Published:Updated:

``நானும் அப்படி ஒரு நாள் அழுவேன்னு எதிர்பாக்கல... ஆனா" - `செம்பருத்தி' மெளனிகாவின் ஆன்மிக அனுபவம்

மெளனிகா

மனசு கஷ்டமா இருக்குன்னா கண்ணை மூடி, `கடவுளே நீ தான் பார்த்துக்கணும்னு' எல்லா கஷ்டத்தையும் அவங்ககிட்ட பகிர்ந்துப்பேன்.

``நானும் அப்படி ஒரு நாள் அழுவேன்னு எதிர்பாக்கல... ஆனா" - `செம்பருத்தி' மெளனிகாவின் ஆன்மிக அனுபவம்

மனசு கஷ்டமா இருக்குன்னா கண்ணை மூடி, `கடவுளே நீ தான் பார்த்துக்கணும்னு' எல்லா கஷ்டத்தையும் அவங்ககிட்ட பகிர்ந்துப்பேன்.

Published:Updated:
மெளனிகா
``கடவுள் நம்பிக்கை என்பது என்னைப் பொறுத்தவரைக்கும் பாசிட்டிவ் எனர்ஜி என்பதுதான். நம்மை வழி நடத்துவதற்கு ஒரு சக்தி உதவியா இருக்கு.. அதைத் தான் நான் கடவுளாக பார்க்கிறேன்!" என்றவாறு பேசத் தொடங்கினார் மெளனிகா.

ஜீ தமிழில் ஒளிபரப்பான 'செம்பருத்தி' தொடரில் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் ஈர்த்தவர். அவருடைய ஆன்மிக அனுபவம் குறித்து நம்மிடையே பகிர்ந்து கொண்டார்.

மெளனிகா
மெளனிகா

என்னுடைய குலதெய்வம் முனீஸ்வரன் மற்றும் பெருமாளாக இருந்தாலும் என் இஷ்ட தெய்வம் சிவன். சந்தோஷம், துக்கம்னு எதுவாக இருந்தாலும் நிச்சயம் அதை கோயிலுக்கு போய் கடவுள்கிட்ட பகிர்ந்துப்பேன். தேனாம்பேட்டை முருகன் கோயில் எனக்கு ரொம்பப் பிடிச்ச கோயில். அடிக்கடி தவறாம அந்தக் கோயிலுக்கு போயிட்டு வந்துடுவேன். வியாழக்கிழமை சாய்பாபாவிற்காகவும், சனிக்கிழமை பெருமாளுக்காகவும் விரதம் இருக்கிறதை வழக்கமாக வச்சிருக்கேன்.

மெளனிகா
மெளனிகா

மனசு கஷ்டமா இருக்குன்னா கண்ணை மூடி, `கடவுளே நீ தான் பார்த்துக்கணும்னு' எல்லா கஷ்டத்தையும் அவங்ககிட்ட பகிர்ந்துப்பேன். எப்பவும் கடவுள்கிட்ட எனக்கு இது வேணும், அது வேணும்னுலாம் கேட்க மாட்டேன். எனக்கு என்ன வேணும்னு உனக்குத் தெரியும் அதை கொடுன்னு தான் வேண்டிப்பேன். அதுவும் நான் கோயிலுக்கு போகும்போது யாராவது கடுமையான வேண்டுதல்கள் செய்து முறையிடுறதைப் பார்த்தா அவங்க ஏதோ கஷ்டத்துக்காக இந்த வேண்டுதல் எல்லாம் பண்றாங்க.அவங்க கோரிக்கையை நிறைவேற்றி உதவி பண்ணுன்னு சொல்லி வேண்டிப்பேன்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

எனக்கு ஒரு மிகப்பெரிய கஷ்டம் வாழ்க்கையில் ஏற்பட்டுச்சு. சீரியலில் தான் கோயிலில் அழுறதை எல்லாம் பார்த்திருக்கேன். நானும் அப்படி ஒரு நாள் அழுவேன்னுலாம் கொஞ்சமும் எதிர்பார்க்கல. அந்த கோயிலில் ஒரு திண்ணை இருக்கும். அங்க உட்கார்ந்து எனக்கு ஏன் இப்படி பண்றீங்கன்னு கேட்டு அழுதுட்டேன். நீ தான் எல்லாத்தையும் பார்த்துக்கணும்னு சொல்லிட்டு கண்ணீர்மல்க கோயிலில் இருந்து வெளியேறினேன். அந்த சம்பவத்துக்கு பிறகு தான் என் வாழ்க்கையே மாறுச்சு. அதனாலேயே எனக்கு அந்தக் கோயில் ரொம்பவே ஸ்பெஷல்.

பாபா எல்லாரும் சொல்லி கேள்விப்பட்டு தான் எனக்கு அறிமுகமானார். மயிலாப்பூர் சாய்பாபா கோயிலுக்கு போயிட்டு அவர்கிட்ட என் மனசுல இருந்ததெல்லாம் சொல்லிட்டு இனி நான் உங்களை வழிபடுறேன்னு சொல்லிட்டு வெள்ளை நிறத்தில் ஒரு சாய்பாபா விக்ரகத்தை வாங்கிட்டு வந்து வீட்டில் வச்சேன். அதுவரைக்கும் எங்க வீட்ல சாய்பாபா விக்ரகம் ஒன்னு கூட கிடையாது. முதன்முறையாக வீட்ல வச்சுட்டு இனி எனக்கு நீங்க சப்போர்ட் ஆக இருக்கணும்னு சொன்னேன்.

சொன்னா நம்பமாட்டீங்க... அதுவரைக்கும் எனக்கு யாரும் சாய்பாபா விக்ரகத்தை பரிசா கொடுத்ததெல்லாம் இல்லை. அவரை என் வீட்ல வச்சு கும்பிட ஆரம்பிச்ச பிறகு தொடர்ந்து பலர் மூலமா பாபா விக்ரகம் எங்க வீடு தேடி வர ஆரம்பிச்சது. இப்ப கிட்டத்தட்ட 15,16 பாபா எங்க வீட்டுக்கு வந்திருப்பார். இதிலிருந்தே அவருக்கும், எனக்குமான கனெக்ட் உங்களுக்கு புரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன். பாபா என் கூடவே இருக்கிறார்!' என்றார்.