Published:Updated:

”யாருன்னே தெரியாது; என் நட்சத்திரம், ராசி எல்லாம் கரெக்டா சொன்னார்” - நடிகர் அருண்குமார் ராஜன்

அருண்குமார் ராஜன்

ஷீர்டி சாயிபாபா கோயில் எனக்கு ரொம்பப் பிடிக்கும். அதே மாதிரி திருப்பதி வேங்கடாசலபதி கோயில், எங்க குலதெய்வம் கோயில் எல்லாம் ரொம்பவே பிடிச்ச கோயில்கள். அடிக்கடி அங்க போணும்னு நினைப்பேன்.

”யாருன்னே தெரியாது; என் நட்சத்திரம், ராசி எல்லாம் கரெக்டா சொன்னார்” - நடிகர் அருண்குமார் ராஜன்

ஷீர்டி சாயிபாபா கோயில் எனக்கு ரொம்பப் பிடிக்கும். அதே மாதிரி திருப்பதி வேங்கடாசலபதி கோயில், எங்க குலதெய்வம் கோயில் எல்லாம் ரொம்பவே பிடிச்ச கோயில்கள். அடிக்கடி அங்க போணும்னு நினைப்பேன்.

Published:Updated:
அருண்குமார் ராஜன்

சின்னத்திரை நடிகராக நமக்குப் பரிச்சயமான முகம் அருண்குமார் ராஜன். அவருடைய ஆன்மிகப் பயணம் குறித்து நம்மிடையே பகிர்ந்து கொண்டார்.

மாயவரத்தில் இருக்கும் காத்தாயி அம்மன்தான் எங்க குல தெய்வம். அம்மாவுக்கு அபிஷேகம் பண்ணிட்டு, பொங்கல் வச்சு இது வேணும்னு வேண்டிட்டு வந்தோம்னா அது எங்களுக்கு நடந்துடும். அந்தக் கோயில் வாசலில் ஒரு அய்யனார் இருப்பார். அவர் காவல் தெய்வமா நாங்க வழிபடுறோம். ஒரு தந்தை மாதிரி கண்டிப்போடு அவர் என்னை வழிநடத்துவது போன்றதொரு உணர்வை எப்பவும் எனக்குக் கொடுப்பார்.

அருண்குமார் ராஜன்
அருண்குமார் ராஜன்

இஷ்ட தெய்வம் நிறைய பேர் இருக்காங்க. அதுல குறிப்பிட்டு சொல்லணும்னா சாய்பாபா, முருகன், சிவன், அம்மான்னு நிறைய பேர் என் இஷ்ட தெய்வம். அவங்க எல்லாரும் என் கூடவே இருக்கிற ஃபீல் எப்பவும் எனக்கு இருக்கும்.

ஷீரடி சாய்பாபா கோயிலில் எவ்வளவு நேரம் இருந்தாலும் இன்னும் கொஞ்ச நேரம் இருக்கணும்னு தோணிட்டே இருக்கும். அது எனக்கு ரொம்பப் பிடிச்ச கோயில்.

அதே மாதிரி திருப்பதி வேங்கடாசலபதி கோயில், எங்க குலதெய்வம் கோயில் எல்லாம் ரொம்பவே பிடிச்ச கோயில்கள். அடிக்கடி அங்க போணும்னு நினைப்பேன்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

எனக்குக் கோயில்ல கிடைக்கிற பிரசாதம் எல்லாமே ரொம்பப் பிடிக்கும். அதிலையும் குறிப்பாப் புளியோதரை என் ஃபேவரேட். என்னோட சின்னவயசுல வீட்டுக்குப் பக்கத்துல ஒரு சின்ன சாய்பாபா கோயில் இருக்கும். ஒவ்வொரு வியாழக்கிழமைக்கும் மத்தியானம் சாம்பார் சாதம் இரவு புளியோதரைன்னு பிரசாதம் போடுவாங்க. அதை மிஸ் பண்ணவே மாட்டேன் என்று உற்சாகமாகப் பேசியவரிடம் அவரது வாழ்வில் நிகழ்ந்த அற்புதம் குறித்துக் கேட்டோம்.

அருண்குமார் ராஜன்
அருண்குமார் ராஜன்

சமீபத்தில் வடபழனி சங்கீதா ஹோட்டலில் சாப்பிட்டுட்டு இருந்தேன். எனக்கு எதிர்த்த மாதிரி ஒரு வயதான பெரியவர் சாப்பிட்டுட்டு இருந்தார். நீங்க மேஷ ராசி பரணி நட்சத்திரமான்னு திடீர்னு கேட்டார். எனக்கு ரொம்ப ஷாக் ஆகிடுச்சு. நீங்க முருகக்கடவுளை வழிபடுங்க.. முருகன் உங்க கூடவே இருப்பார்னு சொன்னார். யார் அவர்? ஏன் என்கிட்ட சொன்னாருன்னு தெரியல.

அதுக்குப் பிறகு ஆறுபடை முருகன் கோயிலுக்கும் போனேன். அதுக்கப்புறம் என் வாழ்க்கையில் நிறைய நல்ல விஷயங்கள் நடந்திருக்கு. தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போனதுங்கிற மாதிரி விபத்தில் இருந்தெல்லாம் தப்பிச்சேன். நல்ல பிராஜக்ட் கிடைச்சது. வாழ்க்கையில் நம்பமுடியாத பல விஷயங்கள் நடந்தது. அந்தப் பெரியவரை நான் முருகனாகத்தான் நினைக்கிறேன். முருகனே வந்து எனக்கு வழிக்காட்டினார்னு நம்புறேன்.

ஊட்டியில் பார்க் வாசலில் பழம் விற்கும் ஒரு அக்கா என்கிட்ட ஒரு ருத்ராட்சம் கொடுத்தாங்க. எனக்கு உங்களை ரொம்பப் பிடிக்கும். உங்களுக்கு எந்தக் கெடுதலும் நடக்கக் கூடாது. என்கிட்ட கொடுக்க வேற எதுவும் இல்ல. இந்த ருத்ராட்சம் வடக்கில் ஒரு சாமியார் அவங்களுக்குக் கொடுத்ததாகவும், அது அவங்க வீட்டில் இருக்கும்போது அவங்க பாதுகாப்பாக உணர்ந்ததாகவும் சொல்லி என்கிட்ட கொடுத்தாங்க. அந்த அன்பை நினைக்கும்போது மெய் சிலிர்க்கும். அந்த ருத்ராட்சத்தை நான் எப்பப் பார்த்தாலும் கண் கலங்கிடும். அதை என் பூஜையறையில் பொக்கிஷமா வச்சு பாதுகாத்துட்டு வர்றேன் என்றார்.

இன்னும் அவருடைய பூஜையறை குறித்து பல விஷயங்களை அருண் குமார் ராஜன் நம்மிடையே பகிர்ந்து கொண்டார். அவற்றைக் காண மேலே கொடுக்கப்பட்டிருக்கும் வீடியோவை கிளிக் செய்யவும்!