Published:Updated:

உதவலாம் வாருங்கள் !

உதவலாம் வாருங்கள் !

உதவலாம் வாருங்கள் !

உதவலாம் வாருங்கள் !

Published:Updated:

வாசகர்களே!

 கேள்விகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை. அதிலும் ஆன்மிகத்தில் தேடலும் அதுசார்ந்த சந்தேகங்களும் வினாக்களும் மிக அதிகம்.  அந்த வகையில் ஆலயங்கள், சமய இலக்கியங்கள், சாஸ்திரங்கள் மற்றும் புராண நூல்கள் குறித்த தகவல்கள் தொடர்பாக, உங்களுக்குள் எழும் சந்தேகங்களைகேள்விகளை 'உதவலாம் வாருங்கள்’ பகுதிக்கு எழுதி அனுப்புங்கள். தகுதியானவை சக்தி விகடனில் பிரசுரமாகும்.

இந்தப் பகுதியின் சிறப்பு... வாசகர்களது வினாக்களுக்கு வாசகர்களிடம் இருந்தே பதில் பெறப்போ கிறோம். ஆமாம்! குறிப்பிட்ட வாசகர்கள் பெற விரும்பும் தகவல்களை... அதுபற்றி துல்லியமாகத் தெரிந்தி ருக்கும் வாசகர்கள், இந்தப் பகுதியில் பகிர்ந்துகொள்ளலாம். சந்தேகமோ விளக்கமோ எதுவாயினும் அவற்றை 'உதவலாம்... வாருங்கள்!’ என்று குறிப்பிட்டு சக்தி விகடனுக்கு அனுப்பவும். உங்களது தெளிவான முகவரி, இ.மெயில் முகவரி மற்றும் தொலைபேசி எண்களையும் குறிப்பிடுவது மிக அவசியம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உதவலாம் வாருங்கள் !

அமிர்த கலசத்துடன் கூடிய அமிர்தவல்லித் தாயார் விக்கிரகமோ அல்லது படமோ எனக்குத் தேவைப்படுகிறது. மேலும் 'மஹாலக்ஷ்மி வருவாயம்மா உன் மலரடி சரணம் புகுந்தேனம்மா’ என்ற பாடலுடன் தொடங்கும் பாமாலை மற்றும் அஷ்டோத்திரம் அடங்கிய புத்தகமும் எனக்குத் தேவைப்படுகிறது. எங்கே கிடைக்கும் என்பதை சக்தி விகடன் வாசகர்கள் தெரிவித்து உதவினால் பெரிதும் மகிழ்வேன்.

சி.புஷ்பா பார்வதி, சென்னை

சிவபெருமான் பல்வேறு ஆலயங்களில் நிகழ்த்திய திருவிளையாடல்களை, நட்சத்திரங் களோடு தெரிந்து கொள்ள விரும்புகிறேன். உதாரணமாக சிவபெருமான் சுந்தரருக்கு திருவடி தீட்சை அளித்த நட்சத்திரம் சிவபெருமான் ஓமாம்புலியூரில் உமை அன்னைக்கு உபதேசம் செய்த நட்சத்திரம் போன்ற லீலைகள். மேலும் இதேபோல், எல்லா ஆலயங்களிலும் சிவபெருமான் நிகழ்த்திய திருவிளையாடல்களின் நட்சத்திரங்கள் எனக்குத் தேவைப்படுகிறது. சக சக்தி விகடன் வாசகர்கள் தந்து உதவினால், என்றும் நன்றியுடன் இருப்பேன்.

ஜ.சத்யநாராயணன், பண்ருட்டி

ஸ்ரீ பாம்பன் சுவாமிகள் அருளிய

உதவலாம் வாருங்கள் !

பஞ்சாமிர்த வண்ணம்' பாடல்கள் எனக்கு தேவைப்படுகிறது. எனக்கு 72 வயது ஆகிறது. எனவே, என்னால் அலைந்து தேடி வாங்க முடியவில்லை. சக்தி விகடன் வாசகர்களிடம் இருந்தால், தயவுசெய்து கொடுத்து உதவவும்.

ஆர்.குப்புசாமிராவ், காஞ்சிபுரம்

உதவிக்கரம் நீட்டியவர்கள்

* சக்தி விகடன் 1.9.15 தேதியிட்ட இதழில், ஓவியர் வினு அவர்கள் வரைந்த ஸ்ரீ ஜெய அனுமான் வண்ணப்படம் தேவைப்படுவதாக சென்னையைச் சேர்ந்த வசந்தா என்ற வாசகர் கேட்டிருந்தார்.

இதைப் படித்துவிட்டு, டெல்லியில் இருந்து லட்சுமி என்ற வாசகி, ஸ்ரீ ஜெய அனுமான் வண்ணப்படம் அனுப்பி வைத்திருந்தார். அந்த படம், வாசகி வசந்தாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும்,ஸ்ரீ ஜெய அனுமனின் வண்ணப்படம், அழகு பச்சை வண்ணத்தில் கிரி டிரேடிங் கம்பெனி மயிலாப்பூர், அண்ணாநகர் மற்றும் தாம்பரம் கிளைகளில் கிடைக்கும் என்று சென்னை குரோம்பேட்டை வாசகி பத்மினி பாஸ்கர், திருச்சி வாசகி எஸ்.சரோஜா சுதர்சன் ஆகியோர் தெரிவித்திருந்தனர்.

உதவலாம் வாருங்கள் !

அந்தப் படம் இங்கே உங்களுக்காகவும்...

* சக்தி விகடன் 18.8.15 தேதியிட்ட இதழில், பஞ்ச ஆரண்ய தலங்களில் ஒன்றான அருள்மிகு கர்ப்பரட்சாம்பிகை சமேத முல்லைவனநாதர் கோயிலுடன் மற்ற நான்கு கோயில்கள் எவை என்று கேட்டிருந்தார் கடையநல்லூர் வாசகி சிவசைலம்.

குறிப்பிட்ட மற்ற நான்கு தலங்கள் அவளிவநல்லூர், ஹரித்துவாரமங்கலம், திருக்கொள்ளம்புதூர், ஆலங்குடி ஆகிய தலங்களாகும். திருக்கருகாவூரைச் சேர்த்து 5 கோயில்களும் ஒரேநாளில் வழிபாடு செய்யத் தக்கவையாகும். திருக்கருகாவூரில் உஷத்கால தரிசனம் தொடங்கி, ஆலங்குடியில் அர்த்த ஜாம பூஜை தரிசனம் வரை ஒரே நாளில் 5 கோயில்களையும் தரிசிக்க வேண்டும் என்னும் தகவல்களைத் தந்து உதவிய வாசகர்கள்: சென்னை ஹரிஹரன், செகந்திராபாத்  பி.சிவராமன், சிதம்பரம் என்.காளிதாஸ்.

* சக்தி விகடன்  4.8.15 தேதியிட்ட இதழில், வில்வ பழங்கள் தேவை என திருவள்ளூர் வாசகர் துரைசாமி கேட்டிருந்தார்.

இதைப் படித்துவிட்டு, தம்மிடம் வில்வ ஓடு, வில்வக் கன்று இருப்பதாகவும், தேவையானால் தொடர்புகொண்டு பெற்றுக் கொள்ளலாம் என்று சென்னை கோடம்பாக்கம் வாசகர்

எஸ்.சூரியமூர்த்தி மற்றும் சென்னை அஸ்தினாபுரம் வாசகர் ஆர்.மாதவராவ் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

* சக்தி விகடன்  18.8.15 தேதியிட்ட இதழில், குழந்தைகளுக்கான தெய்வம் சஷ்டிதேவிக் கான  பூஜை முறைகள் குறித்து மதுரை வாசகி ராதிகா கேட்டிருந்தார். இதைப் படித்துவிட்டு, சஷ்டிதேவிக்கான பூஜை முறைகளை பர்கூர் வாசகர் எல்.துர்காதேவி அனுப்பியிருந்தார். அந்த விவரம் இங்கே உங்களுக்காகவும்...

உதவலாம் வாருங்கள் !

சஷ்டி பூஜை முறை:

'கருணைக் கடலாகவும், சந்தானம் நல்குபவளாகவும், புவனத்தாயாகவும், வெண் சண்பகப்பூ மேனியளாகவும், ரத்தின ஆபரணங்களால் அலங்கரிக் கப்பட்டவளாகவும், தூய்மையானவளாகவும் தேவசேனை என்ற பெயரையுடையவளாகவும் விளங்குகிற தேவியை வணங்குகிறேன்!’ என்று தியானித்து கலசத்திலோ அல்லது சுவரில் தீட்டிய சித்திரத்திலோ சஷ்டி தேவியை ஆவாஹனம் செய்து தனது சிரசில் மலரை வைத்து மறுபடியும் மூன்று முறை மந்திரத்தை ஜபம் செய்து, பாத்யம், ஆசனம், அர்க்கியம், கந்த புஷ்பம், தூபம், தீபம், பழம், நைவேத்தியங்களோடு பூஜிக்க வேண்டும். 'ஓம் ஹ்ரீம் சஷ்டி தேவ்யை சுவாஹா’ என்ற மந்திரத்தைத் தன்னால் இயன்ற அளவு ஜபிக்க வேண்டும். பிறகு சாம வேதத்தில் கூறப்பட்ட தோத்திரத்தினால் சஷ்டி தேவியை துதித்து, பக்தியோடு வணங்க வேண்டும்.

* சக்தி விகடன்  4.8.15 தேதியிட்ட இதழில், 'காமாட்சியம்மன் விருத்தம்’ இருந்தால் கொடுத்து உதவுமாறு சென்னை வாசகி புவனேஸ்வரி கேட்டிருந்தார்.

குறிப்பிட்ட 'காமாட்சியம்மன் விருத்தம்’ புத்தகத்தை சென்னை கொளத்தூரைச் சேர்ந்த என்.ராமச்சந்திரன் என்ற வாசகர் அனுப்பி வைத்திருந்தார். அது வாசகி புவனேஸ்வரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

* சக்தி விகடன்  4.8.15 தேதியிட்ட இதழில், 'ராதை’ குறித்த கதைகள் பற்றி கோவை வாசகர் எம்.பிராணேஷ் கேட்டிருந்தார்.  

இதைப் படித்துவிட்டு, ராதையின் பெயரை முதன்முதலில் குறிப்பிட்ட புராண நூல் வத்ரா புராணம் ஆகும். ராதையைப் பற்றிய விவரங்கள் பிரம்மவைவர்த்த புராணம், ஜெயதேவரின் அஷ்டபதி பாடல் தொகுப்பு ஆகியவற்றில் மட்டுமே இடம் பெற்றிருப்பதாக பதில் அளித்திருக்கிறார் காரமடை வாசகர் அவினாசி முருகேசன்.

* சக்தி விகடன்  15.9.15 தேதியிட்ட இதழில், தெய்வங்களுக்கான நட்சத்திரங்கள் என்னென்ன என்பது குறித்து சென்னை வாசகர் கமலா கேட்டிருந்தார். இதைப் படித்துவிட்டு, குறிப்பிட்ட தெய்வங்களுக்கான நட்சத்திரங்களை சென்னையிலிருந்து வாசகர் ஹரிஹரன், ஜி.கிருஷ்ணமூர்த்தி, மற்றும் திருச்சியிலிருந்து சரோஜா சுதர்சன் ஆகிய வாசகர்கள் அனுப்பி வைத்திருந்தனர்.  அவை இங்கே உங்களுக்காகவும்...

தெய்வங்களுக்கான நட்சத்திரங்கள்:

அஸ்வினி - சரஸ்வதி

பரணி - துர்க்கை

கார்த்திகை - முருகன், அக்னி

ரோகிணி - பிரம்மா, கிருஷ்ணர்

மிருகசீரிஷம்  - சந்திரன்

திருவாதிரை  - பரமசிவன்

புனர்பூசம்-  அதிதி, ராமர்

பூசம் - பிரஹஸ்பதி,   குருதட்சிசணாமூர்த்தி

சித்திரை - விஸ்வகர்மா

சுவாதி - வாயு

விசாகம் - முருகன்

அனுஷம் - லட்சுமி

கேட்டை  - இந்திரன்

மூலம் - அசுரர், அனுமன்

பூராடம் - வருணன்

உத்திராடம் - கணபதி

ஆயில்யம்  - ஆதிசேஷன்

மகம் - சுக்ரன்

பூரம்  - பார்வதி

உத்திரம்-  சூரியன், ஐயப்பன்

அஸ்தம் - ஐயப்பன், பிள்ளையார்

திருவோணம் - விஷ்ணு

அவிட்டம் - வசுக்கள்

சதயம்-  யமன்

பூரட்டாதி - குபேரன்

உத்திரட்டாதி - காமதேனு,

ரேவதி-  சனி