Published:Updated:

வெற்றிகள் குவிக்கப்போகும் தனுசு ராசிக்காரர்களுக்கான 2021 ஆங்கிலப் புத்தாண்டு ராசிபலன்கள்!

தனுசு  ராசி புத்தாண்டு பலன்கள் 2021
தனுசு ராசி புத்தாண்டு பலன்கள் 2021

ஏப்ரல் 6 - ம் தேதி முதல் செப்டம்பர் 14 வரை குருபகவான் உங்கள் ராசிக்கு 3 - ம் வீட்டில் அமர்வதால் சில காரியங்களை முயன்று முடிக்க வேண்டி வரும். தைரியம் கூடும். எதிர்ப்புகள் அடங்கும். என்றாலும் ஓய்வெடுக்க முடியாமல் உழைப்பீர்கள்.

ஊருக்காக வாழாமல் தனக்காக தன் விருப்பத்துக்காக போலித்தனம் இல்லாமல் உண்மையாக வாழும் தனுசு ராசி அன்பர்களே...

இந்த ஆண்டு உங்களுக்குப் பல வகையிலும் நன்மை தருவதாகவே அமையும். சுக்கிரன் உங்கள் ராசிக்கு சாதகமாக இருக்கும் காலகட்டத்தில் இந்த ஆண்டு பிறப்பதால் உங்கள் செயல்களில் துணிவும் தன்னம்பிக்கையும் நிறைந்திருக்கும். எவ்வளவு பிரச்னை வந்தாலும் அதை சமாளிக்கும் வல்லமை உருவாகிவிடும்.

இந்த ஆண்டு 5.4.2021 வரை குருபகவான் உங்கள் ராசிக்கு 2 - ம் வீட்டில் தொடர்வதால் இதுவரை தடைப்பட்டிருந்த பணப்புழக்கம் அதிகரிக்கும். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். உறவினர்களின் வருகையால் வீடு களைகட்டும். குடும்பத்தில் உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். குழந்தைபாக்கியம் வேண்டிக் காத்திருந்தவர்களுக்கு அது கிடைக்கும். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலையை உணர்வார்கள். மகன் அல்லது மகளின் கல்யாணத்தை ஊரே மெச்சும்படி நடத்துவீர்கள். மகனுக்கு வெளிநாட்டு வேலை கிடைக்கும். உறவினர்கள் தங்கள் தவற்றை உணர்வார்கள்.

திட்டை குரு பகவான்
திட்டை குரு பகவான்

வெளிமாநில புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். மூத்த சகோதரிக்கு இருந்த பிரச்னைகள் நீங்கும். மனைவிவழி உறவினர்கள் மதிப்பார்கள். புதிய வாகனம் வாங்குவீர்கள். நிலுவையிலிருந்த வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும்.

ஏப்ரல் 6 - ம் தேதி முதல் செப்டம்பர் 14 வரை குருபகவான் உங்கள் ராசிக்கு 3 - ம் வீட்டில் அமர்வதால் சில காரியங்களை முயன்று முடிக்க வேண்டி வரும். தைரியம் கூடும். எதிர்ப்புகள் அடங்கும். என்றாலும் ஓய்வெடுக்க முடியாமல் உழைப்பீர்கள். புதிதாக ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள். பணம் வரவுக்கேற்ப வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகளும் அதிகரிக்கும். இளைய சகோதர வகையிலிருந்த மனத்தாங்கல் நீங்கும். பழைய கடனை தீர்க்க முயற்சி செய்வீர்கள். வசதி, செல்வாக்குடன் உள்ள தவறானவர்களுடன் நட்புறவாட வேண்டாம்.

நலமே அருளும் ராகு - கேது

உங்கள் ராசிக்கு 6 - ம் வீட்டில் ராகு வலுவாக அமர்ந்திருப்பதால் சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்கள் உதவுவார்கள். எதிர்ப்புகள் அடங்கும். உறவினர்களெல்லாம் உங்களைத் தேடி வருவார்கள். வெளிவட்டாரத்தில் எல்லோரும் உங்களை மதிப்பார்கள். அரசு சம்பந்தப்பட்ட காரியங்கள் முழுமையடையும். வழக்கில் நல்ல தீர்ப்பு கிடைக்கும்.

12 - ம் வீட்டில் கேது தொடர்வதால் சுபச் செலவுகள் அதிகமாகும். கல்யாணம், காதுகுத்து, சீமந்தம் என வீடு களை கட்டும். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். வெளிமாநில புண்ணிய தலங்களுக்குச் சென்று வருவீர்கள். சில காரியங்களை இரண்டு மூன்று முறை அலைந்து முடிக்க வேண்டி வரும். எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியாதபடி செலவுகள் இருக்கும்.

சனி பகவான்
சனி பகவான்

சனிபகவான்

இந்த ஆண்டு முழுக்க பாதச் சனி தொடர்வதால் வீண் அலைச்சல், டென்ஷன் வந்து போகும். சில விஷயங்களுக்கு உணர்ச்சிவசப்படாமல் அறிவுப் பூர்வமாக முடிவெடுக்கப்பாருங்கள். அடுக்கடுக்கான வேலைகளால் ஓய்வெடுக்க முடியாமல் உழைக்க வேண்டி வரும். ஆனால் அதற்கேற்ப வரவும் காணப்படுவதால் மகிழ்ச்சி அடைவீர்கள். ஆன்மிகத்தில் மனம் லயிக்கும். . தேவையற்ற கவலைகளை விட்டுவிடுங்கள். உறவினர்கள், நண்பர்கள் சிலர் உதவி கேட்டுத் தொந்தரவு தருவார்கள். உணர்ச்சி வசப்படாமல் யோசித்து முடிவெடுங்கள். மற்றவர்களை நம்பி குறுக்கு வழியில் செல்ல வேண்டாம்.

வியாபாரிகள், உத்தியோகஸ்தர்களுக்கான சிறப்புப் பலன்கள்!

வியாபாரிகளே!

தொழிலில் ஸ்திரத் தன்மை ஏற்படும். தேவைக்கேற்ப முதலீடு செய்யுங்கள். சந்தை நிலவரம் அறிந்து கொள்முதல் செய்யுங்கள். கடையை அழகு படுத்துவீர்கள். வாடிக்கையாளர்களிடம் கனிவான அணுகுமுறை மூலம் லாபம் ஈட்டலாம். கைவிட்டுப் போன பழைய வாடிக்கையாளர்களும் திரும்ப வருவார்கள். வேலையாள்களிடம் அன்போடு நடந்துகொள்ளுங்கள். அவர்களிடம் கண்டிப்பு காட்ட வேண்டாம். மருந்து, எண்டர்பிரைஸ், துணி வகைகளால் ஆதாயமடைவீர்கள். கூட்டுத்தொழிலில் பங்குதாரர்களுடன் கருத்துமோதல் வேண்டாம்.

புத்தாண்டு பலன்கள்
புத்தாண்டு பலன்கள்

உத்தியோகஸ்தர்களே!

வேலையிலிருந்த பிரச்னை தீரும். நல்ல சம்பளத்தில் வேலை கிடைக்கும். தடைப்பட்டிருந்த பதவி உயர்வு சம்பள உயர்வு ஆகிய உண்டாகும். உயர் அதிகாரிகள் உங்களிடம் நல்ல முறையில் நடந்துகொள்வார்கள். பெரிய பதவிகளுக்குத் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். திறமை பளிச்சிடும். வெளிநாட்டு வேலைக்கு முயற்சி செய்யலாம். அதற்கான வாய்ப்புகள் உருவாகும்.

இந்த புத்தாண்டு தொடக்கத்தில் சின்ன சின்ன தொந்தரவுகளைத் தந்தாலும் மையப் பகுதி முதல் எதிர்பாராத பணவரவு, வெற்றிகளைத் தரக் கூடியதாக அமையும்.

பரிகாரம்

திருச்செந்தூர் அருள்மிகு முருகப் பெருமானை வியாழக் கிழமையில் சென்று தரிசனம் செய்யுங்கள். பழுதடைந்த பள்ளியைப் புதுப்பிக்க உதவுங்கள். வாழ்வு சிறக்கும்.

அடுத்த கட்டுரைக்கு