோசியேஷனில் போய் புகார் அளித்து விட்டனர்.

கோலம்
கோலம்
Ajaykumar Menon“என்னங்க இது... காலங்கார்த்தால அசந்து தூங்குற நேரத்தில இவங்கள்லாம் இப்படிப் பாட்டுப் பாடிக்கிட்டுப் போறாங்க. நாங்களே வேலை முடிச்சு ராத்திரி ரெண்டு மணிக்குத்தான் வர்றோம்” என்று புகார் அளித்தவர்கள் சண்டைக்கு வர, அவர்களின் தூக்கம் கெடக் கூடாது என்று, அதிகாலை பஜன் நிறுத்தப் பட்டுவிட்டது.

அதன் அர்த்தமும் பலன்களும் இவர்களுக்கெல்லாம் தெரியவில்லை; தெரிந்தால் இப்படி சண்டை போட்டிருக்க மாட்டார்கள். இப்படியானவர்களின் காதுகளில் நாம் சொல்லும் நல்லதெல்லாம் ஏறாது. அதிகாலையில் சுவாமிப் பாடல்கள் பாடும் போது ஏற்படும் வைப்ரேஷன்... அந்த நல்ல அதிர்வலைகள், அந்த ஏரியா முழுக்க சுற்றும் போது, அங்கே லட்சுமிகடாட்சம் தங்குகிறது; ஐஸ்வர்யம் தங்குகிறது. ஆரோக்கியம் தங்கு கிறது. அதைத்தானே பெரியவர்களும் சொன்னார்கள்.

“காலையில் எழுந்துக்கோ. நீ பாட்டுக்கு தெய்வ நாமத்தைச் சொல்லிக்கிட்டே இரு. நீ அறியாமல் ஒரு அலை உன்னைச் சுத்தி பாய்ஞ்சுகிட்டே இருக்கும். அந்த அலை உன்னைச் சுத்திப் போகும் போது, ஆரோக்கியம், ஐஸ்வர்யம் எல்லாமே உன்னிடம் தங்கி நிற்கும்..” என்று சொல்லியிருக்கிறார்கள்.

பஜனை
பஜனைநாம் சொல்பேச்சு கேட்டோமா?!

நல்ல அதிர்வலைகள் செயல்படுவதற்குமுன் நாம் எப்படிச் செயல்படுகிறோம் என்பதும் இதில் முக்கியம்.

‘விதி வழி மதி போகும்’ என்றொரு சொல்வழக்கு உண்டு. சில நேரங்களில் இதை நான் நம்பமாட்டேன். நம் மதியைத் திருப்பி, சில நல்ல விஷயங்களைக் கொண்டு வரும்போது, விதியைக் கூட நாம் திசைதிருப்பி விடலாம் என்பது என் பரிபூரணமான நம்பிக்கை. இதற்கு என் வாழ்க்கையே ஓர் உதாரணம்.

2015–17... இந்தக் காலகட்டத்தில் சென்னை ஏர்போர்ட்டில் அதிகம் காணப்பட்ட ‘ட்ரான்ஸிட்’ பாசஞ்சரே நானாகத்தான் இருந்திருப்பேன். விடியற்காலையில் ஏர்போர்ட் டில் இறங்கி வீட்டுக்கு வரவேண் டியது. அன்றைய துணிகளை எல்லாம் மெஷினில் போட்டுத் துவைக்க வேண்டியது. காய்ந்ததும், அயர்ன் செய்ய வேண்டியது. மறுபடியும் பேக் செய்து, அன்றைய சாயந்தரமே ஏர்போர்ட் சென்று ஹைதராபாத் அல்லது வேறு ஊருக்கு ஃப்ளைட் ஏற வேண்டியது.

இந்த மாதிரி அலைந்துகொண்டே இருந் தேன். அலைச்சல் மிகுந்த அந்தக் கால கட்டத் தில் திடீரென்று ஒரு நாள் யோசிக்கிறேன்...

‘நாம படிச்சோம். ஸ்கூல்ல இருந்து அப்படியே வந்துட்டோம். காலேஜ் போகல. எல்லாமே சினிமாதான். அதுதான் பட்டினியை யும் கற்றுக்கொடுத்தது; பசியையும் கற்றுக் கொடுத்தது...’

இப்படியே யோசித்துக்கொண்டிருந்த வேளையில், பள்ளியில் என் கூடப் படித்த பல தோழிகள் நினைவுக்கு வந்தனர். உண்மை யில் சொல்லப்போனால், பள்ளி நட்பு என்பது மறக்கவே மறக்காது. ஏனெனில், அந்தப் பருவத்தில் நமக்கு எந்த எதிர்பார்ப்புகளுமே இருக்காது. கன்னத்தில் கையை வைத்துக் கொண்டு வாழ்க்கையை வேடிக்கை பார்க்கும் பருவம் அது.

மார்கழி மாத பஜனை
மார்கழி மாத பஜனை
லட்சுமி கடாட்சம்
லட்சுமி கடாட்சம்

‘என்ன... யார் எப்படி இருக்காங்க... உங்க வீட்டில் என்ன சாப்பாடு... எங்க வீட்டில் என்ன சாப்பாடு... மத்தியானம் லன்ச்சுக்கு என்ன கொண்டு வந்தே?’ இப்படித்தான் நாட்கள் போகும்.

சாப்பிடுவதற்கென்றே தனியாக இடமும் நேரமும் ஒதுக்கப் பட்டிருந்தாலும், இடைவேளையில் தோழியின் டிபன் டப்பாவைத் திறந்து, கறிவேப்பிலை மணக்கும் அரிசி உப்புமாவை ஒரு பிடி அள்ளி வாயில் போடும்போது கிடைக்கும் அந்த சந்தோஷமும் சுகமும்... ஆஹ்ஹா... வேறெதில் கிடைக்கும் சொல்லுங்கள்.

அதிலும் அந்தக் கடைசி மூன்று வருடங்கள் மறக்க முடியாதவை. மயிலாப்பூர் லேடி சிவசாமி ஐயர் கேர்ள்ஸ் ஹைஸ்கூலில், மரத்தடியில் உட்கார்ந்து நாங்கள் சாப்பாட் டைப் பரிமாறிக் கொள்ளும்போது நடந்த பல நல்ல விஷயங்களையே மனம் விட்டுப் பேசுகிறேன்...

உண்மையிலேயே இன்று நாம் என்னவாக இருக்கி றோம் என்பதை, அந்த நேரத்தில் உருவான பல விஷயங்கள்தான் தீர்மானித்தன என்றால் மிகையில்லை.

பள்ளிப் பருவத்தையும் தோழிகளையும் பற்றி இப்போது யோசித்தால் சிரிப்புதான் வருகிறது. பித்தளை அடுக்கில் ஆறேழு இட்லிகள் எடுத்து வந்தவர்களும் இருக் கிறார்கள். இத்துணூண்டு மோர் சாதத்தை மட்டும் கொண்டு போய் சாப்பிட்டு, ‘போறும், போறும்’ என்று விளையாட ஓடிய என்னைப் போன்றவர்களும் உண்டு. சரியாகச் சாப்பிடா தவர்களை மிரட்டும் லீடரும் உண்டு.

அப்போதைய அந்தச் சிரிப்பே சிரிப்பு; அந்த சந்தோஷமே சந்தோஷம்.

2015 - 17ல் ‘ட்ரான்ஸிட் பாசஞ்சராக’ அவ்வளவு வேகமாக ஓடிக் கொண்டிருந்த போது, ஹைதராபாத்தில் டிவி ஷோக்கள், படங்கள், கர்நாடகாவில் படங்கள், அவற்றுக் கிடையில் வீடு!

இப்படி ஓடும் போது, ஒரு கட்டத்தில் ‘தொலைச்சிட்டோமோ!’ என்று ஒரு பயம் கூட வந்தது.

‘இல்லை… நீ தொலைக்கவில்லை’ என்று எனக்கு உயிரூட்டிய தோழிகளைப் பற்றியும் அந்தச் சம்பவம் பற்றியும் அடுத்த இதழில் சொல்கிறேன்.

- கடாட்சம் பெருகும்...

? நெற்றியில் விபூதி, குங்குமம், திருநாமம் இடும்போது கண்ணாடி பார்க்கலாமா?!

கண்ணாடி பார்த்துப் பொட்டு வைத்தல்
கண்ணாடி பார்த்துப் பொட்டு வைத்தல்

கண்ணாடி பார்க்காமல் இட்டுக் கொள்வதுதான் உசத்தி என்று இல்லை. இட்டுக்கொள்ளும் சமயச் சின்னங்கள் சரியாக உள்ளதா, பளிச் என்று தெரிகிறதா என்றெல்லாம் பார்க்கலாம். அணிகிற விபூதி, குங்குமம் அழகாக இருக்க வேண்டும் என்று உங்கள் மனம் நினைத்தால் அதில் தப்பே இல்லை.

பயன்படுத்தலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism