வாசகர்களே!

கேள்விகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை. அதிலும் ஆன்மிகத்தில் தேடலும் அதுசார்ந்த சந்தேகங்களும் வினாக்களும் மிக அதிகம். அந்த வகையில் ஆலயங்கள், சமய இலக்கியங்கள், சாஸ்திரங்கள் மற்றும் புராண நூல்கள் குறித்த தகவல்கள் தொடர்பாக, உங்களுக்குள் எழும் சந்தேகங்களைகேள்விகளை 'உதவலாம் வாருங்கள்’ பகுதிக்கு எழுதி அனுப்புங்கள். தகுதியானவை சக்தி விகடனில் பிரசுரமாகும். இந்தப் பகுதியின் சிறப்பு... வாசகர்களது வினாக்களுக்கு வாசகர்களிடம் இருந்தே பதில் பெறப்போகிறோம். ஆமாம்! குறிப்பிட்ட வாசகர்கள் பெற விரும்பும் தகவல்களை... அதுபற்றி துல்லியமாகத் தெரிந்திருக்கும் வாசகர்கள், இந்தப் பகுதியில் பகிர்ந்துகொள்ளலாம். சந்தேகமோ விளக்கமோ எதுவாயினும் அவற்றை 'உதவலாம்... வாருங்கள்!’ என்று குறிப்பிட்டு சக்தி விகடனுக்கு அனுப்பவும். உங்களது தெளிவான முகவரி, இ.மெயில் முகவரி மற்றும் தொலைபேசி எண்களையும் குறிப்பிடுவது மிக அவசியம்.

ஸ்ரீராகவேந்திர ஸ்வாமிகளின் பரமபக்தரான அப்பண்ணாச்சாரியார் அருளிய நூல் ஸ்ரீராகவேந்திர ஸ்தோத்திர மாலா.ஸ்ரீராகவேந்திரரே முடித்துக்கொடுத்த அற்புத குரு ஸ்தோத்திரம் என்பார்கள். இந்த ஸ்தோத்திரத்தை ஸ்ரீபாளே கட்டடே மாதவாச்சார்யா என்பவர் பாடி வெளியிட்டுள்ளார். அந்த ஒலி நாடா அல்லது சி.டி. எங்கு கிடைக்கும் என்ற விவரம் அறிந்த வாசகர்கள் பகிர்ந்துகொண்டால் உதவியாக இருக்கும்.

- இரா.மாணிக்கவாசவி, நாமக்கல்

1935 ஆண்டு முதல் 2013 வரையிலுமான திருக்கணித பஞ்சாங்கம் (வாசன் வெளியீடு) எனக்குத் தேவைப்படுகிறது. வாசகர்களில் யாரேனும் அவற்றைச் சேகரித்துவைத்திருந்தால், தந்து உதவுங்களேன்.

- டி.ரவி, பாண்டிச்சேரி

கணபதி நிவேதப் பிரியர், ஹோமப் பிரியர் (ஹோமத்திலும் பல ஆகாரப் பொருட்கள், பொரித்த கொழுக்கட்டை முதலானவற்றைச் சேர்ப்பது உண்டு) என்று மட்டுமே அறிந்திருந்த நான், 'கணபதி சதுரவர்த்தி தர்ப்பணம்’ என்பதை சக்தி விகடன் மூலமே அறிந்தேன். 'கணபதி தர்ப்பணப் பிரியர்’ என்பதும் நான் அறிந்திராத தகவலே. இதுகுறித்த விளக்கங்கள் மற்றும் மந்திரங்கள் அடங்கிய புத்தகம் ஏதேனும் உண்டா, அவை எங்கு கிடைக்கும் எனும் விவரங்களை அறிந்தவர்கள் பகிர்ந்துகொள்ளுங்களேன்.

- ஆர்.ரகுபதி, ஐதராபாத்

தக்ஷ யாகத்தை அழித்த 'அகோர வீரபத்திரரின்’ ஜன்ம நட்சத்திரம் எது, அவரை எந்த நட்சத்திரத்தில் வழிபடுவது சிறப்பைத் தரும்? விவரம் அறிந்த ஆன்மிக அன்பர்கள் பகிர்ந்துகொள்ளுங்களேன்.

அதேபோல், சப்த ரிஷிகளின் ஜன்ம நட்சத்திரங்கள் என்னென்ன, அவர்களுடைய அதிஷ்டானங்கள் எங்குள்ளன என்பது குறித்த விவரங்களும் தேவை.

- ஜ.சத்யநாராயணன், பண்ருட்டி

வி.ஐ.பி.பதில்கள்

? வீட்டு வேலைகளைச் செய்யும்போதே, மனதில் ஸ்லோகங்களைச் சொல்லலாமா?

எஸ்.சிவராமன், சென்னை

'இறைவனுடைய திருப்பெயரைப் பேசாத நாளெல்லாம் பிறவாத நாட்கள்’ என்கிறார் அப்பர் சுவாமிகள். தனது சிந்தனையில் இறைவனைப் பற்றிய நினைப்பு எந்நேரமும் இருக்கவேண்டும் என்கிறார் அருணகிரிநாதர்.

இறைவழிபாட்டுக்காக தனியாக நேரம் ஒதுக்க வேண்டிய அவசியம் இந்து மதத்தில் இல்லை. சமைக்கும்போதும் பெண்கள் இறை சிந்தனையோடு செய்தால், அந்த உணவு ருசியாகவே இருக்கும். குளிக்கும்போதும் இறை சிந்தனை வந்தால், அவன் நாமம் பாடலாம். இறை சிந்தனைக்கென்று நேரமும், காலமும் ஒருபோதும் கிடையாது என்பதே உண்மை.

? நாம் அடிக்கடி விரதம் அனுஷ்டிப்பதால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன?

எம்.செல்லையா, சாத்தூர்

மன ஒருமைப்பாடு, உடல் கட்டுப்பாடு ஆகிய இரண்டையும் கொடுக்கக்கூடிய வல்லமை விரதத்துக்கு உண்டு. மனம் வேறு, உடல் வேறு. ஓரு விஷயத்தைப் பற்றி மனது நினைக்கும்போது, அதற்கு உடம்பு ஒத்துழைக்க வேண்டும். கடவுளை நினைத்து விரதம் இருக்க மனம் ஆசைப்படும்போது, அதற்கு உடல் ஒத்துழைக்க மறுத்தால், அது பயனற்றதாகிவிடும்.

கடவுளுக்காக மனிதன் செய்யும் நேர்த்திக்கடனாகவே 'விரதம்’ என்பது பார்க்கப்படுகிறது. விரதம் இருப்பதால், நம்முடைய ஆசைகள் அடங்கி மனக் கட்டுப்பாடு மேலோங்கும்போது, நமது குறிக்கோளை எளிதில் அடைந்துவிடுகிறோம்.

அதேபோல், இறைவனின் திருவருளைப் பெற, 'விரதத்தையே’ ஆயுதமாக நாம் பயன்படுத்திக்கொள்கிறோம். குறிப்பாக, சஷ்டியில் முருகனுக்கு விரதம் இருந்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது காலம் காலமாக இருந்து வரும் நம்பிக்கையாகும். இப்படி ஒவ்வொரு தெய்வத்துக்கும் பலவிதமான விரதமுறைகளும், அவற்றுக்கான குறிக்கோளும் உண்டு. அந்த குறிக்கோளை நோக்கிய நமது பயண முறையே, விரத வழிபாடுகள்.

உதவிக்கரம் நீட்டியவர்கள்...

* சக்தி விகடன் 13.10.15 தேதியிட்ட இதழில், ஸ்ரீபாம்பன் சுவாமிகள் அருளிய 'பஞ்சாமிர்த வண்ணம்’ பாடல்கள் தேவைப்படுவதாக காஞ்சிபுரம் வாசகர் ஆர்.குப்புசாமிராவ் கேட்டிருந்தார்.

குறிப்பிட்ட பாடல்கள் அடங்கிய புத்தகத்தை சென்னை முகப்பேர் வாசகர் லக்ஷ்மிநாரயண குப்தா, தாம்பரம் ஏ.ராஜசேகரன், பல்லாவரம் கே.ஜீவானந்தம், குரோம்பேட்டை வாசகி பத்மினி பாஸ்கர், சேலம் வாசகி தேவகி தேவராஜன், திருச்சி வாசகி சரோஜா சுதர்சன், உறையூர் வாசகர் டாக்டர்.பெரியகருப்பன் ஆகியோர் அனுப்பி வைத்திருந்தனர். அந்தப் புத்தகம் குறிப்பிட்ட வாசகருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

* 15.9.15 தேதியிட்ட சக்தி விகடன் இதழில், வீடுகளில் பூஜைக்குப் பிடித்து வைக்கும் மஞ்சள் பிள்ளையாரை என்ன செய்யலாம் என்று கோவை வாசகி வி.மங்களம் கேட்டிருந்தார். இதற்கு, சென்ற இதழிலேயே வாசகி ஒருவர் பதிலளித்திருந்தார்.

இதே கேள்விக்கு சென்னை வாசகி மல்லிகா குருவும் பதில் அனுப்பியிருக்கிறார். அவர் அளித்துள்ள விவரம்:

பூஜை செய்த சுமங்கலியும், அந்த குடுபத்தினரும், மஞ்சள் விநாயகரை முகம், கரங்கள் மற்றும் திருமாங்கல்யத்தில் பூசிக் குளிப்பது சிறப்பு. மறுநாளே முழு பிள்ளையாரையும் தேய்த்துக் கொள்ளவேண்டும் என்பதில்லை. தீரும் வரை, தினசரி தேய்த்துக் கொள்ளலாம். தெய்வ மந்திரங்களால் பூஜிக்கப்பட்டது என்பதால், இம்மஞ்சள் நம் மாங்கல்யத்துக்கும், உடலுக்கும் வலு சேர்க்கும்.

சில நேரங்களில், கவனக்குறைவாக நிர்மால்ய மலர்களுடன் பிள்ளையாரையும் சேர்த்து அப்புறப் படுத்திவிடுகின்றனர். இது மிகவும் தவறு. அதே போல், மஞ்சள் பிள்ளையாரை கால்களில் தேய்த்துக் கொள்வதும் தவறு.

* சக்தி விகடன் 29.9.15 தேதியிட்ட இதழில், சோழிப் பிரச்னம் பார்ப்பதற்கு உரிய புத்தகம் குறித்து சேலம் வாசகர் கே.ராதா கிருஷ்ணன் கேட்டிருந்தார்.

'அமிர்தலிங்கம் என்பவர் எழுதியுள்ள சோழிப்பிரச்னம் பற்றிய புத்தகம், ஆரோமிரா பிரசுரம், 16ஏரப்ப கவுண்டர் சந்து, நடுவீதி, தம்மம்பட்டி, சேலம்636113 (போன்: 94868 98452)’ என்ற முகவரியில் கிடைக்கும் என்று தெரிவித்திருக்கிறார் பாண்டிச்சேரி வாசகர் டி.ரவி.