Published:Updated:

உதவலாம் வாருங்கள் !

உதவலாம் வாருங்கள் !

கேள்விகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை. அதிலும் ஆன்மிகத்தில் தேடலும் அதுசார்ந்த சந்தேகங்களும் வினாக்களும் மிக அதிகம். அந்த வகையில் ஆலயங்கள், சமய இலக்கியங்கள், சாஸ்திரங்கள் மற்றும் புராண நூல்கள் குறித்த தகவல்கள் தொடர்பாக, உங்களுக்குள் எழும் சந்தேகங்களைகேள்விகளை 'உதவலாம் வாருங்கள்’ பகுதிக்கு எழுதி அனுப்புங்கள். தகுதியானவை சக்தி விகடனில் பிரசுரமாகும். 

இந்தப் பகுதியின் சிறப்பு... வாசகர்களது வினாக்களுக்கு வாசகர்களிடம் இருந்தே பதில் பெறப்போகிறோம். ஆமாம்! குறிப்பிட்ட வாசகர்கள் பெற விரும்பும் தகவல்களை... அதுபற்றி துல்லியமாகத் தெரிந்திருக்கும் வாசகர்கள், இந்தப் பகுதியில் பகிர்ந்துகொள்ளலாம். சந்தேகமோ விளக்கமோ எதுவாயினும் அவற்றை 'உதவலாம்... வாருங்கள்!’ என்று குறிப்பிட்டு சக்தி விகடனுக்கு அனுப்பவும். உங்களது தெளிவான முகவரி, இ.மெயில் முகவரி மற்றும் தொலைபேசி எண்களையும் குறிப்பிடுவது மிக அவசியம்.

உதவலாம் வாருங்கள் !

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

தில ஹோமம் என்றால் என்ன? அதைச் செய்யும் போது பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் பற்றி எனக்குத் தெரியவில்லை. அறிந்தவர்கள் இந்தப் பகுதி யில் பகிர்ந்துகொண்டால் பயனுள்ளதாக இருக்கும்.

ந.கோகுல்நாத், மொளசி

'ராம நாமம்’ எழுதிய நோட்டுகளை அயோத்திக்குக் கொண்டு சென்று பூஜித்து, சரயு நதியில் கலப்பதாக ஒரு தொலைக்காட்சியில் காண்பித்தார்கள். எனக்கு வயது 70. நான் கடந்த ஐம்பது வருடங்களாக 'ராம நாமம்’ எழுதி வருகிறேன். அந்த நோட்டுகளை அயோத்தி பூஜையில் சமர்ப்பிக்க ஆசைப்படுகிறேன். அது குறித்து விவரம் அறிந்தவர் கள் வழிகாட்டுங்களேன்.

எம்.பிரேமா, சென்னை

'சுகப்பிரம்ம  மகரிஷியின் சகஸ்ரநாமம் மற்றும் ஸ்தோத்திரங்கள்’ எனக்குத் தேவைப்படுகிறது. எவரிடமேனும் இருந்தால் தந்து உதவுங்களேன். அல்லது, இந்த ஸ்தோத்திரங்கள் அடங்கிய புத்தகம் எங்கு கிடைக்கும் என்ற தகவல் கிடைத்தாலும் போதும்; பயனுள்ளதாக இருக்கும்.

ஜ.சத்யநாராயணன், பண்ருட்டி

புலவர் கீரன் எழுதிய 'செல்வம் அளிக்கும் செவ்வேள் முருகன்’, மயிலை சீனி வெங்கடசாமி எழுதிய நூல்கள், பாம்பன் சுவாமிகள் அருளிய பாடல்கள் (உரையுடன்) ஆகியன எனக்குத் தேவை. இந்தப் புத்தகங்கள் கிடைக்கும் இடங்கள் குறித்து விவரம் அறிந்தவர்கள், தகவல் தந்து உதவுங்களேன்.

க.ராஜேந்திரன், மதுரை

ழம்பெரும் இசையமப்பாளரான வி.குமார் பாபா அவர்கள், பாபா பாடல்களைப் புல்லாங்குழல் இசையுடன் பாடி, வெளியிட்டுள்ளார். இந்தப் பாடல் தொகுப்பு சி.டி அல்லது கேசட்டுகள் கிடைக்கும் இடங்கள் பற்றிய விவரம் தந்தால், பெரிதும் மகிழ்வேன்.

சிவ.கனகசபை, தஞ்சாவூர்

வெ.ராதாகிருஷ்ண சாஸ்திரிகள் எழுதிய, லலிதா ஸஹஸ்ர நாமத்தின் தமிழாக்க உரை கொண்ட புத்தகம் எங்கே கிடைக்கும்? விவரம் அறிந்தவர்கள் தகவல் தந்து உதவுங்களேன்.

ஆர்.ராஜகோபாலன், சென்னை

உதவிக்கரம் நீட்டியவர்கள்...

** சக்தி விகடன்  15.9.15 தேதியிட்ட இதழில், 'வீடுகளில் பூஜையின்போது பிடித்துவைக்கும் மஞ்சள் பிள்ளையாரை பூஜைக்குப் பிறகு என்ன செய்வது?’ என கோவை வாசகி மங்களம் கேட்டிருந்தார்.

'பொதுவாக பூஜை நடத்தி வைக்கும் வாத்தி யாரே, பூசிக்கொள்ளச் சொல்லி அந்த மஞ்சள் பிள்ளையாரை உதிர்த்து தருவார். ஆகவே, எந்தச் சலனமும் இன்றி, மஞ்சள் பிள்ளையாரை திருமாங்கல்ய சரடில் பூசிக்கொள்ளலாம்; முகத்துக்கும் பூசிக் குளிக்கலாம்’ என்று சென்னை வாசகி பத்மினிபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

** சக்தி விகடன் 15.9.15 தேதியிட்ட இதழில், பேச்சியம்மன் குறித்தும், அந்த அம்மன் தொடர்பான அவதாரத் திருக்கதைகள் குறித்தும் வள்ளியூர் வாசகர் கே.பாண்டித்துரை கேட்டிருந்தார். இதற்குப் புன்னைநல்லூர் வாசகர் கோ.முருகதாஸ்,

''தமிழகம் முழுமையிலும் பரவலாகக் காணப் படும் எல்லைத் தெய்வங்கள், குலதெய்வங்கள், காவல் தெய்வங்களில் பேச்சி அம்மனையும் காணலாம். இவள் சக்தியின் அம்சம். வேறு எந்த நிலையையும் விரும்பாமல், தன் குலத்தவரின் நலனையே பெரிதும் விரும்பியதால், இடைநிலை யில் இருக்கும் சக்தி அம்சமாகவே திகழ்கிறாள் என்பர்.

உதவலாம் வாருங்கள் !

முக்திப் பேற்றை விரும்பும் தன் குலத்தவர் இவளை வழிபட்டால், முக்திக்கு வழிவிட்டு அருள்புரிவாள். ஞான முக்தி அருளும் கல்வித் தெய்வம் என்றும், பேச்சுத்திறன் அருளும் தேவி என்றும் இவளைப் போற்றுவார்கள். குலதெய்வ வழிபாட்டால் சிறப்பு பெறவும், ஞான குரு வாய்க்கவும், பிறப்பற்ற முக்தி நிலை பெறுவதற்கான ஞான மார்க்கத்தை அடையவும் அருள்புரியும் நாயகி பேச்சியம்மன்!' என்று தெரிவித்துள்ளார்.

** தஞ்சை பெரிய கோயிலை நிர்மாணித்த ராஜராஜ சோழன், காஞ்சியில் உள்ள ஒரு கோயிலை முன்மாதிரியாகக் கொண்டே இதைக் கட்டியதாகத் தகவல் அறிந்ததாகவும், அது எந்தக் கோயில் என்றும் கடந்த 15.9.15 தேதியிட்ட இதழில், மேலூர் வாசகி ஜெயந்தி கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு, வாழப்பாடியைச் சேர்ந்த டாக்டர் சி.பொன்னம்பலம், சென்னை வாசகி அக்‌ஷயா மற்றும் பி.ஆர்.ஹரிஹரன் ஆகியோர் பதில் அனுப்பியுள்ளனர்.

அவர்கள் அளித்த தகவல்: முதலாம் ராஜசிம்மன் என்ற பல்லவ மன்னன், கயிலாசநாதர் ஆலயத்தைக் காஞ்சியில் எழுப்பினான். பிற்காலத்தில் அதன் அழகையும் கலை வண்ணத்தையும் கண்டு பிரமித்த ராஜராஜ சோழன், அக்கோயிலின் கோபுர அமைப்பை முன்மாதிரியாகக் கொண்டு, காலத்தால் அழியாத தஞ்சை பெரிய கோயிலைக் கட்டினான்.

** சக்தி விகடன் 1.9.15 தேதியிட்ட இதழில், ஓவியர் வினு வரைந்த ஜெய அனுமான் வண்ணப்படம் தேவைப்படுவதாக சென்னை வாசகி வசந்தா கேட்டிருந்தார். இது தொடர்பாக கடந்த இதழில், இந்தப் பகுதியில் அனுமனின் வண்ணப்படத்தை யும் பிரசுரித்து இருந்தோம்.

இந்நிலையில், கோவை யிலிருந்து நம்மைத் தொடர்பு கொண்ட பாலசுப்பிரமணியன் எனும் அன்பர், தான் ஓவியர் வினு அவர்களின் உறவினர் என்றும், சக்தி விகடனில் பிரசுரிக்கப்பட்ட படம் வினு அவர்கள் வரைந்த படம் அல்ல என்றும், இதுபோன்ற போலியான படங்கள் பல்வேறு இடங்களில் விற்பனை செய்யப்படுவதாகவும் தெரிவித்ததோடு, ஓவியர் வினு வரைந்த ஜெய அனுமானின் ஒரிஜினல் படத்தையும், கூடவே மஹாபெரியவா ஓவியத்தையும் நமக்கு அனுப்பிவைத்திருந்தார்.

அந்தப் படங்களை இங்கே பிரசுரித்துள்ளோம். இந்த ஜெய அனுமான் வண்ணப் படமும் சம்பந்தப்பட்ட வாசகருக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

வி.ஐ.பி பதில்கள்!

? தினமும் இல்லங்களில் விளக்கு ஏற்றச் சரியான நேரம் எது? நண்பர்கள் பலரும் மாலை 6 மணியே உகந்த நேரம் என்கிறார்கள். இது சரியா?

எம் செல்லையா,  சாத்தூர்

பொதுவாக, தினமும் மாலை 5.15 மணி முதல் வெளிச்சம் குறையத் தொடங்கி, 6 மணிக்குள்

உதவலாம் வாருங்கள் !

இருள் சூழத் தொடங்கிவிடும். கால மாற்றம் நிகழும் அந்தத் தருணங்களில், சில கெட்ட கிருமிகள் சூழ அதிகம் வாய்ப்பு உண்டு. அதனால், அவ்வேளையில் விளக்கேற்றினால், அதிலிருந்து வெளிப்படும் அக்னி ஜுவாலைகள் பரவும் இடமெல்லாம், அந்தக் கிருமிகள் செயலற்றுப்போகும். எனவே, மாலை 5.15 மணி முதல் 6 மணி வரை இடைப்பட்ட காலமே விளக்கு ஏற்ற மிகச் சரியான தருணம். இது, காலை வேளைக்கும் பொருந்தும்.

? என் கனவில் அடிக்கடி பாம்பு வருகிறது. அதற்கான அர்த்தம் என்ன?

கீதா முருகானந்தம், தஞ்சாவூர்

நம்மைத் தேடி பிரச்னைகள் வரப் போகின்றன என்றால், கனவில் பாம்பு வந்து துரத்தும். நம்மைப் பாதித்த பிரச்னைகள் விலகப்போகின்றன என்றால், கனவில் பாம்பு வந்து கடிக்கும். அப்படி இரண்டும் இல்லாமல், கனவில் வரும் பாம்பு வெறுமனே காட்சி தருவதாக இருந்தால், முருகப்பெருமானுக்கான நேர்த்திக்கடன் ஏதோ ஒன்று நிறைவேறாமல் இருக்கிறது என்பது மறைபொருள்.

பி.என்.பரசுராமன்