Published:Updated:

`எல்லாம் கோவிந்தனின் மகிமை!' - இசையரசி எம்.எஸ்.சுப்புலட்சுமி பிறந்த நாள் நினைவுகள்!

எம்.எஸ்.சுப்புலட்சுமி

மல்லிகை மாநகரில் மலர்ந்த எம்.எஸ்.சுப்புலட்சுமி அம்மாவின் 105-வது பிறந்த தினம் இன்று! திருமலை திருப்பதி கோவிந்தனுக்கு எம்.எஸ் அம்மாவுக்கும் இருந்த தெய்வீகத் தொடர்பு நெகிழ்ச்சியானது. அதற்கு சான்றாக இன்றும் ஒலிக்கிறது வேங்கடேச சுப்ரபாதம்.

`எல்லாம் கோவிந்தனின் மகிமை!' - இசையரசி எம்.எஸ்.சுப்புலட்சுமி பிறந்த நாள் நினைவுகள்!

மல்லிகை மாநகரில் மலர்ந்த எம்.எஸ்.சுப்புலட்சுமி அம்மாவின் 105-வது பிறந்த தினம் இன்று! திருமலை திருப்பதி கோவிந்தனுக்கு எம்.எஸ் அம்மாவுக்கும் இருந்த தெய்வீகத் தொடர்பு நெகிழ்ச்சியானது. அதற்கு சான்றாக இன்றும் ஒலிக்கிறது வேங்கடேச சுப்ரபாதம்.

Published:Updated:
எம்.எஸ்.சுப்புலட்சுமி

'வேண்டியதை தந்திட வெங்கடேசன் நின்றிருக்க

வேண்டியது வேறில்லை மறை மூர்த்தி கண்ணா

மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா...'

இந்தக் குரல் எப்போது ஒலித்தாலும் அந்த நேரம், சகலமும் உறைந்துபோனதாக நினைத்துக் கொள்வோம். அப்படி ஒரு தெய்வீகக் குரல் எம்.எஸ்.அம்மாவுக்கு.

கர்னாடக இசையை ஆன்மாவோடுக் கலந்து கொடுத்தவர் எம்.எஸ். சுப்புலட்சுமி. அதனால்தான் இவர் பாடலைக் கேட்டவர்கள் இறைவனை உணர்ந்து கொண்டதாக சத்திய சாட்சி சொல்கிறார்கள்.

அதிலும் திருமலை திருப்பதி கோவிந்தனுக்கு எம்.எஸ் அம்மாவுக்கும் இருந்த தெய்வீகத் தொடர்பு நெகிழ்ச்சியானது. அதற்குச் சான்றாக இன்றும் ஒலிக்கிறது வேங்கடேச சுப்ரபாதம். இன்றும் வெண்கலச் சிலையாக திருமலையின் பூர்ணகும்பம் பகுதியில் அமர்ந்து கோவிந்தனை நோக்கியவாறே தவத்தில் ஆழ்ந்துள்ளார் எம்.எஸ்.சுப்புலட்சுமி.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இசையரசி எம்.எஸ்
இசையரசி எம்.எஸ்

1963-ம் ஆண்டு, அவரின் வெங்கடேச சுப்ரபாதம் இசைத்தட்டு வெளியானது. ஆரம்பத்தில் அந்தப் பாடலை ஏற்றுக்கொள்ளாத திருப்பதி தேவஸ்தானம் பிறகு அதை திருமலையில் ஒலிபரப்பவும் செய்தது. 1970-ம் ஆண்டு பஜ கோவிந்தம், ஸ்ரீவிஷ்ணு சகஸ்ரநாமம் போன்ற திருமால் பெருமை பாடும் இறவாப் புகழ் கொண்ட படைப்புகளை அளித்தார். 1975-ம் ஆண்டு திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் ஆஸ்தான வித்வானாக நியமிக்கப்பட்டார் எம்.எஸ்.

ஐ.நா. தினத்தை முன்னிட்டு, பொதுச் செயலாளர் யூ தாண்ட் (U Thant) அவர்களூடைய சிறப்பு அழைப்பின் பேரில், எம்.எஸ்.அம்மா நியூயார்க் சென்றார். 23 அக்டோபர் 1966. ஐ.நா. ஜெனரல் அசெம்ப்ளி ஹாலில் பாடினார். மொழி தெரியாத அமெரிக்கர்களும் அப்போது வியந்தனர். புரந்தர தாசர், முத்துசாமி தீக்ஷிதர், பக்த மீரா, மகாபெரியவர், சுவாதித் திருநாள், ஜெய சாமராஜ உடையார் என மகான்கள் பலரும் எழுதிய பாடல்கள் பலவும் எம்.எஸ்.அம்மாவின் வழியே அமெரிக்கா எங்கும் பரவியது.

குறிப்பாக சிலப்பதிகாரத்தின் மீது பற்று கொண்ட எம்.எஸ். "வடவரையை மத்தாக்கி" என்ற ஆய்ச்சியர் குரவைப் பாட்டை அழகான ராகமாலிகையில் பாடி முடிக்க பலரும் கண்ணீர் வடித்து நெகிழ்ந்தனராம். ராஜாஜி எழுதித் தந்த 'லார்டு மே ஃபர்கிவ் அவர் சின்...' என்ற பாடலையும் எம்.எஸ்.பாட அமெரிக்க இசை அரங்கம் கை தட்டல் ஒலியால் அதிர்ந்தது. எல்லாம் கோவிந்தனின் மகிமை என்று நெகிழ்ந்து போனார் அந்த கோகிலவாணி.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

எம்.எஸ். தனது தெய்வீகக் குரலில் பக்தி ரசம் வழிய, இந்திய இசை இழைந்தோட, துல்லிய உச்சரிப்போடு, தெள்ளிய ஸ்வர-லய பாவங்களோடு மேடையில் அமர்ந்த போதெல்லாம், சங்கீத சரஸ்வதி அவதரித்தாள் எனலாம். எம்.எஸ்.சுப்புலட்சுமி நமது தர்மங்களுக்கு ஆதரவாக அளித்த பாமாலைகள், பக்தி ஸ்லோகங்கள், சுப்ரபாதங்கள், ஸ்தோத்திரங்கள் அத்தனையும் சாகாவரம் பெற்று இன்றும் நம்மிடையே உலாவி வருகின்றன. இசை விரும்பிகளுக்கு வரப்பிரசாதமாய், பக்தர்களுக்கு இசையின் வழியே பக்தி மார்க்கத்தை அடைவிக்கும் பெருமழையாய் எம்.எஸ். இன்றும் என்றும் வாழ்ந்து கொண்டே இருப்பார். தனது இசை வேள்வியின் வழியே இந்திய தேசத்தில் சமாதானத்தை, சமரசத்தை, பக்திப் பிரவாகத்தை உருவாக்கியவர் இந்த நவீன மீரா.

எம்.எஸ்.அம்மா
எம்.எஸ்.அம்மா

இந்திய இசையின் பிரதியாக, பக்தி மார்க்கத்தின் பெருமைமிகு அடையாளமாக விளங்கிய இசையரசி எம்.எஸ்.அம்மாவின் புகழ் திருவேங்கடமுடையான் இருக்கும் வரை நிலைத்திருக்கும். இசையரசி என்ற புகழையும் தாண்டி அவர் தனது வள்ளல் தன்மையாலும் போற்றப்படுகிறார். இசையால் தான் தேடிய செல்வங்களை ஆன்மிகப் பணிகளுக்கும் சமூகப் பணிகளுக்கும் அள்ளிக் கொடுத்தார். தமிழிசை இயக்கத்திற்குப் பக்க பலமாக நின்ற முன்னோடி கலைஞர் இவர். மேடையில் இவர் பொழிந்த தில்லானாக்கள், திருப்புகழ், சிந்து, அபங், பஜன், வர்ணங்கள், கீர்த்தனங்கள், ஜாவளிகள், விருத்தங்கள், ராகம் தானம் பல்லவிகள் எல்லாம் இசைப் பிரியர்களுக்கு ஒரு குற்றால அனுபவம் என்றே கூறலாம்.

1979-ம் ஆண்டு அள்ளி அள்ளிக் கொடுத்த வள்ளல் தன்மையாலும், பத்திரிகை நடத்திய காரணத்தாலும் பொருளாதாரச் சிக்கல்களால் எம்.எஸ். - சதாசிவம் தம்பதி நெருக்கடிக்கு உள்ளானார்கள். அப்போது காஞ்சி பெரியவரும், புட்டபர்த்தி சாயி பகவானும் அவர்கள் சிக்கலில் இருந்து மீள ஆசிர்வதித்தார்கள். அதன்படி திருமலை திருப்பதி தேவஸ்தானம் வேங்கடவனின் திருவுளப்படி அன்னமாச்சார்யா கீர்த்தனைகளையும் வேறு சில பக்தி பாடல்களையும் பாட எம்.எஸ். அம்மாவை வேண்டியது. அதன்படி அவரும் பாட 1980-ம் ஆண்டு 'ஸ்ரீபாலாஜி பஞ்ச ரத்ன மாலா' வெளியானது. இசை உலகில் பெரும் சாதனையாக அந்த இசைத் தட்டுகள் விற்பனையானது. அதன் வழியே எம்.எஸ் அவர்களின் பொருளாதார நெருக்கடியும் தீர்ந்தது. எல்லாம் கோவிந்தன் கிருபை என்று அப்போதும் நெகிழ்ந்து போனார் எம்.எஸ்.சுப்புலட்சுமி.

எம்.எஸ்.அம்மா
எம்.எஸ்.அம்மா

'எனக்கு எதுவுமே தெரியாது என்று எனக்கு தெரியும்' என்று அடிக்கடி சொல்வார் எம்.எஸ். அதனால்தான், அந்த அடக்கத்தால் தான் ஒரு பாடகி இசைப்பிரம்மமாக மாறினார் என்றும் சொல்லலாம்.

மல்லிகை மாநகரில் மலர்ந்த எம்.எஸ்.அம்மாவின் 105-வது பிறந்த தினம் இன்று! (16-9-2021)